நடித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம்! தந்தைக்கு மஹிந்திரா தார்... தனக்கு பென்ஸ் காரை வாங்கிய நடிகர் இவரா?

மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம். கார்கள் விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக உள்ள வாகனம், தார் ஆகும். குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படும் இந்த மஹிந்திரா வாகனத்தை தனது தந்தைக்கு பரிசாக வழங்கி சிறப்பித்த பிரபலமான சினிமா நடிகர் ஒருவர் தற்போது விலையுயர்ந்த பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். யார் இந்த நடிகர் என்பதையும், புதியதாக அவர் வாங்கியுள்ள பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மார்க்கெட்டில் இரு விதமான வெர்சன்களில் தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் (ROXX) என்பன அவை ஆகும். இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தை தான் அதிக பேர் வாங்குகின்றனர்.

actor arhaan patel

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தார் ராக்ஸின் அறிமுகத்திற்கு பிறகே மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும், நடிகர் தனது தந்தைக்கு 3-கதவு தார் வாகனத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் வாங்கி கொடுத்தார். இந்த நடிகரின் பெயர், அர்ஹான் பட்டேல் (Arhaan Patel).

உடற்பயிற்சிகளில் ஆர்வம் கொண்டவராக, கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்ட நடிகர் அர்ஹான் பட்டேல் பாலிவுட்டை சேர்ந்தவர் என்பதை இவரது பெயரை பார்த்தவுடனே அறிந்திருப்பீர்கள். ஆனால், அர்ஹான் பட்டேல் பெரிய அளவிற்கு முன்னணி நடிகராக இல்லை. மிக சில இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் மட்டுமே துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

actor arhaan patel

இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளை வைத்து பார்க்கும்போது, அடிக்கடி விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கும் மற்ற பாலிவுட் நடிகர்களை போல் இல்லாமல், எளிமையான வாழ்க்கையை விரும்பக்கூடியவராக உள்ளார். கடந்த பிப்ரவரியில், தந்தை உடன் மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று, புத்தம் புதிய தார் வாகனத்தை கேக் வெட்டி டெலிவிரி எடுத்ததை வீடியோவாக அப்போதே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் அர்ஹான் பட்டேல் பதிவிட்டு இருந்தார்.

மேலும், அந்த வீடியோவை தந்தையர் தினத்தை முன்னிட்டு சமீபத்திலும் நடிகர் அர்ஹான் பட்டேல் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் (Mercedes-Benz GLS) கார் ஒன்றை இந்த நடிகர் வாங்கியுள்ளார். தனது அம்மா உடன் சென்று ஷோரூமில் இருந்து ஜிஎல்எஸ் காரை டெலிவிரி பெறும் படங்களை வழக்கம்போல் அர்ஹான் பட்டேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த படங்களில், அர்ஹான் பட்டேலின் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் காரில் ஏற்கனவே வெள்ளை நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அதாவது, ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும் முன்னரே கார் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால், இந்த கார் ஆனது செகண்ட்-ஹேண்ட் காராக இருக்கலாம்.

முற்றிலும் வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரை நடிகர் அர்ஹான் பட்டேல் வாங்கியுள்ளார். இதன் விலை ஏறக்குறைய ரூ.1.5 கோடி ஆகும். ஜிஎல்எஸ் காரின் எந்த வேரியண்ட்டை இந்த நடிகர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஜிஎல்எஸ் கார் ஆனது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் அர்ஹான் பட்டேல் தற்போது வாங்கியிருப்பது புத்தம் புதிய ஜிஎல்எஸ் காரா அல்லது செகண்ட்-ஹேண்ட் காரா என்பது உறுதியாக தெரியவில்லை. நடிகராக இருப்பினும், எளிமையான வாழ்வை இவர் விரும்பக்கூடியவர் என்பதால், தற்போது இவர் வாங்கியிருப்பது செகண்ட்-ஹேண்ட் காராக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. தந்தைக்கு பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு தனக்கென செகண்ட்-ஹேண்ட் காரை வாங்குவது அர்ஹான் பட்டேலின் களங்கமற்ற மனதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 23, 2025, 11:50 [IST]
English summary
Actor arhaan patel bought mercedes benz gls luxury car check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+