விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்குமார் இந்த ரேர் பீஸ் காரை ஓட்டுகிறாரா? இந்த கார்ல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நடிகர் அஜித்குமார் நடித்துவரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து லீக்கான சில புகைப்படங்களில் படப்பிடிப்பு காட்சிகளுக்காக ஹம்மர் எச் 2 கார் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித்குமார் .இவர் நடித்து கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதற்கிடையில் இவர் பைக் ரைடு சென்று கொண்டிருந்தார். இவர் திரைப்படம் குறித்த அடுத்த அப்டேட்கள் எதுவும் இல்லாமல் இவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

vidamyarchi shooting spot hummer h2

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் தற்போது அசர்பைஜானில் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களில் நடிகர் அஜித் இல்லை என்றாலும் இது விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் தான் என ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் பல ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த லீக்கான புகைப்படங்களில் ஒரு முக்கியமான விஷயத்தை நம்மால் கவனிக்க முடிந்தது. இந்த படத்தில் ஹம்மர் எச்2 ரக காரை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

vidamyarchi shooting spot hummer h2

திரைப்படத்தில் இந்த ஹம்மர் எச்2 காரின் சேஸிங் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல் இந்த புகைப்படத்தில் உள்ள ஹம்மர் எச் 2 காரின் டயர்கள் திரட்டுகள் இல்லாத ஸ்லிக் டயர்களாக இடம்பெற்றுள்ளன. டயர்கள் இப்படி திரட்டுகள் இல்லாமல் இருந்தால் அதில் சாகசம் செய்வது சுலபமாக இருக்கும். பெரும்பாலும் சினிமாவில் ஸ்டண்ட் மற்றும் சேசிங் காட்சிகள் எல்லாம் இப்படியான டயர் கொண்ட கார்களை வைத்துதான் படப்பிடிப்பு செய்வார்கள்.

அதனால் விடாமுயற்சி படபிடிப்பில் ஹம்மர் எச் 2 காரில் ஸ்டெண்ட் காட்சி ஒன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹம்மர் எச் 2 கார் என்பது கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட காராகும். தற்போது இந்த கார் தயாரிப்பில் இல்லை. இந்த கார் 5 டோர் கொண்ட முழு சைஸ் ஆஃப் ரோடு எஸ்யூவி ரக காராக விற்பனையாகி வந்தது.

vidamyarchi shooting spot hummer h2

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 2003-2007-ம் ஆண்டு வரை 6 லிட்டர் வி8 இன்ஜினும் 2008-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 6.2 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்ட காராக வடிவமைக்கப்பட்டு விற்பனையாகி வந்தது.இதன் கியர் பாக்ஸை பொறுத்தவரை 2007-ம் ஆண்டு வரை 4 ஸ்பீடு கியர் பாக்ஸும் 2008-ம் ஆண்டுக்கு பிறகு 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காராக இது விற்பனையாகி வருகிறது.

இந்தக் காரின் தயாரிப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டதால் தற்போது இந்த கார் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. இது ஒரு ரேர் பீஸ் காராகவே இன்று இருக்கிறது. இந்த காரின் லுக் மற்றும் டிசைனைனிற்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் இந்த ஹம்மர் எச்2 காரை விரும்புகின்றனர். இதன் அடுத்த வெர்ஷன் வந்தாலும் இந்த எச்2 வெர்ஷன் மீது மக்களுக்கு அலாதி பிரியம் இருக்கிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் ரூ75 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இந்தியாவில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இந்த காரை வைத்திருந்தனர். தற்போது தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்த ஹம்மர் எச்2 காருக்கு அடுத்த வெர்ஷனான எச்3 காரை வைத்திருந்தார். இப்படியாக இந்த ஹம்மர் கார் இந்தியாவிலும் பிரபலமான காராகவே இருந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹம்மர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் ஹம்மர் காரை வைத்து சேஸிங் காட்சிகள் இடம் பெற்றால் அது மக்களின் கவனத்தை ஈர்க்கும். இதற்காக தற்போது விடாமுயற்சி குழு தீவிரமான பணியில் இறங்கியுள்ளது. இந்த கார்களின் டயர்கள் ஸ்லிக் டயர்களாக இருப்பதால் நிச்சயம் இது சேஸிங் காட்சிகள் தான் என நமக்கு தெளிவாக தெரிகிறது

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 11:30 [IST]
English summary
Actor ajithkumar vidamuyarchi films in azerbaijan spotted with a hummer h2
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X