அவர் பயன்படுத்திய கார்னு சொன்னதும் அஜித் கண்ணை மூடிட்டு வாங்கிட்டாரு!! இந்த பணத்தில் பிரைவேட் ஜெட்டை வாங்கலாம்
நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) ஓர் கார் & பைக் பிரியர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இன்னும் சொல்லப்போனால், சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கார் ரேசராக தான் நடிகர் அஜித்குமார் இருந்தார் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்கு பணம் தேவை என்பதினால்தான் சினிமாவில் வாய்ப்பு தேட அஜித் ஆரம்பித்தார் என கூறுவர். வயதாகிவிட்ட நிலையில், தற்போது திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் கார் பந்தயங்களில் நடிகர் அஜித் அதிகமாக ஈடுப்படுவதை வைத்து பார்க்கும்போது இவருக்கு கார் பந்தயங்களில் தான் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே ஆர்வம் அதிகம் என்பது உறுதியாகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்தே சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, நீண்ட தூர பைக் பயணங்களை துவங்கிய நடிகர் அஜித், இந்தியா முழுவதும் தனது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) மற்றும் டுகாட்டி (Ducati) பைக்குகளில் வலம் வந்ததை பார்த்திருந்தோம். பின்னர், இந்தியாவை தாண்டி ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பைக் பயணங்களை அஜித் மேற்கொண்டார்.

இதற்கிடையில் சில திரைப்படங்களில் நடித்த அஜித், கடந்த 1 வருடமாக கார் பந்தயங்களில் அதிக ஈடுப்பாடு காட்ட ஆரம்பித்துள்ளார். இதற்காக ரேசிங் குழு ஒன்றையும் அஜித் உருவாக்கியுள்ளார். இந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில், துபாயில் நடைபெற்ற மிச்செலின் துபாய் 24எச் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித்தின் ரேசிங் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது பெரிதும் கவனத்தை ஈர்த்தது.
அதேபோல், இந்த பந்தய தொடருக்கான பயிற்சியின் போது போர்ஷே ஜிடி3 (Porsche GT3) என்கிற ரேஸ் காரில் நடிகர் அஜித்குமார் விபத்தில் சிக்கிய சம்பவமும் அந்த சமயத்தில் இணையத்தில் பெரிதும் வைரலாகியது. அதேபோல், கடந்த மே மாதத்திலும் நெதர்லாந்தில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்ற போது அஜித்குமார் ஓட்டிய காரின் முன் டயர் வெடித்து சிதறிய நிகழ்வும் அப்போது இணையத்தில் கவனத்தை பெற்றது.
இத்தனை சோதனைகளை கண்ட போதிலும் கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதையும், அதற்காக செலவு செய்வதையும் ஒருபோதும் நடிகர் அஜித் நிறுத்துவதுபோல் தெரியவில்லை. கார் பந்தயங்களுக்காக அஜித் செய்யும் செலவுகளில் உச்சமாக மிகவும் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது யார் பயன்படுத்திய கார் என்று தெரிந்தால் இன்னும் ஆச்சிரியப்படுவீர்கள். இது மறைந்த ஃபார்முலா-1 ரேசர் அயர்டன் சென்னா (Ayrton Senna) பயன்படுத்திய மெக்லாரன் சென்னா (McLaren Senna) கார் ஆகும்.

பிரபல பிரேசிலியன் ஃபார்முலா-1 (Formula-1) டிரைவரான அயர்டன் சென்னா, 1994இல் தன்னுடைய 34 வயதில் கார் பந்தயத்தின்போது மரணமடைந்தார். சிறு வயதிலேயே இறந்துவிட்டாலும், அதற்குள்ளாக பெரும் பேரும் புகழையும் சேர்த்தவரான அயர்டன் சென்னாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 30 இலட்சம் பேர் கலந்துக் கொண்டனர். நடிகர் அஜித்குமாருக்கு அவரது இளமை காலத்தில் இருந்து இப்போதுவரையில் அயர்டன் சென்னா தான் ரோல் மாடல் ஆவார்.
மேலே கூறப்பட்ட மெக்லாரன் சென்னா காரின் பெயர் ஆனது அயர்டன் சென்னா பயன்படுத்தியதினால் அவ்வாறு சூட்டப்பட்டது என சொன்னால் நம்ப முடிகிறது. இத்தகைய ஸ்போர்ட்ஸ் காரை தான் தற்போது நடிகர் அஜித்குமார் வாங்கியுள்ளார். இதனை அஜித்குமாரின் தனிப்பட்ட மேலாளரான சுரேஷ் சந்திரா காருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

மெக்லாரன் சென்னா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பிரபலமான மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மத்தியில் என்ஜினை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். முழுக்க முழுக்க பந்தய களத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த கார் ஆனது மெக்லாரன் நிறுவனம் உருவாக்கிய மிகவும் பவர்ஃபுல்லான கார் மட்டுமில்லை, மிகவும் அரிதான காரும் கூட. இந்த சென்னா காரில் 3.8 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தமாகவே வெறும் 500 மெக்லாரன் சென்னா கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. இருப்பினும், அவ்வாறு வாங்கியவர்களுள் ஒருவரிடம் இருந்துதான் தற்போது நடிகர் அஜித்குமார் இந்த காரை வாங்கியுள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மெக்லாரன் சென்னா காருக்காக ரூ.15 கோடி வரையில் நடிகர் அஜித் செலவு செய்துள்ளாராம். இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய போதிலும், இந்த காரை சாதாரணமான சாலைகளில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









