கையெடுத்து கும்பிட்டு விலையுயர்ந்த போர்ஷே காரை பரிசளித்த பாலையா.. வெள்ளை சட்டை அணிந்திருந்த அந்த நபர் யார்?
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் பாலையா என்கிற பாலகிருஷ்ணா-வும் ஒருவர் ஆவார். இவரே விலை உயர்ந்த போர்ஷே காரை ஒருவருக்கு பரிசாக தற்போது வழங்கி இருக்கின்றார். அந்த நபர் வேறு யாரும் அல்ல அவர் ஓர் இசையமைப்பாளர் ஆவார். சமீபத்தில் பாலையா-வின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 'டாக்கு மஹாராஜ்'. இந்த படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, படத்தின் இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர் என்றே கூறலாம்.
இத்தகைய இசையை அமைத்ததற்கே தற்போது பாலையா விலை உயர்ந்த ஆடம்பர காரையே இசையமைப்பாளருக்கு பாலையா பரிசாக வழங்கி இருக்கின்றார். படத்தில் இசையமைத்தவர் நந்தமூரி தமன் ஆவார். இவருக்கு போர்ஷே கேயன்னே (Porsche Cayenne) சொகுசு காரே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 1.42 கோடி ஆகும். இதன் உயர் நிலை வேரியண்டு ரூ. 2 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. குறிப்பிட்டவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரையே இசை வெற்றி பெற்றதற்காக இசையமைப்பாளருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார்.
காரை பரிசளித்த பின்னர் மியூசிக் டைரக்டர் தமன் காரை முதல் முறையாக எடுக்கும்போது அவர் மேலும் வளர வேண்டும் என கடவுளை பிரார்த்திக் கொண்டது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. உலக நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆடம்பர வகை கார் மாடலே கேயன்னே ஆகும்.
இதன் பேஸ்லிஃப்ட் வெர்சன் கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அதிக ஆடம்பர அம்சங்களை மட்டுமல்ல அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் தன்னுள் தாங்கி இருக்கும் ஓர் கார் மாடலே போர்ஷே கேயன்னே ஆகும். இந்த காரில் மூன்று திரை செட்-அப் வழங்கப்பட்டு இருக்கும்.
அதில் 12.6 அங்குலத்தில் இருக்கும் திரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராகவும், 12.3 அங்குலத்தில் இருக்கும் திரை சென்டர் கன்சோலாகவும், 10.9 அங்குலத்தில் இருக்கும் திரை பயணிகளுக்கான திரையாகவும் செயல்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த கார் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி6 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 353 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 248 கிமீ ஆகும். மேலும், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.7 செகண்டுகளே போதும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்படும் நிகழ்வு அரங்கேறுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாகவும் இந்த மாதரியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், ஜெயிலர் திரைப்பட வெற்றியை முன்னிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த், டைரக்டர் நெல்சன் மற்றும் மியூசிக் டைரக்டர் அனிரூத் ஆகியோருக்கு ஆடம்பர காரை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








