உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித், யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

நடிகர் அஜித் தலைமையில் சென்னை இன்ஜினியரிங் மாணவர்கள் வடிவமைத்த ஆளில்லாமல் பறக்கும் ட்ரோனுக்கு உலகளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த ட்ரோன் உலகில் நீண்ட நேரம் மற்றும் நீண்ட தூரம் பறக்கும்

நடிகர் அஜித் தலைமையில் சென்னை இன்ஜினியரிங் மாணவர்கள் வடிவமைத்த ஆளில்லாமல் பறக்கும் ட்ரோனுக்கு உலகளவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த ட்ரோன் உலகில் நீண்ட நேரம் மற்றும் நீண்ட தூரம் பறக்கும் ஆளில்லா ட்ரோன் எனவும் கருதப்படுகிறது. இந்த ட்ரோன் தயாரிக்கும் தொழிற்நுட்பத்தை நடிகர் அஜித்தின் தலைமையில் இயங்கிய குழு இந்திய ராணுவத்திற்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

ஆண்டுதோறும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் யூஏவி சேலஞ்ச் (UAV-Unmanned Airborne Vehicles) என்ற போட்டி சர்வதேச அளவில் நடத்தப்படும். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டியில் கொடுக்கப்படும் டாஸ்க்கை வெற்றிகரமாக செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொண்டு தாங்களாக அறிவியல் கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இப்போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து சென்னை எம்ஐடி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தேர்வாகினர். அவர்கள் ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இந்த போட்டி என்பது வெகு தொலைவில் மருத்துவ உதவியை நாடும் ஒருவருக்கு விரைவில் மருத்துவ உதவியை செய்யும் வகையிலான பொருளை உருவாக்க வேண்டும். இதுவே அந்த போட்டியின் நோக்கம். சென்னை மாணவர்கள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 55 போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் 5 நாட்கள் இறுதி போட்டி நடத்தப்பட்டது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இந்த போட்டியானது. சுமார் 22 கி.மீ. தொலைவில் மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவரிடம் இருந்து அவரது ரத்த மாதிரியை எடுத்து கொண்டு வருவதுதான். இந்த போட்டியில் பறக்கும் ட்ரோன்களை உருவாக்க வேண்டும். அந்த ட்ரோன் சுமார் 12 நாட்டிக்கல் மைல் தூரம் பறந்து ரத்த மாதிரியை பெற்றுக்கொண்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே பறந்து வர வேண்டும். அதாவது அந்த ட்ரோன் மொத்தம் 24 நாட்டிக்கல் மைல்கள் பறக்க வேண்டும். இது சுமார் 44 கி.மீ ஆகும்.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

மேலும் இந்த போட்டியில் முக்கிய விதிகள் சிலவும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதாவது எக்காரணத்தை கொண்டும் ட்ரோன் கொடுக்கப்பட்ட கட்டுப்பாடு எல்லைகளை தாண்டி பறக்க கூடாது. எமர்ஜென்ஜி லேண்டிங்கிற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் ட்ரோன் 10 மீ தூரத்திற்குள் லேண்ட் ஆகி விட வேண்டும்.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

ரத்த மாதிரிகளை பெற்ற பின்பு அந்த ட்ரோன் மீண்டும் தானாக டேக் ஆப் செய்து விட வேண்டும். ரத்த மாதிரிகளை பத்திரமாக பேஸ் கேப்பிற்கு கொண்டு வர வேண்டும். இவை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக செய்யப்பட வேண்டும்.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இந்த மாதிரியாக திறனை வெளிக்காட்டும் ட்ரோன்கள் உலகில் எங்குமே இல்லை. இதை மாணவர்கள் புதிதான யுக்திகளை ஆராய்ந்து தாங்களாகவே வடிவமைக்க வேண்டிய சூழல் நிலவியது. இவற்றை வடிவமைக்க சென்னை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு நபரை நியமிக்க எம்ஐடி கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

அப்பொழுது நடிகர் அஜித் பறக்கும் ட்ரோன்களை வடிவமைத்து வருவது குறித்தும், அதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் எம்ஐடி கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் நடிகர் அஜித்தை அணுகி இந்த போட்டி குறித்து தெரிவித்தது. அத்துடன் மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு நடிகர் அஜித் உதவ வேண்டும் என்றும் கேட்டுகொண்டது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இதை கேட்டதும் அஜித் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டு மாணவர்களுடனான தனது பணியை துவங்கினார். அஜித் ஆலோசனை வழங்கும் குழுவிற்கு "டீம் தக்ஷா" என பெயர் சூட்டப்பட்டது. தற்போது அதிக தூரம் பறப்பதற்காக ட்ரோன்களை உருவாக்க வேண்டும். அதற்காக அஜித் தனது குழுவுடன் சேர்ந்து பணியாற்றினார். இதனால் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் பேட்டரிகளை கொண்டு அதிக நேரம் அதிக தூரம் பறக்கும் ட்ரோன் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இதற்கிடையில் மும்பையில் ட்ரோன்களுக்கான போட்டி நடந்தது. அதில் "டீம் தக்ஷா" கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தனர். இது ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லேண்ட் பகுதியில் யூஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதி போட்டிகள் கடந்த செப்., 24ம் தேதி துவங்கியது. சுமார் 55 குழுக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. 5 நாட்கள் நடந்த போட்டியில் 2 குழுக்கள் மட்டுமே போட்டியை வெற்றிகரமாக முடித்தனர். அதில் டீம் தக்ஷாவும் ஒன்று.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தாலே வெற்றிதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு டீம்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தது. மோனஷ் யூஏஎஸ் மற்றும் டீம் தக்ஷா ஆகிய அணிகள் வெற்றிகரமாக போட்டியை முடித்த நிலையில் ஒரு குழு மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதனால் இதை செய்த விதத்தை கொண்டு வெற்றி பெற்றவரை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

இதில் மோனஷ் யூஏஎஸ் குழுவின் ட்ரோன் ஆட்டோமெட்டிக்காக டேக் ஆப் செய்ய கமெண்ட்களை வழங்க வேண்டியது இருந்தது. தானாக அந்த ட்ரோனால் நிலைமை உணர்ந்து டேக் ஆப் செய்ய இயலவில்லை. மேலும் ஆட்டோமெட்டிக் டேக் ஆஃப் செய்யும் போது சில ஜெர்க்கை அனுபவித்தது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

டீம் தக்ஷாவை பொருத்தவரை டேக் ஆஃப்பிலும், லேண்டிங்கிலும் அசத்தியது. எனினும் எமர்ஜென்ஸி லேண்டிங்கில் 10 மீட்டருக்குள் லேண்ட் ஆக வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த ட்ரோன் 30 மீட்டரில்தான் லேண்ட் ஆனது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இந்த டாஸ்கை முழுவதுமாக நிறைவு செய்தது, இந்த இரு அணிகள்தான். மற்ற அணிகளால் டாஸ்க்கை நிறைவு செய்யவே முடியவில்லை. இதையடுத்து நடுவர் குழு இந்த இரு அணிகளையும் பாராட்டியது.

உலக நாடுகள் சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய நடிகர் அஜித்.. நூலிழையில் நழுவிய முதல் பரிசு.. யூஏவி சேலஞ்ச் முழு தகவல்கள்

மேலும் இந்த போட்டியை ட்ரோன் பறக்கும் நேரம், இது குறித்து குழுவிடம் நடந்தப்பட்ட நேர்காணல், சமர்பிக்கப்பட்ட ரிப்போர்ட் ஆகியவற்றைக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதில் டீம் தக்ஷா விமானம் பறப்பதில் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றது. இதன் மூலம் உலகிலேயே நீண்ட நேரம் பறக்கும் ட்ரோனாக நடிகர் அஜித் ஆலோசனையில் டீம் தக்ஷா உருவாக்கிய ட்ரோன் இடம் பெற்றுள்ளது. தக்ஷா குழு உருவாக்கிய ட்ரோன் பறக்கும் காட்சியை நீங்கள் கீழே பாருங்கள்.

இருந்தாலும் மதிப்பெண் அடிப்பையில் மோனஷ் யூஏஎஸ் குழு 116.55 மதிப்பெண்களையும், டீம் தக்ஷா குழு 115.70 மதிப்பெண்களையும் பெற்றது. வெறும் புள்ளி 85 மதிபெண்ணில் டீம் தக்ஷா முதலிடத்தை நழுவ விட்டது. இருந்தாலும் இரு அணிகளும் கவுரவிக்கப்பட்டன. நடுவர் குழுவின் பாராட்டுகளை இரு அணிகளும் பெற்றது.

Most Read Articles
English summary
Actor ajiths team dheksha got second place in uav challange. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X