சிஎஸ்கே மேட்ச் பார்க்க ஏகே குடும்பத்தோடு வந்த காரை பார்த்தீங்களா? இவ்வளவு சிம்பிளான ஆளா இவரு?

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இவர் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். கார் ரேஸில் கூட கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு சிம்பிளான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதற்கிடையில் இவர் கார் ரேஸிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் தனது 25வது திருமண நாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடினார். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஐபிஎல் போட்டிகளை காண வந்துள்ளார்.

Ajithkumar CSK Cricket Match

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸர் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண இவர் தனது மனைவி, மகள், மகன் உடன் வந்திருந்தார். போட்டியின் நடுவே இவர்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் காட்சிகள் ரசிகர்களுக்காக காட்டப்பட்டது. இந்நிலையில் இவர் கிரிக்கெட் போட்டியை காண குடும்பத்துடன் காரில் வந்திறங்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டியை காண பழைய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரில் வந்திறங்கினார். இந்த கார் அதிகமாக பிரபலங்கள், அரசியல்வாதிகள், பெரிய தொழிலதிபர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரில் அதிகமான சொகுசு வசதி, இட வசதி இருக்கிறது. ஒரே காரில் அதிகமான நபர்கள் செல்ல முடியும் என்பதால் இந்த காரை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

Ajithkumar CSK Cricket Match

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா கார் ரூ23.85 லட்சம் முதல் ரூ31.86லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 7 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இந்தில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 148 பிஎச்பி பவரையும் 343 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஏசியன் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றள்ளது. இந்த கார் பெரிய சைஸ் மற்றும் போல்டான லுக்கிற்காக பெயர் பெற்ற காராக இருக்கிறது.

Ajithkumar CSK Cricket Match

இது போக இந்த காரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் எல்இடி ஹைட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்தகார் மொத்தம் சூப்பர் ஒயிட், அட்டிடியூட் பிளாக் மைக்கா, பிளாட்டினம் ஒயிட் பியர்ல், அவென்ட் கிரேடு பிரான்ஸ் மெட்டாலிக் சில்வர் மெட்டாலிக், உள்ளிட்ட சீட்டிங் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் பெரிய கார்களில் ஒன்றாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அஜித்குமார், பல காஸ்ட்லியான கார்களை வைத்துள்ளார். கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். இருந்தாலும் சென்னைக்குள் பயணம் செய்ய தனது நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு சாதாரண காரில் வந்திறங்கியது நிச்சயம் பாராட்ட தக்கது தான். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 26, 2025, 14:15 [IST]
English summary
Actor ajithkumar watches csk ipl match arrived in innova car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X