இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது... விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?

விமானங்களில் உள்ள கண்ணாடிகளை ஏன் உடைக்க முடியாது. அதில் என்ன இருக்கிறது? அதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன?முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

மனிதர்கள் போக்குவரத்திற்காகக் கண்டுபிடித்த விஷயங்களில் இன்று வரை மிக அதிசயமாகப் பார்க்கப்படுவது விமானம் தான் பூமிக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாமல் ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு வேறு ஒரு இடத்திற்குச் சென்று சேர முடியும் என்றால் அது விமானத்தால் மட்டுமே முடியும்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்ட 120 வருடங்கள் கடந்துவிட்டாலும் இன்றும் அந்த விமானத்தை மக்கள் எல்லோரும் அதிசயமாகத் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விமானத்தில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கின்றனர்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இந்த விமானமே அதிசயம் என்றால் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மேலும் ஒரு அதிசயம் தான். பூமியிலிருந்து பலஅடி உயரத்திற்கு மேல் விமானம் பறக்கும் போது அங்குத் தட்ப வெட்ப நிலை, காற்றின் அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். இப்படியாகப் பல விஷயங்களை விமானம் பறக்கும் போது சமாளிக்க வேண்டும்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இதற்காக விமானம் கிளம்பும் போதே விமானம் பிரஷரைஸ் செய்யப்படும். இதனால் விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் விமானத்தின் உள்ளே சாதாரணமாகத் தான் இருக்கும் மக்கள் சிரமம் இல்லாமல் பயணிக்க முடியும்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இப்படியாக விமானம் இருக்க விமானத்தில் உள்ளே இருக்கும் விமானிகள் விமானத்திற்கு வெளியே நடப்பதைப் பார்க்கவும், பயணிகள் வெளியே எட்டிப் பார்க்கவும் விமானத்தில் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக விமானங்கள் உயரமாகப் பறக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு கண்ணாடி உடைந்து சிதறி விட்டால் விமானத்திற்குள் என்ன நடக்கும்? பலருக்கு இந்த கேள்விகள் இருந்திருக்கலாம்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

ஆனால் விமானத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளுக்கு ஒருவித்தியாசமான குணம் ஒன்று இருக்கிறது. இந்த கண்ணாடிகள் இடியே விழுந்தாலும் உடையாது. ஏன் என்றால் இவை கண்ணாடிகளே இல்லை. கண்ணாடி என்றால் தானே உடையும். விமானத்தில் பொருத்தப்படுவது அக்ரலிக் கிளாஸ் எனப்படும் ஷீட்கள் தான் பொருத்தப்படுகிறது.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

அறிவியல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் விமானத்தில் பயன்படுத்தப்படும் பாலி கார்பனேட் ஷீட்கள் இது பிளாஸ்டிக் போல இருக்கும். இதை உடைக்க முடியாது. இதன்மீது பெரிய பாறையைத் தூக்கிப் போட்டாலும் உடையாமல் சேதமடைந்து அதன் வடிவம் மாறாமல் இருக்கும்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இது பிளாஸ்டிக்காக இருந்தாலும் கண்ணாடி எப்படி டிரான்ஸ்பரன்டாக இருக்குமோ அதே போல இந்த பாலி கார்பனேட்டும் ஒளியைத் தடுக்காமல் அப்படியே மறுபுறம் அனுப்பி விடும். இது மட்டுமல்ல விமானத்தில் இது 3 லேயர்களாக கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம், உட்புறம், மற்றும் நடுவில் என 3 அடுக்குகள் இருக்கும்.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இது மட்டுமல்ல பைலட்கேபின்களில் உள்ள கண்ணாடிகளில் ஹைட்ரோ ஃபோபிக் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது இந்த ஹைட்ரோஃபோபிக் கோட்டிங் கொடுப்பதால் தூசு, எண்ணெய் மற்றும் தண்ணீர் படியாமல் இருக்கும். விமானம் பறக்கும் போது வெப்ப நிலை மாற்றம், குளிர் மழை என எது வந்தாலும் கண்ணாடியில் அது மறைக்காமல் இருக்க இது உதவுகிறது.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

பயணிகளுக்கான ஜன்னலில் பொருத்தப்படும் கண்ணாடிகளும் அக்ரலிக் கிளாஸ்கள் தான். இவையும் 3 அடுக்குகளாக இருக்கும் எதாவது ஒன்று உடைந்தாலும் கூட கேபின் பிரஷர் குறையாமல் இருக்க அது உதவும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடியே விழுந்தாலும் கண்ணாடிகள் உடையாது . . . விமானங்களில் இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

இந்த அக்ரலிக் கிளாஸ்களிலும் ஹைட்ரோஃபோபிக் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இது இடி, மின்னல் என எது விழுந்தாலும் ஒன்றும் செய்யாது ஏன் என்றால் இது கண்ணாடி இல்லையே. இப்படியாக உங்களுக்கு விமானம் குறித்த சுவாரஸ்யமான தகவல் இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Friday, June 17, 2022, 19:28 [IST]
English summary
Acrylic Glass used in Flight Windows know full Details
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+