Subscribe to DriveSpark

நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

Written By:

சினிமாவிற்கு அடுத்து அஜீத் அதிகம் நேசிப்பது கார், பைக்குகளைத்தான். தொழில்முறை பந்தய வீரரான அஜீத்திற்கு சூப்பர் பைக்குகள் மற்றும் சூப்பர் கார்கள் மீது தீராத மோகம் உள்ளது. கடந்த ஆண்டு வரை தொடர்ந்து சூப்பர் பைக்குகளை வாங்கி குவித்த அஜீத் தற்போது லம்போர்கினி சூப்பர் காரை வாங்க உள்ளதாக முன்னணி சினிமா இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டு இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சாலையில் நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் காரை ஓட்டிச் சென்றதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காரை விரட்டிச் சென்ற இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

அந்த காரை நடிகர் அஜீத்தான் ஓட்டியதாக தெரிவித்திருந்தனர். அந்த ஆரஞ்ச் வண்ண லம்போர்கினி சூப்பர் காரை அனாயசமாக ஓட்டிய விதத்தை வைத்து பார்க்கும்போதே, சூப்பர் கார்களை ஓட்டுவதில் திறமையான தொழில்முறை பந்தய வீரரான அஜீத் போன்ற ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நாமும் உணர முடிந்தது.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

இந்த நிலையில், நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் காரை வாங்குவதற்காகவே டெஸ்ட் டிரைவ் செய்திருக்கலாம் என்று இப்போது கருதப்படுகிறது. அவர் ஓட்டிச் சென்றது லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் மாடல்.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

லம்போர்கினி மூர்சிலாகோ காருக்கு மாற்றாக 2011ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட அவென்டேடார் கார் பெரும் வெற்றியை பெற்ற மாடல். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. இதுவரையில் 5,000 லம்போர்கினி அவென்டேடார் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

அஜீத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பல அம்சங்கள் இந்த காரில் உள்ளது. மிக மிக உறுதியான கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்படுகிறது. லம்போர்கினி அவென்டேடார் காரில் 690 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 6.5 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

லம்போர்கினி நிறுவனம் உருவாக்கிய இரண்டாவது வி12 சிலிண்டர் எஞ்சின்தான் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தியை அனுப்பும் தொழில்நுட்பம் கொண்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. 7 ஸ்பீடு செமி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

சவால் தரும் செயல்திறன் மிக்க காராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த காரை வாங்கியிருக்கிறார். ஆம், இந்த கார் 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

இந்த காரின் ராட்சத சக்திகொண்ட எஞ்சினுக்கு பெட்ரோல் ஊற்றி மாளாது. 100 கிமீ செல்வதற்கு 17.2 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுமாம். இது நிறுவனம் தெரிவிக்கும் எரிபொருள் திறன் அளவு. ஆனால், நடைமுறையில் இன்னும் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால், சற்று நீண்ட தூரம் செல்வதற்கு பின்னாலேயே பெட்ரோல் கேனுடன் ஒரு வாகனத்தையும் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

இந்தியாவில் ரூ.3.68 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்ரோடு விலை ரூ.4.5 கோடியை நெருங்கும்.

 நடிகர் அஜீத் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கப்போவதாக பரபரப்பு!

அஜீத்தின் நேரடி போட்டியாளராக ரசிகர்கள் மத்தியில் கூறப்படும் நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கிவிட்டார். இந்த நிலையில், அஜீத் ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணையாமல், சூப்பர் கார் ரகத்தை சேர்ந்த லம்போர்கினி அவென்டேடார் காரை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Ajith is planning to buy Lambo super car. Read in Tamil.
Story first published: Monday, September 19, 2016, 12:28 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark