இந்தியாவில் சம்பாதித்ததை எல்லாம் துபாயில் கொட்டும் நடிகர் அஜித்! புதுசா வாங்கிய BMW பைக்கின் விலை தலை சுத்துது

நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar), சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார்களை ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். குறிப்பாக, கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் நடிகர் அஜித் அதிகமாக சாலையில் மோட்டார்சைக்கிள்களிலும், கார்களிலும் காட்சியளிக்கிறார்.

சில வருடங்களுக்கு முன், இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட நடிகர் அஜித்குமார் அதன்பின் ஐரோப்பாவிலும் தனது பைக் பயணத்தை மேற்கொண்டதை பார்த்திருந்தோம். இந்த பயணங்கள் அனைத்திலும் விலையுயர்ந்த மற்றும் ஆற்றல்மிக்க என்ஜினை கொண்ட பைக்குகளை தான் நடிகர் அஜித்குமார் பயன்படுத்தி இருந்தார்.

actor ajithkumar bought bmw s1000rr superbike

இத்தகைய பயணங்களுக்காகவே அவ்வப்போது புது, புது விலையுயர்ந்த பைக்குகளை அஜித் வாங்குவதையும் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் தற்போது, உலகளவில் பிரபலமான பி.எம்.டபிள்யூ (BMW) பைக்கான எஸ்1000ஆர்.ஆர் (S1000RR) பைக்கை நடிகர் அஜித்குமார் துபாயில் வாங்கி உள்ளார். திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக தற்சமயம் துபாயில் இருக்கும் அஜித், அதற்கு இடையில் இந்த பைக்கை வாங்கி உள்ளார்.

மேலும், புதியதாக வாங்கிய பிஎம்டபிள்யூ பைக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகவும் நடிகர் அஜித் பயன்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை அஜித்குமார் வெள்ளை நிறத்தில் எம் மோட்டார்ஸ்போர்ட் (M Motorsport) பேக்கேஜ் உடன் வாங்கி உள்ளார். இந்த பேக்கேஜை வாங்கி இருப்பதினால், அஜித்தின் இந்த பிஎம்டபிள்யூ பைக்கில் எம் கார்பன் சக்கரங்கள் மற்றும் எம் ஃபுட்ரெஸ்ட்ஸ் உள்ளிட்டவை இருப்பதை காணலாம்.

actor ajithkumar bought bmw s1000rr superbike

இத்தகைய அம்சங்கள் இருப்பதினாலேயே பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் ஆனது சாதாரணமான சாலைகளில் மட்டுமின்றி, ரேஸ் டிராக்குகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற பைக் ஆகும். இந்தியாவில் இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.21.10 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-showroom Price) புதிய எஸ்1000ஆர்ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே விற்பனையில் இருக்கும் இந்த பிஎம்டபிள்யூ பைக் 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக மறுசீரமைக்கப்பட்ட உடல் வேலைப்பாடுகளை பெற்றுள்ளது. இதன்படி, பெரிய அளவில் விங்லெட்ஸ் (Winglets) 2025 எஸ்1000ஆர்ஆர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பைக்கின் முன்பகுதி தரையை நோக்கி மேலும் அழுத்தப்பட்டு அதிக வேகத்தில் செல்ல முடிகிறது.

இதுமட்டுமின்றி, புதிய எஸ்1000ஆர்ஆர் பைக்கின் தோற்றம் ஆனது முன்பை விட கூடுதல் ஷார்ப்பானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மழை, சாலை, டைனாமிக், ரேஸ் மற்றும் ரேஸ் புரோ என 5 விதமான ரைடிங் மோட்களை கொண்டிருக்கும் இந்த 1000சிசி பிஎம்டபிள்யூ பைக்கில் 999சிசி, இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பக்கூடியவர்களில் நடிகர் அஜித்குமாரும் ஒருவராவார். இவரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் (R1200 GS) என்கிற அட்வென்ச்சர் ரக பைக்கும் உள்ளது. இந்த வரிசையில், நடிகர் அஜித் புதியதாக வாங்கி உள்ள எஸ்1000ஆர்ஆர் ஆனது ஏற்கனவே கூறியதுபோல் உலகளவில் பிரபலமான பிஎம்டபிள்யூ பைக் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2025, 11:17 [IST]
English summary
Actor ajithkumar newly bought bmw s1000rr superbike in dubai check all details here
மேலும்... #superbikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+