விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ25,000 கிடைக்குமா? அரசு போட்ட அற்புத திட்டம்!
சாலையில் விபத்து நடந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற பலர் யோசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவரை காப்பாற்றும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்காக நாம் மீது வழக்கு பாயுமோ அல்லது தேவையில்லாமல் கோர்ட் கேஸ் என அலைய வேண்டுமோ என்ற எண்ணத்தில் உதவ முன்வருவதில்லை. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதும், அதிக விபத்து நடப்பதற்கு காணமாக இருக்கிறது. அரசு விபத்துக்களின் எண்ணிக்கையையும், விபத்துக்களில் நடக்கும் உயிர்பலி எண்ணிக்கையையும் குறைக்க பல நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.

விபத்து நடந்த பிறகு போதிய நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தான் அதிகம். அருகில் மக்கள் இருந்தும் பலர் உதவ முன்வராதததால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் தற்போது விபத்தில் உதவும் நபர்களுக்கு சன்மானம் வழங்க புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து அவர்களது உயிரை காப்பாற்றினால் இந்த சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பிறகு அடுத்த ஒரு மணி நேரம் தான் கோல்டன் ஹவர் என அழைக்கப்படுகிறது. அந்த 1 மணி நேரத்திற்குள் சம்பவ இடத்தில் இருப்பவர் உதவி செய்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கூட்டி சென்றால் அவர் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் இப்படியாக உதவி செய்யும் நபர்களுக்கு "ரா வீர்" என்ற சான்றும், ரூ25,000 சன்மானமும் வழங்கப்படும். அம்மாநிலத்தில் உள்ள "நல்ல குடிமகன்" திட்டத்தில் இந்த பரிசு தொகை வழங்கப்படுகிறது.

இநத சன்மானம் வழங்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டாலும் தற்போது ஒவ்வொரு மாநில அரசாக இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகன சட்டத்தில் "நல்ல குடிமகன்" சட்டம் அமலில் உளு்ளது. அதன்படி அவசர காலத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மரத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபர் நல்ல குடிமகனமாக கருத்தப்படுவார்கள்.
ஒருவேளை அவருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவி அளிக்க முயன்றாலும் அவரும் நல்ல குடிமகனாக கருதப்படுவார் என சட்டம் சொல்லுகிறது. இதில் ஒரு சம்பவத்திற்கு ரூ25 ஆயிரம் எனநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மீட்பில் ஒரு நபருக்கும் அதிகமான நபர்கள் ஈடுபட்டால் இந்த சன்மானம் பிரித்து வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர்களை கண்டறிய மருத்துவமனைகள் விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்கு வரும் போது அவரை மருத்துவ குழு சிகிச்சை அளிக்கும் நேரத்தில் மற்றவர்கள் அவரை அழைத்து வந்தவர்களிடம் பேசி நடந்ததை புரிந்து கொண்டு அவரது பெயர், தொடர்ப்பு எண் ஆகியவற்றை பெற்று அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக விபத்தில் மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் குறித்த விரிவான விளக்கத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். மாவட்டம் நிர்வாகம் இது குறித்து கமிட்டியை உரவாக்கியுள்ளது. அவர்கள் இதை ஆய்வு செய்து விசாரணை நடத்தி உண்மையாக உதவிய நபர்களுக்கு சான்மானத்தையும் சான்றையும் வழங்குவார்கள். மாவட்ட கலெக்டர் தான் இதற்கு பொறுப்பு அதிகாரியாக இருப்பார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விபத்துக்களின் ஏற்படும் மரணங்கள் அதிக அளவில் இருக்கிறது. அதை குறைக்க இப்படியான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நிச்சயம் இந்த திட்டம் பலரை உயிரை காப்பாற்றும். மேலும் உதவி செய்பவர்களுக்கு இருக்கும் தயக்கத்தை நீக்கி உடனடியாக உதவி செய்ய வழி வகுக்கும்.


Click it and Unblock the Notifications









