இதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கனும்! அஜித்தே நேரடியா வந்து பைக் ஓட்ட கத்து குடுக்குறாரே!

நடிகர் அஜித் பைக் ரைடர் ஒருவருக்கு பைக் ஓட்டுவதற்கான பயிற்சி வழங்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித் நடத்திவரும் பைக் ரைடிங் நிறுவனத்தில் பைக் டூர் செல்லும் நபருக்கு இவர் பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் உச்சம் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். நடிகர் அஜித் என்னதான் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும், அவருக்கு தனியாக கார், பைக் ரேஸ் மீது அதிகாரம் இருக்கிறது. இவர் இதற்கு முன்னர் பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

Actor ajithkumar

இந்நிலையில் சமீப காலமாக இவர் தனது பைக்கில் பல்வேறு இடங்களில் டூர் சென்று வந்துள்ளார். உலக அளவில் பல இடங்களுக்கு பைக்கில் டூர் சென்றார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. நடிகர் அஜித் என்றாலே தற்போது அவரது பைக் ரைடிங் குறித்த ஞாபகம் தான் நமக்கு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகர் அஜித் ஏகே மோட்டார் ரைடு என்ற பெயரில் பை டூரிங் நிறுவனத்தை துவங்கினார். இந்த பைக் டூரிங் நிறுவனத்தின் மூலம் பைக் ரைட் மீது ஆர்வமாக உள்ளவர்கள். இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் பைக் டூரிங் செய்வதற்கான ஏற்பாடுகளை அந்நிறுவனம் செய்து கொடுக்கிறது. தற்போது இந்த பணியில் தான் நடிகர் அஜித்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Actor ajithkumar

இந்நிறுவனம் பைக் ரைடு செல்ல விரும்பும் நபர்களுக்கு பைக்குகளை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுப்பது பாதுகாப்பாக எப்படி ரைடு செய்வது என சொல்லிக் கொடுப்பது, அவர்கள் ரைடு செய்யும் இடங்களுக்கு நேரடியாக சென்று அங்கு அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த பைக் ரைடிங் பணியில் தீவிரமாக இருக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது தனது நிறுவனத்தின் மூலம் பைக் டூர் செல்லும் நபர் ஒருவருக்கு சிறந்த முறையில் பைக் ஓட்ட பயிற்சி வழங்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor ajithkumar

இதில் சில பைக் ரைடர்கள் ரைடிங் கிட்டுகளை அணிந்து பைக்கில் அமர்ந்தபடி இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு வரும் நடிகர் அஜித் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவிற்கு பின்னாடியில் மியூசிக் ஒன்று ஓடுகிறது. நடிகர் அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் ரைடர் ஒருவருக்கு பைக்கை ஹேண்டில் செய்வது குறித்து பேசுவது அவரது சைகையில் தெரிகிறது.

அவர் தனது இடது கையை வைத்து கிளட்ச்சை பிடித்து பிடித்து விடுவது போல செய்கை செய்கிறார். அதை பைக்கில் உள்ள ரைடர் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் பைக் ரைடருக்கு மறுபக்கம் வந்த நடிகர் அஜித் தன் உடலை அசைத்து பைக்கை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என அவருக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

நடிகர் அஜித்தின் பயிற்சியை நன்கு கவனித்த ரைடர், அதன்பின்பு பைக்கை ஓட்டி காட்டுகிறார். அதை நடிகர் அஜித் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்பு அவரிடம் சென்று அவர் செய்த தவறுகளை திருத்துவது போல அஜித் ஏதோ சொல்லிக் கொண்டு செல்கிறார். இதுதான் இந்த வீடியோவில் முழுமையாக நடந்துள்ளது. இந்த வீடியோவில் நடிகர் அஜித் பைக்கில் கைடு செய்யும் வகையில் எந்த செயலும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார் பைக் ஐடியில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் தற்போது பைக்கில் டூர் செல்லும் விரும்பிகளுக்காக தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கி இந்தியாவில் பைக் ரைடிங் கலாச்சாரத்தை அதிகரிக்க ஒரு முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார். அது நிச்சயம் பாராட்டத்தக்கது. அதில் அவர் தீவிரமாக உழைப்பது இந்த வீடியோவின் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2024, 18:04 [IST]
English summary
Actor ajithkumar bike riding tips viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X