விலையுயர்ந்த காருடன் நிற்பது யாரென்று தெரிகிறதா? மனைவியின் இன்ஸ்டா பதிவு... காரின் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பதுடன், பைக் & கார்களை ஓட்டுவதிலும் ஆர்வமிக்கவர் என்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அதேபோல், அதிவேகமாக இயங்கக்கூடிய பவர்ஃபுல்லான வாகனங்களை அவ்வப்போது வாங்கி குவிப்பதிலும் நடிகர் அஜித் ஆர்வமிக்கவர் ஆவார். சமீபத்தில் கூட துபாயில் ஃபெராரி கார் ஒன்றை வாங்கி இருந்தார். அது நடந்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது புதியதாக விலையுயர்ந்த போர்ஷே கார் ஒன்றை அஜித்குமார் வாங்கியுள்ளார். நடிகர் அஜித் விரும்பி வாங்கும் அளவிற்கு இந்த காரில் அப்படி என்ன உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே கார் ரேசராக இருந்தவர் நடிகர் அஜித்குமார் என்பது ஊரறிந்த விஷயம். இன்னும் சொல்லப்போனால், கார் ரேசிங்கில் ஈடுப்படுவதற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்காகவே திரைப்படங்களில் அஜித் நடிக்க ஆரம்பித்தார் என்கிற பேச்சும் உள்ளது. சாதாரண மக்கள் கார் வாங்குவதற்கும், நடிகர் அஜித்குமார் போன்ற கார் ரேசர்கள் கார் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

ajithkumar buys porsche gt3 rs

கார் ரேசர்கள் தேர்வு செய்யும் கார்களை எல்லாம் பார்த்தால், அதிவேகமாக இயங்கக்கூடியவைகளாக இருக்கும். அதேபோல், அவர்கள் தங்களது டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ற காரை உடனடியாக தேர்வு செய்துவிடுவர். அஜித்குமார் கூட துபாயில் காபி குடிப்பது போல் ஷோரூமுக்கு சென்று ஃபெராரி காரை டெலிவிரி பெற்றார். அப்போது, சிவப்பு நிறத்தில் நடிகர் அஜித் வாங்கியது ஃபெராரி எஸ்.எஃப்90 கார் ஆகும்.

தற்போது அஜித் வாங்கியிருப்பது போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ் என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். வெள்ளை நிறத்திலான இந்த போர்ஷே கார் உடன் நடிகர் அஜித் குமார் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர் வேறு யாருமில்லை, நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி ஆவார். இதுகுறித்த இன்ஸ்டா பதிவில், "அவர் (அஜித்) காரை, ஸ்டைலை மற்றும் எனது இதயத்தை பெற்றார்" என ஷாலினி குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் வாங்கியிருக்கும் போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது போர்ஷே 911 காரின் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.51 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் அஜித்குமார் வாங்கிய ஃபெராரி கார் ஆனது ரூ.9 கோடி மதிப்பிலானது ஆகும்.

கருப்பு, கார்ட்ஸ் சிவப்பு, வெள்ளை மற்றும் ரேசிங் மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் போர்ஷே 911 ஜிடி3 கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் வெள்ளை நிறத்தில் இந்த போர்ஷே காரை நடிகர் அஜித் வாங்கியுள்ளார். இந்த போர்ஷே காரில் 3996சிசி, 6-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் தலா 4 வால்வுகளை கொண்டுள்ளன.

ajithkumar buys porsche gt3 rs

அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 518 பிஎச்பி மற்றும் 6300 ஆர்பிஎம்-இல் 465 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. போர்ஷே 911 ஜிடி3 ஆர்.எஸ் கார் ஆனது 2 கதவுகளை மட்டுமே கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். அதேபோல், இந்த காரில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

64 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை பெறும் இந்த காரின் பூட் ஸ்பேஸ் கொள்ளளவு 132 லிட்டர்கள் ஆகும். பயணிகளின் பாதுகாப்பிற்கு ஓவர் ஸ்பீடு வார்னிங், எமர்ஜென்சி பிரேக் லைட் ஃப்ளாஷிங், 7 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ஹை-பீம் அசிஸ்ட், டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிடரிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமாரிடம் பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்.ஆர், பிஎம்டபிள்யூ கே1300 எஸ், ஏப்ரிலியா கேபோனார்ட் 1200 மற்றும் கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-14எஸ் உள்ளிட்ட பைக்குகளும், ஃபெராரி 458 இத்தாலியா, பிஎம்டபிள்யூ 740 எல்.ஐ மற்றும் ஹோண்டா அக்கார்ட் வி6 உள்ளிட்ட கார்கள் உள்ளன. அந்த கார் கலெக்‌ஷனில் தற்போது போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ் காரும் இணைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 19:33 [IST]
English summary
Actor ajithkumar buys porsche gt3 rs check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+