ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...

உலகில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நிகழும் நாடுகளுள் ஒன்று இந்தியா என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் அதிக விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன. சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம், சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது என்பதை கூறி ஆக வேண்டும்.

குறிப்பாக, அதிவேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஓவர் டேக் செய்வது பெரும்பாலான நேரங்களில் விபத்தில் சென்று முடிகிறது. அதிலிலும் நெடுஞ்சாலையில் ஒரு வாகனத்தை ஓவர்டேக் செய்யும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டும். ஏன் என்பதற்கு உதாரணமாக ஒரு விபத்து சண்டிகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நடந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், யுடியூப் வி-லாகர் ஒருவர் மொபைல் போனில் தனது டிரைவிங்கை காட்சிப்படுத்தி கொண்டு இருந்த போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

அதன்பின் அந்த யுடியூப் வி-லாகர் பதிவிட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். வீடியோவில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் ஒன்று, தனது லேன்-ஐ மாற்றி முன்னால் சென்றி கொண்டிருந்த லாரியை முந்த முயன்றுள்ளது. ஆனால் மாறிய அந்த லேன்-இல் ஏற்கனவே சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி உடன் மோதலுக்கு உள்ளாகி உள்ளது அந்த கிராண்ட் ஐ10 கார். இந்த விபத்தில் முழு தவறும் அந்த கார் ஓட்டியின் மீதே உள்ளது.

ஏனெனில் அந்த இரு லாரிகளும் தங்களது பாதையில் ஒழுக்கமாக சென்று கொண்டிருக்கின்றன. அருகருகே இரு வெவ்வேறு லைன்களில் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த அந்த லாரிக்களுக்கு இடையில் விபத்திற்குள்ளான அந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் சென்று கொண்டிருந்துள்ளது. லாரிகளை காட்டிலும் வேகமாக செல்ல நினைத்த அந்த கார் ஓட்டி லாரிகளுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளியில் ஒரு லாரியை முந்த முயன்றுள்ளார்.

ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள அளவில் சிறிய கார்களுள் ஒன்று, கிராண்ட் ஐ10 ஆகும். இருப்பினும் அதிவேகத்தில் இரு லாரிகளுக்கு இடையே முந்துவது செய்யக்கூடாத விஷயமாகும். இவ்வாறு இரு லாரிகளிடையே சிக்கி கொண்டால், அவற்றிற்கு இடையே வேகமாக முந்தி அங்கிருந்து மீண்டு வருவது ஆபத்தான விஷயமாகும். அப்படியென்றால் எவ்வாறு மீண்டு வருவது என கேட்டால், பொறுமை... ஆம் பொறுமையால் தான் அத்தகைய சூழலை கையாள வேண்டும்.

மேற்கண்ட சம்பவத்தில் அந்த கிராண்ட் ஐ10 கார் ஓட்டுனர் சற்று பொறுமையாக யோசித்து, காரின் வேகத்தை குறைத்திருந்தால் அந்த இரு லாரிகளும் சற்று முன்னோக்கி சென்றிருக்கும். பின்னர் காலியாக உள்ள 3வது லேனில் வேகமாக சென்றிருக்கலாம். அல்லது வேகத்தை குறைக்க கூட தேவையில்லை, அதே வேகத்தில் தொடர்ந்து சென்றிருந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த லாரிகள் வேகமெடுத்து சென்றிருக்கும். அதன்பின் லேன் மாற்றி சென்றிருக்கலாம்.

ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!!

ஆனால் கார் ஓட்டுனர் இவ்வாறு ஆபத்தான வழியை தேர்வு செய்ததினால் தான் விபத்து நடந்துள்ளது. லாரி உடன் மோதலுக்கு உண்டான கார் விபத்தின்போது சில வினாடிகளிலேயே முழுவதுமாக சாலைக்கு குறுக்காக திரும்பியுள்ளது. லாரி நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கி செல்ல ஒரு கட்டத்திற்கு மேல் கார் முழுவதுமாக சாலைக்கு எதிர்பக்கமாக திரும்பியுள்ளது. அப்போதும் கூட லாரியை நிறுத்தாத அந்த லாரி ஓட்டுனர் தொடர்ந்து லாரியை இயக்க, முழுவதுமாக எதிர்திசைக்கு திரும்பிய காரின் முன்பக்கம் லாரியின் பின்பகுதியுடன் மோதியுள்ளது.

இதில் அருகில் இருந்த டிவைடரின் மீது ரிவர்ஸில் ஏறிய கார் ஒரு கட்டத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. நல்ல வேளையாக நெடுஞ்சாலையின் 3வது லேன்-இல் எந்த வாகனமும் வரவில்லை. இல்லையேல், நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். லாரி ஓட்டுனர் ஒரு இடத்தில் கூட லாரியை நிறுத்தியதுபோல் தெரியவில்லை. இதில் இருந்து அவருக்கு கார் ஒன்று லாரிக்கு முன்னால் வந்ததே தெரியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஒரு சில கனரக வாகனங்களில் திடீரென ஓவர்டேக் செய்யும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை. அதிலிலும் கிராண்ட் ஐ10 அளவில் சிறிய கார் வேறு.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Accident of hyundai grand i10 with truck while overtaking on chandigarh highway
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X