சிஎம் ஆகுறதுன்னா சும்மாவா? வேனை கூட வித்தியாசமாக தேர்வு செய்த விஜய்!
நடிகர் விஜய் தனது தவெக கட்சிக்காக கோவையில் இன்று ரோடு ஷோ நடத்திய நிலையில் அவர் பயணித்த வேன் தற்போது வைரலாக பரவி வருகிறது. வித்தியாசமான வேனில் பயணித்து அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் பயணித்த வாகனம் என்ன? இந்த குறிப்பிட்ட வேனை இவர் ஏன் பயன்படுத்தினார். ரோடு ஷோ நடத்தும் அளவிற்கு இந்த வேனில் என்ன விஷயம் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் துவங்கி நடத்தி வருகின்றார். இந்நிலையில் சமீபகாலமாக கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று கோவையில் ரோடு ஷோ நிகழ்ச்சி ஒன்ற நடத்தினார். இதில் திறந்தவெளி வேனில் நின்று தனது ஆதரவாளர்களுக்கு கையைத்து அவர்களது வரவேற்ப்பை பெற்றார். இந்நிலையில் அவர் பயணித்த வேன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக ரோடு ஷோ என்றால் திறந்த வெளி ஜீப்பில் தான் அரசியல் தலைவர்கள் பயணிப்பார்கள். அது பற்றி நமக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் இவர் வித்தியாசமான வாகனத்தில் பயணித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாகனம் குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் தேடி பார்க்க துவங்கிவிட்டனர். இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் பயன்படுத்தியது ஃபோர்ஸ் நிறுவனத்தினர் அர்பேனியா என்ற வேன் ஆகும்.
இந்த ஃபோர்ஸ் அர்பேனியா வேனை பொருத்தவரை அதிக வீல் பேஸ் கொண்ட வாகனமாக இருக்கிறது. இது 10, 13,14, 17 ஆகிய சீட்டிங் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதிக நபர்கள் பயணிக்க இந்த வாகனம் ஏற்றதாக இருக்கும். இதன் விலையை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ30.51 லட்சம் முதல் ரூ37.21 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த வேன் மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த வேனின் இன்ஜினை பொருத்தவரை 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 114 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் தறின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.இதில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. அதே நேரம் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கிடையாது. இந்தியாவில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனையில் இருக்கும் ஒரு சில வாகனங்களில் இந்த வாகனமும் ஒன்று.
இந்த வேன் லிட்டருக்கு 11 கி.மீ மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே இதன் இடவசதி தான். இந்த வேனில் தாராளமான இடவசதி இருக்கிறது. இது போக இதை ஏகப்பட்ட வழிகளில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதன் காரணமாகவே இதை பலர் வாங்கி வருகின்றனர். மேலும் இதில் ஒவ்வொரு பயணிகளுக்கும் பிரத்தியேகமான ஏசி வென்ட், யூஎஸ்பி சார்ஜர்கள், உயரமான கேப்பின் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

மேலும் இந்த வேனை ஓட்டி செல்வதும் சுலபமாக இருக்கும். ஒரு பெரிய எஸ்யூவி காரை ஓட்டுவதை போல இதை ஓட்டி செல்ல முடியும். கோடை காலங்களில் இந்த வேன் அதன் ஏசி திறனிற்காக பெயர் பெற்றதாக இருகு்கிறது. இதனால் மக்கள் பலர் இதை விரும்பி வாங்கி வருகின்றனர். இருந்தாலும் இதன் விலை அதிகம் என்ற காரணத்திற்காக இதன் விற்பனை சற்று குறைவாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஜய் போன்ற பிரபலங்கள் அரசியலுக்கு வரும் போது அவரது ஒவ்வொரு நகர்வுகளும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும். அதன்படி இந்த நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்திய வாகனம் கவனிக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான வாகனமாக இருப்பதால் பலர் இது குறித்து பேசி வருகின்றனர். இந்த வாகனம் குறித்தும் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









