Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை உயர்ந்த காரை பொது சாலையில் ஓட்டி வந்த பிரபல நடிகர்... முதல் முறையாக கேமரா கண்களில் சிக்கினார்
பிரபல நடிகர் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரை, பொது சாலையில் ஓட்டி வந்துள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் பலர் மிகவும் விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில், அஜய் தேவ்கனும் ஒருவர். ஏராளமான சொகுசு கார்களை அவர் வைத்துள்ளார். இதில், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) காரும் ஒன்று. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும்.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்த காரை அஜய் தேவ்கன் வாங்கினார். இந்த சூழலில், தனது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை மும்பை சாலைகளில் அஜய் தேவ்கன் தற்போது ஓட்டி வந்துள்ளார். இந்த காரை அஜய் தேவ்கன் பொது வெளியில் ஓட்டி வந்தது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். இதற்கு முன் இந்த காரை அவர் ஓட்டுவதை நாம் பார்த்ததில்லை.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின், எக்ஸ்டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட் (xDrive40i M Sport) பெட்ரோல் வேரியண்ட்டை அஜய் தேவ்கன் வாங்கியுள்ளார். இதன் எக்ஸ் ஷோரூம் விலையே, 1.07 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில், 3.0 லிட்டர், இன்-லைன் 6-சிலிண்டர், ட்வின்-டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின, எக்ஸ்டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட், 6 இருக்கைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் உள்ளே தலா 12.3 இன்ச் அளவுகளில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலும், தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஹார்மன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும், இந்த காரில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இன்னும் பல்வேறு வசதிகளையும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 பெற்றுள்ளது.

இதில், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங், 4-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், பின் பகுதியில் தொடுதிரைகள் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. பிஎம்டபிள்யூ எக்ஸ்7 தவிர இன்னும் பல்வேறு சொகுசு கார்களை அஜய் தேவ்கன் வைத்துள்ளார். இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மிகவும் முக்கியமானது.

இதுவும் எஸ்யூவி ரக கார்தான். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை, அஜய் தேவ்கன் கடந்த 2019ம் ஆண்டு வாங்கினார். இதுதவிர முந்தைய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 730எல்டி, மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் ஆகிய கார்களையும் அஜய் தேவ்கன் வைத்துள்ளார். மேலும் வால்வோ எக்ஸ்சி90 கார் ஒன்றும் அஜய் தேவ்கனிடம் உள்ளது.

இதில், ஒரு சில கார்களில் திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வருவதையும், பொது வெளியில் அவ்வப்போது ஓட்டி வருவதையும் அஜய் தேவ்கன் வழக்கமாக வைத்துள்ளார். இந்த வகையில், தனது வீட்டின் புது வரவான பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை மும்பை சாலைகளில் தற்போது ஓட்டி வந்தபோதுதான் அவர் கேமரா கண்களில் சிக்கியுள்ளார்.