ரசிகர்களுக்கு புத்திமதி கூற வேண்டிய நடிகரே இப்படி இருக்காரே! எலக்ட்ரிக் காரில் வந்தவரை மடக்கி பிடித்த போலீசார்
பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவரும் பிஒய்டி நிறுவனம் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் சீலயன் 7 (SeaLion 7) என்கிற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. விலையுயர்ந்த எலக்ட்ரிக் காராக களமிறக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் சீலயன் காரை செல்வந்தர்கள் நிறைய பேர் வாங்கி வருகின்றனர். அந்த வரிசையில், பிஒய்டி சீலயன் 7 எலக்ட்ரிக் காரை வாங்கியவர் தான், நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் (Bellamkonda Srinivas) ஆவார்.
இந்த நிலையில், நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் சீயலன் 7 எலக்ட்ரிக் காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் கட்டளைக்கு இணங்க காரை நிறுத்தாமல் தப்பித்து சென்றதை தொடர்ந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், பெயரை பார்த்தவுடனே தெலுங்கு சினிமா நடிகர் (Cinema Actor) என்பதை கண்டுப்பிடித்து இருப்பீர்கள். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகனான 32 வயதான ஸ்ரீனிவாஸ், 2014இல் 'அல்லுடு சீனு' என்கிற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே நடிகை சமந்தா உடன் ஜோடி சேர்ந்து நடித்தவருக்கு அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் (Filmfare) விருது கிடைத்தது.
அதுமட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல படமாக அல்லுடு சீனு அமைந்த போதிலும், சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சில வருடங்களுக்கு இந்த நடிகருக்கு பெரியதாக திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் ஹிட் அடித்த சுந்தரபாண்டியன், ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற ஆரம்பித்த பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுக்கு 2023இல் அவரது நடிப்பில் வெளிவந்த 'சத்ரபதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில், நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் புதிய பிரச்சனை ஒன்றில் தற்போது சிக்கி உள்ளார். ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தனது பிஒய்டி சீலயன் 7 எலக்ட்ரிக் காரில் அதிவேகமாக சென்றதற்காக, இந்த தெலுங்கு நடிகரின் எலக்ட்ரிக் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஜார்னலிஸ்ட் காலனி சாலையில் காரில் அதிவேகமாக சென்ற நடிகர் ஸ்ரீனிவாஸை காரை நிறுத்தும்படி அங்கு போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கூறியுள்ளார். ஆனால், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக காரில் வேகமாக சென்ற பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் சாலையின் நோ-எண்ட்ரீக்குள் நுழைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த மற்றொரு போலீசாரும் காரை நிறுத்துமாறு கூறியப்படி நடிகரின் காரை நோக்கி வந்துள்ளார். இதனை கண்டதும் காரை ரிவர்ஸில் ஓட்டி அங்கிருந்து நடிகர் பெல்லம்கொண்டா தப்பித்து சென்றுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த பலர் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அவை வைரலாகி வருகின்றன.
இரு போலீசார் காரை நிறுத்த சொல்லியும், காருடன் நடிகர் ஸ்ரீனிவாஸ் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்தில் பணியில் இருந்த போலீசார் நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தின்போது நடிகர் பயன்படுத்திய சீலயன் 7 எலக்ட்ரிக் காரை அவரது வீட்டிற்கே சென்று பறிமுதல் செய்துள்ளனர்.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மட்டுமில்லாமல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக குற்றவியல் தண்டனை சட்டத்திற்கு கீழும் நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிஒய்டி சீலயன் 7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.48.9 லட்சத்தில் இருந்து ரூ.54.9 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விபத்துகளால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலான விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, அதிவேகமாக பயணம் ஆகும். சாலை நமக்கு மட்டும் இல்லை, எல்லாருக்கும் ஆனது என்பதை பலர் மறந்துவிடுகின்றனர். ரசிகர்களுக்கு புத்திமதி கூற வேண்டிய நடிகர்களே இவ்வாறு இருக்கும்போது வேதனையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








