படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய பிரேமலு பட நடிகர் பயணித்த வாகனம்.. தெய்வம் மாதிரி காப்பாற்றிய கார்!
பிரேமலு படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தைப் பிடித்த நடிகர்களில் சங்கீத் பிரதாப்-ம் ஒருவர் ஆவார். இவர் சென்ற காரே தற்போது விபத்தில் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்தின்போது அவருடன் இன்னும் சில நடிகர்களும் இருந்து உள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அர்ஜூன் அசோகன், மேத்யூ தாமஸ் மற்றும் ஸ்டண்ட் பயிற்சியாளர் ஒருவரும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்கள் அனைவருக்கம் இந்த விபத்தினால் லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதுதவிர, சாப்பாடு டெலிவரி செய்யும் நபர் ஒருவரும் இந்த கார் விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுக்கு ஆளாகி இருக்கின்றார். நல்லவேளையாக மிகப் பெரிய பாதிப்புகள் இந்த விபத்தில் யாருக்கும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த விபத்திற்கு கார் கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் என கூறப்படுகின்றது.

source: mathrubhumi மேலும், அந்த நேரத்திலேயே சாப்பாடு டெலிவரி பாய் ரிவர்ஸில் வெளியே வந்திருக்கின்றார். அப்போதே அவர் மீதும் எதிர்பாராத விதமாக அந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதில் அவருக்கு மட்டும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ப்ரோமேன்ஸ்' படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட காட்சிப் பதிவின்போதே இந்த விபத்து அரங்கேறி இருக்கின்றது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல் மற்றும் விபத்தின் படங்களை வைத்து பார்க்கையில் அவர்கள் டாடா டியாகோ காரையே பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த காரே நடிகர்களை மிகப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கின்றது. உயிர்களைக் காப்பதில் டாடா தயாரிப்புகள் (கார் மாடல்கள்) பெயர்போனவை ஆகும்.
இதையே இந்த விபத்தின் வாயிலாக டியாகோ காரும் உறுதி செய்திருக்கின்றது. டியாகோ ஓர் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் ரேட்டிங்கை பெற்ற கார் மாடல் ஆகும். மேலும், இது ஓர் மலிவு விலை கார் மாடலும் கூட. இந்த காரணங்களால்தான் இந்தியாவில் இந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்ற ஆண்டு இதே மாதத்தில் ஐந்து லட்சமாவது யூனிட் டியாகோ கார் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வெளியேற்றப்பட்ட நிகழ்வு அரங்கேறியது. இந்நேரம் இந்த கார் மாடலின் உற்பத்தி 6 லட்சத்தை நிச்சயம் தொட்டிருக்கும் என நம்பப்படுகின்றது. டாடா டியாகோ இந்தியாவில் பல அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் போன்ற பன்முகங்களிலேயே அந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் சற்றும் குறைச்சல் இருக்காது. அந்தவகையில் மிக முக்கியமான அம்சமாக இந்த காரில் இரண்டு ஏர் பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், வேக அதிகரிப்பை எச்சரிக்கும் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் டியாகவில் இடம் பெற்றிருக்கின்றன.
இதுபோன்ற அம்சங்களைக் கொண்டிருந்ததாலும், மோதல் ஆய்வின்போது அதிக மதிப்பெண் புள்ளிகளைக் பெற்றதாலுமே இந்த காருக்கு 4 நட்சத்திரங்களை குளோபல் என்சிஏபி வழங்கியது. இந்தியாவில் இந்த கார் ரூ. 5.65 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது தொடக்க நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கார்கள் விபத்துகளின்போது உயிர்களைப் பாதுகாப்பதில் பெயர்போனவையாக இருக்கின்றன. இதற்கு சான்றாகவே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. டாடா டியாகோ கார், கார் சேஸிங் நிகழ்வின்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் ஏழைகளுக்கான பாதுகாப்பு தரம்மிக்க வாகனம் ஆகும்.


Click it and Unblock the Notifications








