பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் வாங்கி சென்னைக்கு பெருமை சேர்த்த 'தல' அஜீத்!!

பிராங்க்ஃபர்ட், டெல்லி, பெங்களூர் நகரங்களில் பார்த்த பிஎம்டபிள்யூ ஐ8 கார் ஸ்போர்ட்ஸ் கார் தற்போது சென்னை மண்ணிலும் தடம் பதித்துள்ளது. உலகின் மிகவும் விசேஷமான ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றான இந்த காரை சென்னை மண்ணுக்கு கொண்டு வந்து புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளார் நடிகர் 'தல' அஜீத்.

இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த காரை முதல் லாட்டிலேயே வாங்கியிருக்கிறார் நடிகர் அஜீத். நடிகர் மட்டுமின்றி, ஒரு ரேஸராகவும் இருப்பதால், இயற்கையாகவே கார், பைக் மீது அஜீத்திற்கு அதீத ஆர்வம் இருந்து வருகிறது. அவர் இந்த காரை விரும்பி தேர்வு செய்ததற்கு காரணமான இந்த காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

உடனே முன்பதிவு

உடனே முன்பதிவு

காரைவிட பைக்குகள் மீது தீராத காதல் கொண்டவர் அஜீத்குமார். புதிதாக வரும் சூப்பர் பைக்குகளை உடனடியாக முன்பதிவு செய்து வாங்கிவிடுவார். இதுகுறித்து ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். மேலும், தனது திரைப்படங்களிலும் பைக் சேஸிங் அல்லது படகு சேஸிங் என ஏதாவது ஒரு சாகச காட்சிகளை சேர்ப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

 பிஎம்டபிள்யூ ஐ8

பிஎம்டபிள்யூ ஐ8

பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் வகை ஸ்போர்ட்ஸ் கார். இந்த கார் மின்மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சினில் இயங்கும். உலகிலேயே அதிக சிறப்பம்சங்களை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது. அது என்னென்ன என்பதையும், இதனை எவ்வளவு கொடுத்து அஜீத் வாங்கியிருக்கிறார் என்பது உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து காணலாம்.

நவீன வகை பாடி பேனல்கள்

நவீன வகை பாடி பேனல்கள்

கார்பன் ஃபைபர் பாடி மற்றும் ஏராளமான பிரத்யேக உலோக பாகங்களுடன் லைட் வெயிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் 1,490 கிலோ எடை கொண்டது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறம், பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், ஆட்டோமேட்டட் பிரேக் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட் போன்ற பல நவீன வசதிகளை கொண்டுள்ளது.

 வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் கார்

வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் கார்

ஹைபிரிட் நுட்பம் கொண்ட இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும்.

சக்திவாய்ந்த கார்

சக்திவாய்ந்த கார்

இந்த காரில் இருக்கும் பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

 மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கணக்கீட்டின்படி, ஒரு லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. அடிக்கடி நீண்ட தூர பயணங்களின் மீது அதிக ஆர்வம் காட்டும் அஜீத்திற்கு செயல்திறனையும், மைலேஜையும் காட்டி இந்த கார் வியக்க வைக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

பிஎம்டபிள்யூ ஐ8 அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் கடந்து விடும். ரேஸ் கார்களை ஓட்டி பழகிய அஜீத்தின் கைகளுக்கு இந்த கார் அதிக சவால்களை தராது என்று கருதலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டியூவல் ஏர்பேக்ஸ், கர்டெயின் ஏர்பேக்ஸ், அவசர காலங்களில் பேட்டரியின் மின் இணைப்பு தானியங்கி முறையில் துண்டிக்கும் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லாத காராக வந்திருக்கிறது.

விலை

விலை

ரூ.2.29 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், வரிகள் உட்பட ரூ.3.60 கோடி அடக்க விலையில் இந்த காரை அஜீத் வாங்கியிருக்கிறார்.

பெருமை

பெருமை

ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த காரின் பெருமைமிகு உரிமையாளர் பட்டியலில் நடிகர் அஜீத்தும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 28, 2015, 10:26 [IST]
English summary
Actor Ajith Kumar who loves fast bikes and cars. Now, He bought a new BMW i8 sports car model.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+