ஆசை ஆசையாய் நடிகர் அமிதாப்பச்சன் வாங்கிய கார்!! டெல்லியில் தற்போது அலங்கோலமாக... காரணம் இதுதான்!

பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கார் ஒன்று சாலையின் ஓரத்தில் விபத்திற்குள்ளாகி நின்றிருந்தாலோ அல்லது வேறேதேனும் காரணங்களால் பழுதாகி நின்று இருந்தாலே நமது கவனம் ஒரு வினாடிக்கு அதன் பக்கம் சென்று திரும்பும். அந்த காரை வாங்கியவர் எத்தகைய சிரமங்களுக்கு உள்ளாகி வருகிறாரோ என்றுதான் அந்த நேரத்தில் நினைக்க தோன்றும்.

அப்படியிருக்கையில், கோடி ரூபாயில் விலைமிக்க லக்சரி கார் ஒன்று பழுதடைந்து ஓர் இடத்தில் ஓரங்கட்டப்பட்டு இருந்தால் அதன் உரிமையாளருக்கு அதிகளவில் பணம் நஷ்டமாகி இருக்கும். பழுதடைந்த காருக்கு இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற்றிருந்தால் பிரச்சனை இல்லை. பெரும்பாலும் லக்சரி கார்களை பணக்காரர்களும், விஐபி-களுமே வாங்குகின்றனர். இருப்பினும் அந்த கார் சேதமடைந்து நிற்கும்போது அது அந்த உரிமையாளருக்கு பெரிய தொகையில் செலவுக்கு உள்ளாக்குகிறது.

நடிகர் அமிதாப்பச்சனின் லம்போர்கினி கார், தற்போது அலங்கோலமாக!

இதை ஏன் இப்போது கூறுகிறேன் என்றால், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பயன்படுத்திய லம்போர்கினி முர்சிலாகோ கார் சிதலடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி கார்களுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவராகவே நடிகர் அமிதாப் பச்சன் முர்சிலாகோ காரை ஆசை ஆசையாய் வாங்கி இருப்பார். ஆனால் அவரது முர்சிலாகோ கார் தற்சமயம் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்த கார்கள் நிறுத்தி வைக்கப்படும் குப்பை கிடங்கு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே இந்த லம்போர்கினி காரை வேறொருவரிடம் விற்றுவிட்டார். புதியதாக இந்த லம்போர்கினி முர்சிலாகோ காரை வாங்கியவர் டெல்லியில் இந்த காரில் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் சிக்கிய காரை மீண்டும் பழுது சரிப்பார்த்து பயன்படுத்துவதற்கு சிலருக்கு பிடிக்காது. அதிலிலும் முர்சிலாகோ போன்ற லக்சரி காரை வாங்கியவர் காரை சரிசெய்து பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

நடிகர் அமிதாப்பச்சனின் லம்போர்கினி கார், தற்போது அலங்கோலமாக!

அதுமட்டுமின்றி, லம்போர்கினி முர்சிலாகோ போன்ற பல வருடங்களுக்கு முன்பே விற்பனை நிறுத்தப்பட்ட காருக்கான உதிரி பாகங்களை இந்தியாவில் பெறுவது மிகவும் கடினம். இதனாலேயே நடிகர் அமிதாப்பச்சன் வாங்கிய இந்த முர்சிலாகோ காரின் புதிய உரிமையாளர் விபத்திற்கு பிறகு காரை சரிச்செய்ய முயலவில்லை போலும். காருக்கான உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால் அது இன்னும் அதிக செலவை உண்டாக்கும்.

அதாவது, காரை சரிச்செய்வதற்கான மெக்கானிக் செலவை கூட சமாளித்துவிடலாம், ஆனால் சேதமடைந்த பாகங்களை மீண்டும் புதியவைகளாக பெறுவதற்கு ஆகும் செலவை சமாளிக்க முடியாது. நடிகர் அமிதாப்பச்சனின் முர்சிலாகோ கார் ஆனது வெள்ளை நிறத்திலானது. சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற பார்க்ஸ் சூப்பர்கார் ராலியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த லம்போர்கினி காரில் அமிதாப்பச்சனை மிகவும் அரிதாகவே காண முடிந்துள்ளது.

நடிகர் அமிதாப்பச்சனின் லம்போர்கினி கார், தற்போது அலங்கோலமாக!

லம்போர்கினி பிராண்டில் முர்சிலாகோ லக்சரி கார் மட்டுமின்றி, கல்லார்டோ, டையாப்லோ கார்களையும் நடிகர் அமிதாப்பச்சன் வாங்கியுள்ளார். இவ்வளவு ஏன், கவுண்டச் கார் கூட இந்தியாவிற்கு வெளியே அமிதாப்பச்சனுக்கு சொந்தமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த லம்போர்கினி லக்சரி கார்கள் எதுவும் அமிதாப்பச்சனிடம் இல்லை. இந்த கார்களை நிறுத்த இடம் இல்லாததாலும், அவற்றை ஓட்ட போதிய நேரம் கிடைக்காததாலும் அவற்றை விற்றுவிட்டதாக முன்னதாக டுவிட்டரில் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்து இருந்தார்.

நடிகர் அமிதாப்பச்சனின் லம்போர்கினி கார், தற்போது அலங்கோலமாக!

தற்சமயம் நடிகர் அமிதாப்பச்சனிடம் சொகுசு கார்களாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ், லெக்ஸஸ் எல்.எக்ஸ் 470, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி, மினி கூப்பர் எஸ், டொயோட்டா காம்ரி ஹைப்ரீட், பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி, மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் உள்ளிட்டவை உள்ளன. முந்தை காலங்களில் இந்த பாலிவுட் நடிகரிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரும் இருந்தது. ஆனால் அந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை சமீபத்தில்தான் அமிதாப்பச்சன் விற்று இருந்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 19, 2023, 12:26 [IST]
English summary
Actor amitabh bachchan lamborghini murcielago slowly rotting away in junkyard
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X