அந்த பிரபல நடிகரின் மனைவி தானே இது? பென்ஸ் காரில் தோழி உடன் நல்லா ஊர் சுத்துறார்!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) கார்களுக்கு உலகம் முழுவதுமே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் சொகுசு கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் விளங்குகிறது. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. இதனாலேயே, பென்ஸ் கார்களை செல்வந்தர்கள் பலர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதை பார்க்க முடியும். மேலும், சினிமா நட்சத்திரங்கள் பலரிடமும் பென்ஸ் கார்கள் உள்ளன.

அவ்வாறு பென்ஸ் காரை பயன்படுத்திவரும் சினிமா பிரபலம் ஒருவர், தனது மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் காட்சி தந்துள்ளார். இவரது பெயர், ஷுரா கான் (Sshura Khan) ஆகும். இவர் திரைப்படங்களில் நடித்த நடிகை கிடையாது. ஆனால், பாலிவுட்டில் (Bollywood) முக ஒப்பனை கலைஞராக (Make-up Artist) பிரபலமானவராக விளங்குகிறார்.

sshura khan spotted with mercedes-benz

மேலும், இவர் பிரபல இந்தி திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அர்பாஸ் கானின் மனைவி ஆவார். 56 வயதான அர்பாஸ் கான் உடனான 34 வயதான ஷுரா கானின் திருமணம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தது. கடந்த 2024 டிசம்பரில் கூட இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

அர்பாஸ் கானின் மனைவி என்கிற பட்டத்தின் மூலமாக பாலிவுட்டில் கவனத்தை பெற ஆரம்பித்த ஷுரா கானுக்கு அதற்கேற்ப நண்பர்கள் வட்டாரமும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், அந்த தோழிகளில் ஒருவருடன் நேற்றிரவு மும்பையில் ஒரு உணவகத்திற்கு இரவு உணவு உண்பதற்காக வந்த போது போட்டோகிராபர்கள் முன் ஷுரா கான் காட்சி தந்துள்ளார்.

sshura khan spotted with mercedes-benz

இரவு உணவை முடித்துக் கொண்ட பின், தோழிகள் இருவரும் ஒன்றாக மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் ஏறி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் காட்சி தருவது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் (C-Class) என்கிற லக்சரி செடான் ரக கார் ஆகும். இந்திய மார்க்கெட்டில் இந்த பென்ஸ் கார் தற்சமயம் சி300 ஏஎம்ஜி லைன் (C300 AMG Line) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.66.25 லட்சம் ஆகும். அப்சிடியன் கருப்பு, சோடாலைட் நீலம், படாகோனியா சிவப்பு பிரைட் மற்றும் ஒபாலித் வெள்ளை என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பென்ஸ் கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஒபாலித் வெள்ளை நிறத்தில் சி-கிளாஸ் காரை ஷுரா கான் வைத்துள்ளார்.

இந்தியாவில் சி-கிளாஸ் செடான் கார் தற்சமயம் ஹைப்ரீட் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, இந்த காரில் 3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) இணைக்கப்படுகிறது. தற்போது ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இந்தியாவில் ஒரு சமயத்தில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்கள் உடன் சி-கிளாஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்பன அந்த மற்ற இரு என்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இந்த மூன்று என்ஜின் ஆப்ஷன்களிலும் என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற இந்த பென்ஸ் காருக்கு இந்தியாவில் விற்பனையில் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் மற்றும் ஆடி ஏ4 கார்கள் போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய காரை வாங்கும் அளவிற்கு ஷுரா கானிடமும் சரி, அவரது கணவர் அர்பாஸ் கானிடமும் சரி செல்வாக்கு உள்ளது. இருப்பினும், இந்த குறிப்பிட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கார் ஷுரா கானுக்கு சொந்தமானது தானா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2025, 16:06 [IST]
English summary
Actor arbaaz khan wife sshura khan spotted with mercedes benz c class
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+