இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
டொயோட்டா (Toyota)-இன் விலையுயர்ந்த சொகுசு காரை நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ.1.5 கோடி என கூறப்படுகிறது. அப்படி எந்த மாதிரியான டொயோட்டா காரை இவர் வாங்கியுள்ளார் என்பதையும், அதன் சிறப்பம்சங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை அவ்வப்போது வாங்குவது வாடிக்கையான ஒன்றே. குறிப்பாக, பாலிவுட் நட்சத்திரங்கள் வாரத்திற்கு ஒரு சொகுசு கார் & பைக்குகளை வாங்குவதை பார்த்து வருகிறோம். இதன் மூலமாக, விளம்பரம் தேடி கொள்பவர்களும் இருக்கின்றனர். இந்த வரிசையில், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா புதியதாக விலையுயர்ந்த சொகுசான டொயோட்டா காரை வாங்கி உள்ளார்.

நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவை இந்தி மொழி படங்களிலும், விளம்பர வீடியோக்களிலும் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக, நம் தமிழ் மக்கள் இவரை தொலைக்காட்சி விளம்பரங்களில்தான் அதிகம் பார்த்திருப்பீர்கள். இவர் வாங்கியிருப்பது பிராண்ட்-நியூ டொயோட்டா வெல்ஃபையர் என்கிற சொகுசு எம்பிவி கார் ஆகும். இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.1.5 கோடி.
தான் வாங்கியிருக்கும் புதிய வெல்ஃபையர் காரில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா காட்சி தந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரல் பயானி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், கருப்பு நிறத்திலான வெல்ஃபையர் காரில் ஆயுஷ்மான் குர்ரானா வந்து இறங்குவதை காணலாம்.
காரின் பின் இருக்கையில் இருந்து வெளியே வரும் நடிகர் ஆயுஷ்மான், பின்னர் சுற்றியிருக்கும் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறார். ஆயுஷ்மான் வாங்கியிருப்பது, கடந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெல்ஃபையர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஆகும். அதாவது, கடந்த ஆண்டில் வெல்ஃபையர் எம்பிவி காரை டொயோட்டா நிறுவனம் கொஞ்சம் அப்டேட் செய்து இருந்தது.
டொயோட்டா வெல்ஃபையர் காரின் முக்கியமான சிறப்பம்சம் அதன் பெரிய அளவிலான க்ரில் ஆகும். மொத்தம் 6-ஸ்லாட் க்ரில் அமைப்பை வெல்ஃபையர் கொண்டுள்ளது. இந்த க்ரில் டிசைனுக்கு ஏற்ப எல்இடி ஹெட்லேம்ப்கள் இரண்டாக பிளவுப்பட்ட டிசைனில் கொடுக்கப்படுகின்றன. வெல்ஃபையரின் முன்பக்க கிரில் பகுதி முழுவதாக க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பளபளப்பான லக்சரி தோற்றத்தில் இந்த கார் காட்சியளிக்கிறது.

இந்த டொயோட்டா எம்பிவி காரின் நீளம் கிட்டத்தட்ட 5 மீட்டர்கள் ஆகும். 5 மீட்டர் நீளத்திற்கு சாலையில் மிதக்கும் கப்பல் போன்று வெல்ஃபையரின் தோற்றம் இருக்கிறது. இது போதாது என்று, கடந்த ஆண்டில் வெல்ஃபையர் காரின் உயரத்தையும், நீளத்தையும் டொயோட்டா அதிகரித்தது. வெல்ஃபையர் காரில் அளவில் நன்கு பெரியதாக 19-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.
மெமரி ஃபங்க்சன் உடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, இருக்கைகளில் பிரீமியம் லெதர் மெட்டீரியல்கள், 14 இன்ச்சில் ஃப்ளோட்டிங்-டைப் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, ADAS வசதிகள், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவற்றை பெறுகின்ற டொயோட்டா வெல்ஃபையர் காரில் 2.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் உருவாக்கும் மிக விலையுயர்ந்த சொகுசு கார் வெல்ஃபையர் ஆகும். இந்த காரை வாங்கிய முதல் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கிடையாது. ஏனெனில், இதற்கு முன் ஏற்கனவே சில நடிகர், நடிகைகள் இந்த டொயோட்டா சொகுசு காரை வாங்கி உள்ளனர். நன்கு பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் வெல்ஃபையர் காரை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications









