இரண்டாவது மனைவிக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்! அந்த நடிகரா இவரு! முதல் மனைவி பார்த்தா பொறாமை படுவாங்க
இந்தியாவில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்களின் காட்டில் பண மழை பொழியுதா.. என கேட்கும் அளவிற்கு அந்த திரையுலகைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக சொகுசு கார்களை வாங்கும் நிகழ்வு அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பிரபல நடிகையுமான ஜான்வி கபூர் ரூ. 3 கோடி மதிப்புள்ள லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM350h) எம்பிவி ரக காரை வாங்கினார். இவரை போலவே சோனம் கபூர் ரூ. 2.12 கோடி ரூபா காரையும், ஜெய்தீப் அஹல்வாத் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு காரையும் வாங்கியிருக்கின்றார்.
இவர்களை போல இன்னும் பல நடிகர்கள் ஆடம்பர கார்களை வாங்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே, லேட்டஸ்ட்டாக சொகுசு காரை வாங்கிய பாலிவுட் நடிகர்களின் பட்டியலில் அர்பாஸ் கான்-ம் இணைந்திருக்கின்றார். இவர் மெர்சிடிஸ் பென்ஸ் இ220டி (Mercedes-Benz E220d) ஆடம்பர காரையே வாங்கியிருக்கின்றார்.

இந்த காரை அவருடைய இரண்டாவது மனைவி சூரா கான்-க்காக அவர் வாங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. நடிகரும், நடிகர் சல்மான் மற்றும் சோஹைல் கான்-இன் சகோதரரே அர்பாஸ் கான் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்தி வருகின்றார். தற்போது அவர் திரைப்பட தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இவரின் முதல் மனைவி மலாய்கா அரோரா ஆவார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். இந்த நிலையிலேயே அவர் 2023 ஆம் ஆண்டில் சூரா கான்-ஐ கரம் பிடித்தார். இவர் ஓர் மேக்-அப் ஆர்டிஸ்ட் ஆவார். மேலும், வளர்ந்து வரும் தொழில்முனைவோராகவும் இருக்கின்றார்.
இந்த நிலையிலேயே அவரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அர்பாஸ் கான், அவருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ220டி ஆடம்பர காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த கார் மாடலின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. எக்ஸ்-ஷோரூம் இந்த சொகுசு கார் மாடல் ரூ. 76.05 லட்சம் தொடங்கி ரூ. 89.15 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே ஆச்சரிய பரிசாக அர்பாஸ் கான் அவருடைய இரண்டாவது மனைவிக்கு வழங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த கார் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சின், 2.0 லிட்டர் 4 சிலிண்டர், பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் ஆகியவையே அவை ஆகும்.
இதில் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக கடைசியாக பார்த்த 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டாரே இருக்கின்றது. இது அதிகபட்சமாக 286 பிஎச்பி ஆற்றலையும், 600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ஆற்றலை வெளிப்படுத்துவதில் மட்டுமில்லைங்க அதிக சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியிருப்பதிலும் இந்த கார் தலை சிறந்ததாக காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், பெரிய தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எம்பியூஎக்ஸ் கார் இணைப்பு தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆக்டீவ் பார்க்கிங் அசிஸ்ட், 5 ட்வின் ஸ்போக் டிசைன் பேட்டர்ன் கொண்ட 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய ஓர் ஆடம்பர கார் மாடலே பென்ஸ் இ220டி வாகனம் ஆகும். இதனால்தான் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் சொகுசு காராகவும் இது காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே தன்னுடைய இரண்டாவது மனைவிக்கு நடிகர் பரிசாக வழங்கி இருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த ஆண்டும் ஆடம்பர கார்களின் விலை மிகப் பெரிய வளர்ச்சியையே காணும் என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








