அஜித் வாங்கிய காரை பார்த்து மிரண்டு போன துபாய்காரர்கள்... கேஜிஎஃப் இயக்குனர் உடன் இணைந்த ராசியா!!
நடிகர் அஜித் (Ajith) முன்னணி நடிகராக வலம் வரும் அதேநேரம் பைக் & கார்களை ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். குறிப்பாக, எம்.எஸ் தோனியை போன்று விதவிதமான பைக்குகளை ஓட்ட நடிகர் அஜித் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இன்னும் சொல்லப் போனால், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும், பைக்குகளில் புது, புது இடங்களுக்கு செல்வதே அஜித்தின் விருப்பமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகர் அஜித் புதியதாக விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை துபாய் நாட்டில் வாங்கியுள்ளார். அஜித் வாங்கியிருப்பது என்ன மாதிரியான ஃபெராரி கார் என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
தமிழ் மட்டுமில்லாமல், மொத்த இந்திய அளவிலும் சற்று வித்தியாசமான நடிகர் என அஜித்குமாரை சொல்லலாம். நடிகர், நடிகையர் என்றாலே பொதுவாக விளம்பரங்களை விரும்பக்கூடியவர்களாக இருப்பர். ஆனால், நடிகர் அஜித் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள அதிகமாக விரும்பாதவர். பெரிய ரசிகர் பட்டாளத்துடன் உச்சப்பட்ச நடிகராக இருப்பினும், எளிமையான வாழ்க்கை வாழவே விரும்பக்கூடியவர்.

இது எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதன்பின், இந்தியாவிலும் பல மாநிலங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவ்வாறு உலகின் பல புதிய இடங்களுக்கு அவ்வப்போது பயணங்களை மேற்கொள்ள விரும்பக்கூடியவரான நடிகர் அஜித்குமார் தற்சமயம் துபாயில் உள்ளார்.
காரணம், நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வெளியூர்களுக்கு படப்பிடிப்பிற்காக சென்றாலே, ஷூட்டிங் முடிந்த பின் அருகில் உள்ள இடங்களுக்கு சுற்றிப் பார்ப்பதற்காக அஜித் செல்வது வழக்கம். அப்படியிருக்கையில், துபாய் போன்ற நகரத்தில் சொல்லவே வேண்டாம். துபாயை சுற்றி பார்த்ததுடன், அங்கு ஒரு விலையுயர்ந்த காரையும் அஜித் வாங்கியுள்ளார்.

துபாயில் நடிகர் அஜித் வாங்கியிருப்பது ஃபெராரி எஸ்.எஃப்90 (Ferrari SF90) கார் ஆகும். இந்தியாவில் இந்த ஃபெராரி கார் விற்பனையில் இல்லை. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்தது. துபாயில் இந்த காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய சுமார் ரூ.9 கோடி என கூறப்படுகிறது. ஃபெராரி கார்களின் அடையாளமே அவற்றின் சிவப்பு நிற பெயிண்ட் ஆகும். அதற்கேற்றாற் போன்று, புதிய ஃபெராரி எஸ்.எஃப்90 காரையும் பளபளப்பான சிவப்பு நிறத்தில் நடிகர் அஜித் வாங்கியுள்ளார்.
ஃபெராரி எஸ்.எஃப்90 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஸ்ட்ராடேல் மற்றும் ஸ்பைடர் என 2 விதமான வேரியண்ட்களில் இந்த ஃபெராரி கார் விற்பனை செய்யப்படுகிறது. நடிகர் அஜித்குமார் வாங்கியிருப்பது இதில் ஸ்ட்ராடேல் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டில் காரின் மேற்கூரையை திறக்க முடியாது. அதுவே, ஸ்பைடர் வேரியண்ட்டில் விருப்பப்பட்டால், மேற்கூரையை திறந்துக் கொண்டு வெளியுலகை ரசித்தப்படி பயணம் செய்யலாம்.
ஆனால், இவ்வாறு மேற்கூரையை திறக்கும் வசதி உள்ளதினாலேயே ஸ்பைடர் காரின் ஏரோடைனாமிக்ஸ் சற்று பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, 0-இல் இருந்து 96kmph வேகத்தை எட்ட ஸ்பைடர் வேரியண்ட்டில் 2.4 வினாடிகளும், ஸ்ட்ராடேல் வேரியண்ட்டில் வெறும் 2 வினாடிகளும் தேவைப்படுகின்றன. அதாவது, வெறும் 2 வினாடிகளில் கிட்டத்தட்ட 100kmph வேகத்தை எட்டிவிடக்கூடிய ஃபெராரி காரை நடிகர் அஜித்குமார் வாங்கியுள்ளார்.
திறக்க முடியாத மேற்கூரையை கொண்ட ஃபெராரி எஸ்.எஃப்90 காரை வாங்கியதில் இருந்து, நடிகர் அஜித்குமாரின் கார்கள் பற்றிய நுண்ணறிவை அறிய முடிகிறது. இந்த ஃபெராரி காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் 3 எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த காரின் டாப்-ஸ்பீடு 339kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமாரிடம் ஏகப்பட்ட பைக்குகள் உள்ளன. அதேபோல், லம்போர்கினி, மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் லேண்ட் ரோவர் உள்ளிட்ட பிராண்ட்களின் கார்களையும் வைத்துள்ளார். பொதுவாகவே, அஜித் புதியதாக ஒரு வாகனத்தை வாங்குகிறார் என்றால், அதில் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அர்த்தம். ஆக, இந்த புதிய ஃபெராரி எஸ்.எஃப்90 காரில் என்ன மாதிரியான பயணத்திற்கு அஜித் திட்டமிட்டுள்ளாரோ...


Click it and Unblock the Notifications








