3 கோடி ரூபாய் காரில் கெத்தாக வந்து இறங்கியது இந்த பிரபல நடிகரா? யாருடைய சகோதரர் என தெரிகிறதா?

சினிமா பிரபலங்கள் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பதை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். குறிப்பாக, பாலிவுட் நடிகர்கள் வாரத்திற்கு ஒரு கார் என வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில், பிரபல இந்தி நடிகர் ஒருவர் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் ஓர் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். யார் இந்த நடிகர் என்பதையும், ரூ.3 கோடியில் விற்கப்படும் அளவிற்கு என்ன மாதிரியான காரை அவர் வாங்கியுள்ளார் என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சினிமா நடிகர், நடிகையர் குறிப்பாக ரேஞ்ச் ரோவர் கார்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனாலேயே அவ்வப்போது யாராவது ஒரு சினிமா பிரபலம் ரேஞ்ச் ரோவர் காரை புதியதாக வாங்குவதை பார்க்க முடிகிறது. இந்த வரிசையில், பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் புதியதாக பல கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார்.

bobby deol buys range rover

பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் சகோதரர் பாபி தியோல் ஆவார். இவர் தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். புத்தம் புதிய கார் என்பதை உணர்த்தும் வகையில் காருக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. ரேஞ்ச் ரோவர் காரில் இருந்து வெளியே வந்த பாபி தியோல் விமான நிலையத்தில் இருந்த போட்டோகிராபர்களுக்கு சில போஸ்களை காட்டிவிட்டு ஏர்போர்ட்டிற்கு உள்ளே சென்றார்.

ரேஞ்ச் ரோவர் கார்களை பிரிட்டிஷ் கார் பிராண்டான லேண்ட் ரோவர் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் பாபி தியோல் வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் காரின் லாங் வீல்பேஸ் ஆட்டோபயோகிராபி வேரியண்ட் ஆகும். ஃப்யுஜி வெள்ளை நிறத்தில் பாபி தியோலின் ரேஞ்ச் ரோவர் கார் காட்சியளிக்கிறது. இத்தகைய பெயிண்ட்டில் ரேஞ்ச் ரோவர் காரின் விலை ஆனது மிக அதிகமாகும்.

bobby deol buys range rover

காரின் வெளிப்புறம் வெள்ளை நிறத்தில் இருக்க, உட்புறம் ஆனது டேன் நிறத்தில் உள்ளது. ரேஞ்ச் ரோவர் கார்களில் சூப்பர் லக்சரியான உட்பக்க கேபின் வழங்கப்படுகிறது. இந்த காரின் டேஸ்போர்டில் பிவி புரோ மென்பொருள் உடன் 13.1 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இதனுடன், 35 ஸ்பீக்கர்களை கொண்ட 1,600 வாட்ஸ் மெரிடியன் சிக்னெச்சர் சவுண்ட் சிஸ்டம், 13.7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே மற்றும் 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் பெட்ரோல், டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பாபி தியோல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். இவரது காரில் 3.0 லிட்டர், இன்லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

bobby deol buys range rover

இந்த காரில் என்ஜினின் ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது. பெட்ரோல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.60 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்தால், ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.3 கோடியை தாண்டிவிடும். இவ்வாறான விஐபிகள் மூலமாக இந்தியாவில் மார்க்கெட்டை விரிவுப்படுத்துவதில் லேண்ட் ரோவர் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

சமீபத்தில் கூட, ரேஞ்ச் ரோவர் கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய உள்ளதாக லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்து இருந்தது நினைவுக்கூரத்தக்கது. இதன் மூலமாக, ரேஞ்ச் ரோவர் கார்களின் விலைகள் இந்தியாவில் கணிசமாக குறைந்துள்ளன. தற்போது நடிகர் பாபி தியோல் வாங்கியிருக்கும் ரேஞ்ச் ரோவர் லாங் வீல்பேஸ் ஆட்டோபயோகிராபி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை முன்பு ரூ.3.16 கோடியாக இருந்தது. தற்போது இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், விலை ரூ.56 லட்சம் குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் பாபி தியோலிடம் ஏற்கனவே போர்ஷே 911 கரேரா 4எஸ், போர்ஷே கேயென்னே போன்ற விலையுயர்ந்த கார்கள் உள்ளன. இத்தகையவர் ரூ.3 கோடி மதிப்பில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார் என்பதில் பெரியதாக எந்த ஆச்சிரியமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பாபி தியோலிடம் ஏற்கனவே ரேஞ்ச் ரோவர் வோக், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 24, 2024, 11:58 [IST]
English summary
Actor bobby deol buys range rover suv check price features all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X