Wrong Side-ல் வந்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி! வீடியோ பாத்ததும் ஒரு நிமிஷம் நெஞ்சே நின்றுச்சு! ரொம்ப கொடூரம்
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) யாரும் பெரிதாக மதிப்பதே கிடையாது. தங்கள் இஷ்டத்திற்கு வாகனங்களை ஓட்டுவதைதான் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது மிகவும் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும் (Road Accidents), உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.
ஒரு சில சாலை விபத்துக்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகின்றன. கார்களின் முன் பகுதியில் பொருத்தப்படும் டேஷ்போர்டு கேமராக்களிலும் கூட, சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் ஒரு சில வீடியோக்கள் வைரல் ஆவது வாடிக்கையாக உள்ளது. இந்த வகையில் தற்போது மிகவும் வேகமாக பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில் (Viral Video) பதிவாகியுள்ள காட்சிகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளன.

நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு நபர் கார் ஓட்டி கொண்டு வருவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த காரின் டேஷ்போர்டு கேமராவில்தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அப்போது அந்த காருக்கு எதிர் திசையில், அதாவது ராங் சைடில் (Wrong Side), 2 டூவீலர்கள் வருகின்றன.
அந்த டூவீலர்களை ஓட்டியவர்களுக்கு, ராங் சைடில் பயணம் செய்கிறோம் என்ற அச்சம் கொஞ்சம் கூட இருந்ததை போல் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் வேகத்தை குறைக்கவும் இல்லை. சரியான திசையில் வந்த காருக்கு வழிவிடவும் இல்லை. நேராக காரை நோக்கியே டூவீலரை ஓட்டி வந்தனர்.
எனவே இதில் ஒரு டூவீலர், காரின் மீது மோதியது. அந்த டூவீலரின் பின் பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. காரின் மீது மோதியவுடன், அந்த டூவீலரை ஓட்டியவரும், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் டூவீலரை ஓட்டிய நபர் ஹெல்மெட் (Helmet) அணிந்திருந்தார்.
ஆனால் பின்னால் அமர்ந்திருந்த பெண், எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களையும் அணியவில்லை. எனினும் விபத்திற்கு பின், அந்த பெண் உடனடியாக எழுந்து விட்டார். பின்னர் கீழே விழுந்த கிடந்த நபருக்கு (டூவீலரை ஓட்டியவர்) உடனடியாக அவர் உதவி செய்கிறார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
ஏனெனில் விபத்தில் சிக்கிய நபர் மீண்டும் எழுந்து டூவீலரை தள்ளி கொண்டு செல்வது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டூவீலர் ராங் சைடில் வந்ததுதான் இந்த விபத்திற்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.
நேரத்தையும், எரிபொருளையும் மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சிலர், ராங் சைடில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து விதிமுறைப்படி சுற்றி வருவதை அவர்கள் விரும்புவதில்லை. இது மிகவும் அபாயகரமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். ராங் சைடில் பயணம் செய்வதால் நிகழும் விபத்துக்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் வாகனம் ஓட்டும்போது, நேரம் ஆனாலும் பரவாயில்லை என விதிமுறைப்படி சாலையில் சுற்றி வாருங்கள். ராங் சைடில் பயணித்தால் சில வினாடிகளோ அல்லது சில நிமிடங்களோ மட்டும்தான் மிச்சமாகும். கூடவே கொஞ்சம் எரிபொருளையும் சேமிக்கலாம்தான். ஆனால் விபத்து நிகழ்ந்தால், அதன் பாதிப்பு மிகப்பெரியதாக இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.


Click it and Unblock the Notifications








