சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தே ஜாகுவார் கார் வாங்கிய நடிகர்... மொத்த குடும்பத்துடன் ஷோரூமுக்கு போயிட்டாரு
ஜாகுவார் (Jaguar) கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில், கேரளாவிலும் ஜாகுவார் கார்களுக்கு நிறைய கஸ்டமர்கள் உள்ளனர். அந்த கஸ்டமர்களுள் ஒருவராக புதியதாக இணைந்திருப்பவர், மலையாள நடிகர் பிபின் ஜார்ஜ் (Bibin George) ஆவார். மலையாள சினிமா உலகில் நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்கும் பிபின் ஜார்ஜ் புதியதாக விலையுயர்ந்த ஜாகுவார் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ஜாகுவார் காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மலையாளத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோனி' திரைப்படத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மலையாள முண்ணனி நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாறன், ஜெயசூர்யா மற்றும் இந்திராஜித் சுகுமாறன் உள்ளிட்டோர் நடித்த அமர் அக்பர் அந்தோனி திரைப்படம் 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது.

அந்த சமயத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்து, ரூ.50 கோடி வசூலித்த மிகவும் குறைவான மலையாள திரைப்படங்களுள் ஒன்றாக இணைந்தது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், பிபின் ஜார்ஜ் ஆவார். இந்த படத்திற்கு துணை கதையாசிரியராக தான் பிபின் ஜார்ஜ் முதலில் படக்குழுவில் இணைந்தார்.
படங்களில் நடிக்கும் ஆர்வம் இருந்ததை அடுத்து அவருக்கும் சிறிய வேடம் அளிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலும், 2015இல் வெளிவந்த அமர் அக்பர் அந்தோனி திரைப்படம் தான் பிபின் ஜார்ஜின் சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

இதன் மூலம் மலையாள சினிமா துறையில் கவனிக்கத்தக்க நடிகராக மாறிய பிபின் ஜார்ஜ்க்கு அதன்பின் பட வாய்ப்புகள் கணிசமாக குவிய ஆரம்பித்தன. இதன் மூலம் வருடத்திற்கு சராசரியாக 2 படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்தன. அதற்கு மத்தியில் அவ்வப்போது திரைப்படங்களுக்கு திரைக்கதைகளையும் எழுதி கொடுத்துவரும் பிபிப் ஜார்ஜ் புதியதாக வாங்கியிருப்பது ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்.எஃப் (XF) கார் ஆகும்.
வெள்ளை நிறத்திலான ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரை தாய், மகள் மற்றும் நண்பர்களுடன் பிபின் ஜார்ஜ் டெலிவிரி பெறும் வீடியோவை சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நடிகர் பிபின் ஜார்ஜ் வாங்கியிருப்பது பிராண்ட்-நியூ எக்ஸ்.எஃப் கார் கிடையாது. ஏற்கனவே வேறொருவர் பயன்படுத்தி பின்னர் விற்பனை செய்யப்பட்டது ஆகும்.

ஜாகுவாரில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு எஃப்-பேஸ் (F-Pace) என்கிற ஒரேயொரு கார் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்.எஃப் காரின் விற்பனை எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டது. விற்பனையில் இருந்த சமயத்தில் எக்ஸ்.எஃப் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கடைசியாக ரூ.49.78 லட்சத்தில் இருந்து ரூ.76 லட்சம் வரையில் இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரை இப்போது முற்றிலும் புதியதாக வாங்க முடியாது என்றாலும், எஃப்-பேஸ் காரை நடிகர் பிபின் ஜார்ஜால் வாங்க முடியும். இருப்பினும், ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்பட்ட ப்ரீ-ஓவ்ண்டு (Pre-owned) காரை வாங்கி உள்ளார். பிபின் ஜார்ஜ் மட்டுமின்றி, சமீப காலமாகவே பல செல்வந்தர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் விலையுயர்ந்த கார்களை செகண்ட்-ஹேண்டில் வாங்கவே விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications









