1.5 கோடி ரூபாய் காரில் கமுக்கமாக வந்தது இவ்வளவு பெரிய நடிகரா? சாலையில் மிதக்கும் கப்பல் போல இருக்கு...

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் கணவர் தான் அபிஷேக் பச்சன் ஆவார். இதனை விட அவரது பெரிய அடையாளம் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஆவார். இத்தகைய பொறுப்புகளை சுமந்துவரும் இவர், சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல் எனப்படும் ரூ.1.5 கோடி மதிப்பிலான டொயோட்டா காரில் காட்சி தந்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பாலிவுட் சினிமா பிரபலங்கள் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அதுவும், அபிஷேக் பச்சன் போன்ற முன்னணி நடிகராக இருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில், நடிகர் அபிஷேக் பச்சன் வாங்கியிருப்பது விலையுயர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) என்கிற லக்சரி எம்பிவி கார் ஆகும்.

abhishek bachchan drives toyota vellfire

இந்தியாவில் இந்த லக்சரி டொயோட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.5 கோடி என்கிற அளவில் உள்ளது. இத்தகைய காரில் நடிகர் அபிஷேக் பச்சன் செல்லும் படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களை வைத்து பார்க்கும்போது, இது டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஆகும். அதாவது, இது இந்தியாவில் கடைசியாக அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெல்ஃபையர் கார் ஆகும்.

இதனை வெளிக்காட்டும் வகையில் காரின் முன் கிரில் பகுதி அளவில் நன்கு பெரியதாகவும், ஹெட்லேம்ப்கள் மெல்லியதான தோற்றத்திலும் உள்ளதை காணலாம். நடிகர் அபிஷேக் பச்சன் கிரே நிறத்தில் வெல்ஃபையர் காரை வாங்கியுள்ளார். வெல்ஃபையர் காரின் நீளம் 4,995மிமீ, அகலம் 1,850மிமீ மற்றும் உயரம் 1,950மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 3,000மிமீ ஆகும்.

abhishek bachchan drives toyota vellfire

மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. அத்துடன், காரை சுற்றிலும் க்ரோம் கார்னிஷ்கள் வழங்கப்பட்டுள்ளன. வெல்ஃபையர் காரின் சிறப்பம்சங்களுள் அளவில் பெரியதான, அகலமான கண்ணாடிகள் ஒன்றாகும். வெல்ஃபையரில் 19 இன்ச்சில் ட்யூயல்-டோனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. முன்பு விற்பனையில் இருந்த வெல்ஃபையர் உடன் ஒப்பிடுகையில் புதிய வெல்ஃபையர் கார் எல்இடி டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது.

மேலும், எல்இடி டெயில்லைட்கள் எல்இடி பார் மூலமாக இணைக்கப்பட்டு உள்ளன. காரின் பின்பக்கத்தில் மேற்கூரையில் வழங்கப்படும் ஸ்பாய்லருக்கு அடியில் வைபர்கள் நேர்த்தியாக மறைத்து வழங்கப்படுகின்றன. அதேபோல், காரின் பின்பக்க பூட் பகுதியை மூடி, திறப்பதற்கான பொத்தான்கள் டெயில் லேம்ப்களுக்கு அடியில் மறைவாக வழங்கப்படுகிறது.

வெல்ஃபையர் காருக்கு உள்ளே ஃபுல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ADAS வசதிகள், 360-டிகிரி கேமரா, வெண்டிலேட்டட் & ஹீட்டட் இருக்கைகள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. 2வது மற்றும் 3வது வரிசை ஜன்னல் கண்ணாடிகளுக்கு எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய திரைகள் வழங்கப்படுகின்றன.

வெல்ஃபையரில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை ஸ்ட்ராங் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் டொயோட்டா நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 193 பிஎஸ் மற்றும் 240 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் வெல்ஃபையர் கார் ஹை மற்றும் விஐபி என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.1.5 கோடி என்பது மிடில்-கிளாஸ் மக்களுக்கு தான் அதிகமான விலையாகும். மற்றப்படி, முன்னணி பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் போன்றோருக்கு எல்லாம் பெரிய மேட்டரே கிடையாது. இருப்பினும், புதியதாக வாங்கிய காரை அபிஷேக் பச்சன் அவர்களே ஓட்டியது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், பொதுவாக எவ்வளவு விலைமிக்க காராக இருப்பினும் அதனை நடிகர்கள் ஓட்ட விரும்ப மாட்டார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 21:04 [IST]
English summary
Actor abhishek bachchan drives toyota vellfire luxury car check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+