துணிவு இருந்தா தான் இப்படியெல்லாம் பண்ண முடியும்.. தாய்லாந்தில் அஜித் செய்த தெறிக்க விடும் சம்பவம்
நடிகர் அஜித் தாய்லாந்தில் பைக் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் அஜித், இவர் திரைப்படம் வெளியாகும் நாள் தமிழ் நாட்டிற்கே தீபாவளி தான். இவர் ஏற்கனவே பைக் மற்றும் கார் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவர் என நாம் எல்லோருக்கும் தெரியும். ஒரு காலத்தில் பைக், கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இவருக்கு உள்ள பைக், கார் மீதான பிரியம் இன்றும் தொடர்கிறது.

இவர் கொரோனாவிற்கு பிறகுத் தன் திரைப்படத்தின் சூட்டிங்கிற்காக எங்குச் சென்றாலும் அங்கு பைக் ரைடிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். வலிமை திரைப்படம் ஷூட்டிங் நடந்த போது இவர் ரஷ்யாவிற்குச் சென்றிருந்தார். அங்கும் இவர் தனது பைக்கில் சென்று ரஷ்யாவின் பல பகுதிகளை பைக்கிலேயே சுற்றி வந்தார். அதன் பின் லண்டன் சென்று அங்கும் பல பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார்.

கடந்த மாதம் கூட இவர் இந்தியாவிலிருந்த போது இந்தியாவின் பல பகுதிகளில் இவர் பைக்கில் சுற்றி வந்தார். இவர் பைக்கில் சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படியாக இவர் இந்தியாவில் சுற்றிய போது இவரது ரசிகர் ஒருவரின் பைக்கிற்கு இவரே பஞ்சர் போட்ட சம்பவத்தை அந்த ரசிகர் பகிர்ந்திருந்த சம்பவம் வைரலாக பரவியது.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்த திரைப்பட குழுவினர் தாய்லாந்து சென்றனர். அங்கு வைத்து இந்த படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இத்துடன் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பேக்கப் செய்யப்பட்டது. தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரோடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து சென்ற அஜித் சூட்டிங் முடிந்ததும் இந்தியாவிற்குத் திரும்பி வராமல் தாய்லாந்திலேயே பைக் ரைடிங் செய்யத் துவங்கியுள்ளார். இவர் தாய்லாந்தில் பைக் ரைடிங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் பிஎம்டபிள்யூ ஆர்1250 என்ட்யூரோ பைக்கை ஓட்டுகிறார்.

இந்த பைக் 1254 சிசி ஏர்-கூல்டு, ட்விட் சிலிண்டர், DOHC, பாக்ஸர் இன்ஜின் கொண்டது. இந்த இன்ஜின் 136 பிஎஸ் பவரை 7750 ஆர்பிஎம்மிலும், 143 என்எம் டார்க்கை 6250 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் சிறப்பம்சங்களாக ரைடிங் மோட்கள், பிஎம்டபிள்யூ ஸ்விஃப்ட் கேம், ஆட்டோமெட்டிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், பவர் சாக்கெட், டயர் பிரஷர் கண்ட்ரோல் மானிட்டரிங் சிஸ்டம், கீலெஸ் ரைடு, டே டைம் ரைடிங் லைட், கியர் ஸ்விஃப்ட் அசிஸ்ட் ப்ரோ, எல்இடி டர்ன் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கிறது.

நடிகர் அஜித் இப்படியாக பைக்கில் அவ்வப்போது ரைடு செல்லும் புகைப்படம் வெளியாவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. பலஆண்டுகளாக நடிகர் அஜித் பொதுவெளிக்கே வரமாட்டார் என் விமர்சனம் அவர் மீது இருந்த நிலையில் அதை முறியடிக்கும் விதமாக இவர் அவ்வப்போது பைக்கில் ட்ரிப் செல்வது அவரது ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








