2 கோடி ரூபா கார்ல பேங்குக்கு வந்துட்டு போனது அவரா! வாசல்ல கூடன கூட்டத்தை பாத்துமா யார்னு தெரியல?
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). கம்பீரமான தோற்றம் கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை, இந்திய கோடீஸ்வரர்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), நடிகர்கள் பிருத்விராஜ் (Prithviraj) மற்றும் மம்முட்டி (Mammootty) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். அத்துடன் பாலிவுட் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனிடமும் (Amitabh Bachchan) லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் இருக்கிறது.
இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் அமிதாப் பச்சன் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) நிகழ்ச்சிக்கு அமிதாப் பச்சன் வந்து சென்றதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் அவரை காண பெரும் கூட்டம் கூடியிருந்ததையும் நாம் காணலாம்.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்கின் பிராண்ட் அம்பாஸிடர் (Brand Ambassador) அமிதாப் பச்சன்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த வங்கியின் நிகழ்ச்சிக்கு வர அவர் பயன்படுத்தியது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 130 வெர்ஷன் என இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரானது, 130 வெர்ஷன் தவிர, 110 மற்றும் 90 ஆகிய வெர்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அமிதாப் பச்சனின் இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 வெர்ஷனை பொறுத்தவரையில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 6 சிலிண்டர்கள் மற்றும் 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கொண்ட இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 350 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் ஆக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.84 கோடி ரூபாயாக உள்ளது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes-Benz G-Class) மற்றும் ஜீப் வ்ராங்லர் (Jeep Wrangler) ஆகிய கார்கள் உடன், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் போட்டியிட்டு வருகிறது. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லை.
இதில், 11.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அடாஸ், 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆனால் வேரியண்ட்களை பொறுத்து வசதிகள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீடித்து உழைக்கும் தன்மை, சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் அந்தஸ்தின் அடையாளம் போன்ற காரணங்களால், இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் புகழ் பெற்று விளங்குகிறது. இது ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கும் ஏற்ற சொகுசு கார் என்பது கூடுதல் பலம்.


Click it and Unblock the Notifications








