டொயோட்டா காரை வாங்கிய கோடி கோடியா சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்! எல்லாரையும் வாயை பிளக்க வச்சுட்டாரு!

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களில் அக்சய் குமார்-ம் ஒருவர் ஆவார். மிகவும் பிசியாக வலம் வந்துக் கொண்டு இருக்கும் நடிகராகவும் அவர் காட்சியளிக்கின்றார். இவரே
டொயோட்டா (Toyota) காரை வாங்கியிருக்கின்றார். இந்தியாவில் டொயோட்டா விற்பனைச் செய்யும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலையே அவர் வாங்கி உள்ளார். டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும்.

இதன் ஒரே ஒரு யூனிட்டே 1.22 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 1.32 கோடி ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

Akshay kumar buys toyota vellfire luxury mpv

இத்தகைய மிக மிக உயரிய விலையைக் கொண்டிருக்கும் காரையே அக்சய் தற்போது தனக்கு சொந்தமானதாக மாற்றியிருக்கின்றார். மேலும், இத்தகைய அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே டொயோட்டாவின் காஸ்ட்லியான கார் மாடலாகவும் வெல்ஃபையர் எம்பிவி காட்சியளிக்கின்றது. மிகவும் தாராளமான இட வசதி மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதி ஆகியவற்றைத் தாங்கியிருக்கக் கூடிய ஓர் கார் மாடலாகவும் வெல்ஃபையர் காட்சியளிக்கின்றது.

சொல்லப் போனால் இந்த காரில் பயணிக்கும்போது காரில் இருக்கின்ற உணர்வே ஏற்படாது. கப்பலில் மிதப்பதைப் போன்ற உணர்வே அதில் கிடைக்கும். மேலும், வீட்டுக்குள் இருக்கும் உணர்வை வழங்குகின்ற விதமான அம்சங்களையே டொயோட்டா இந்த காரில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், படுக்கைகளுக்கு இணையாக சாய்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கைத் தொடங்கி டிவி வரை என பலதரப்பட்ட அம்சங்கள் வெல்ஃபையரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Toyota vellfire luxury mpv

இதுதவிர, குளிர்பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக சிறிய குளிர்சாதன பெட்டி போன்றவற்றயைும் இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இதுமாதிரியான அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை இந்தியாவில் நிறைய பணக்காரர்கள் வாங்கி வருகின்றனர். குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக வெல்ஃபையர் மாறியிருக்கின்றது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாள நடிகர் மோகன்லால், சுரேஷ் கோபி, நிவின் பாலி மற்றும் இந்தி நடிகர்கள் ஆமிர் கான், அஜய்தேவ்கன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இந்த காரை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர்களின் வரிசையிலேயே தற்போது அக்சய் குமார்-ம் இணைந்திருக்கின்றார்.

மிகவும் கவர்ச்சியான வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த கார் மாடலில் அடாஸ் (ADAS) போன்ற நவீன கால தொழில்நுட்ப அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வெண்டிலேட் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகள், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களையும் இந்த காரில் அவர்கள் வழங்கி இருக்கின்றனர்.

எனவே இந்த காரில் பயணிக்கும் போது ஓர் ராயலான டிராவல் அனுபவம் கட்டாயம் கிடைக்கும். தொடர்ந்து, இந்த காரில் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எஞ்சினையே டொயோட்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 2.5 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டாருடன் சேர்த்து ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 193 பிஎஸ் மற்றும் 240 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். டிரான்ஸ்மிஷனுக்காக இ-சிவிடி கியர்பாக்ஸே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த கார் இவ்வளவு பெரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.35 கிமீ வரை மைலேஜை தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூகத்தில் தங்களுக்கான அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள பணக்காரர்கள் பெரும்பாலும் கையாளக் கூடிய ஓர் விஷயம் ஆடம்பர வாகனம். உடையைகூட மிக எளிமையாக அணியக் கூடிய செல்வந்தர்களைப் பார்த்துவிட முடியும் காஸ்ட்லியான வாகனங்களை பயன்படுத்தாத பெரும் பணக்காரர்களைப் பார்ப்பது மிகவும் அரிது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 17, 2024, 15:00 [IST]
English summary
Actor akshay kumar purchased costliest and luxurious toyota car price and model details
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+