68 வயசு ஆனாலும் இன்னும் அந்த ஸ்டைல் மாறவே இல்ல!! 1.5 கோடி ரூபா காரை பார்க்குறதா இல்ல அவரை பார்க்குறதானே தெரியல

டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் பலர் உள்ளனர். நம் இந்தியாவிலும் தான். குறிப்பாக, சினிமா (Cinema) பிரபலங்கள் பலரிடத்தில் டிஃபெண்டர் கார்கள் உள்ளன. ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்களை வைத்திருப்பினும், புதியதாக விலையுயர்ந்த டிஃபெண்டர் கார்களை சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது வாங்குவதை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவர் விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான டிஃபெண்டர் காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அவரையும், அவர் வாங்கியுள்ள டிஃபெண்டர் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அனில் கபூர் (Anil Kapoor), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று இருக்கலாம். பம்பாய் மாகாணமாக இருந்த சமயத்திலேயே அங்கு பிறந்த 68 வயதான அனுபவமிக்க பாலிவுட் நடிகர். மிஸ்டர் இந்தியா போன்ற வரவேற்பை பெற்ற இந்தி திரைப்படங்களின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாகியவர்.

anil kapoor spotted in defender

சமீபத்தில் 2023ஆம் ஆண்டில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு தந்தையாக நடித்து அனில் கபூர் கவனத்தை ஈர்த்திருந்தார். அந்த அளவிற்கு செல்வந்தர் கதாபாத்திரங்களுக்கு மிகவும் கச்சிதமான முக அமைப்பை கொண்டிருக்கும் நடிகர் அனில் கபூரின் நடிப்பில் அடுத்ததாக ஹிருத்திக் ரோஷனின் 'வார்-2' திரைப்படம் இந்த 2025ஆம் வருடத்திற்கு உள்ளாக திரைக்க்குவர உள்ளது.

இது இல்லாமல், நடிகை ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் 'ஆல்பா' திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் அனில் கபூர் சமீபத்தில் விலையுயர்ந்த டிஃபெண்டர் காரை வாங்கினார். இந்த நிலையில், அந்த பிராண்ட்-நியூ டிஃபெண்டர் காரில் அனில் கபூர் கெத்தாக வந்திறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

anil kapoor spotted in defender

இந்த வீடியோவில், புதிய டிஃபெண்டர் காருக்குள் இருந்து அனில் கபூர் உடன் அவரது பாதுகாப்புக்காக தனிப்பட்ட பாதுகாவலர்களும் இறங்கி வெளியே வருவதை பார்க்கலாம். டிஃபெண்டர் கார்களை லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உருவாக்குகிறது. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களை போலவே டிஃபெண்டர் கார்களும் உலகளவில் பிரபலமானவை ஆகும்.

90, 110 மற்றும் 130 என மூன்று விதமான உடலமைப்புகளில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த எண்கள் காரின் நீளத்தை குறிக்கின்றன. அதாவது, டிஃபெண்டர் 130 கார் ஆனது மிகவும் நீளமானது என்பது இதன் பொருள் ஆகும். இத்தகைய டிஃபெண்டர் 130 காரை தான் நடிகர் அனில் கபூர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சாண்டோரினி கருப்பு நிறத்திலான இந்த டிஃபெண்டர் 130 காரை கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனில் கபூர் வாங்கினார். இவர் மட்டுமின்றி, பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலர் சாண்டோரினி கருப்பு நிறத்தில்தான் டிஃபெண்டர் காரை வாங்க விரும்புகின்றனர். டிஃபெண்டர் 130 காரின் எச்.எஸ்.இ வேரியண்ட்டை நடிகர் அனில் கபூர் பயன்படுத்தி வருகிறார்.

டிஃபெண்டர் 130 எச்.எஸ்.இ காரில் 3 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அனில் கபூரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் லாங்-வீல்பேஸ் ஆட்டோபயோகிராபி கார் ஒன்றும் உள்ளது. டிஃபெண்டர் 130 ஆனது ஓர் லாங்-வீல்பேஸ் கார் ஆகும். இதில் இருந்து, லாங்-வீல்பேஸ் கார்கள் என்றால் நடிகர் அனில் கபூருக்கு தனி ஆர்வம் உள்ளதை அறிய முடிகிறது. அதாவது, முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட பிரம்மாண்டமான கார்களை விரும்பக்கூடியவராக அனில் கபூர் உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Monday, June 2, 2025, 15:52 [IST]
English summary
Actor anil kapoor spotted with his new land rover defender 130 hse
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+