பாலிவுட்டில் கார் வாங்குவதில் புதிய டிரண்டை உருவாக்கும் போமன் இரானி
பாலிவுட்டின் மூத்த நடிகரான போமன் இரானி ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரை வாங்கியுள்ளார். இதை தனக்கு தானே பரிசளித்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜாகுவார் எக்ஸ்.எஃப் ஆடம்பர காரை பிரபல பாலிவுட் நடிகர் போபன் இரானி வாங்கியுள்ளார்.
இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்ட்ரா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போமன் இரானி, தனக்கு தானே ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரை பரிசளித்துக்கொண்டதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாகுவார் லேண்ட ரோவர் நிறுவனம் தயாரித்துள்ள ஜாகுவார் எக்ஸ்.எஃப் ஆடம்பர காரில், வசதிகளை பொருத்து இரண்டு மாடல்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எந்த மாடல் காரை போமன் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.

முன்னா பாய் எம்.பி.பி.எஸ், த்ரீ இடியட்ஸ் போன்ற இந்தியளவில் வெற்றிபெற்ற படங்களில் நடித்தவர் போமன் இரானி, தமிழ் நாட்டின் நடிகர் அஜித் போல, பாலிவுட்டில் கார்களை விரும்பும் நடிகர்களுக்கான பட்டியலில் போமன் இரானிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

தனக்கு தானே ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரை பரிசளித்து கொண்டதாக கூறியுள்ள போமன் இரானி, சத்தமேமில்லாமல் புதிய டிரெண்டையும் பாலிவுட் திரையுலகில் உருவாக்கியுள்ளார்.

அதாவது பாலிவுட்டில் நடிகர்கள் பலர் ப்ரீமியம், ஆடம்பரக் கார் என்றாலே பி.எம்.டபுள்யூ, மெர்சடிஸ் பென்ஸ் அல்லது ஆடி என ஜெர்மன் தயாரிப்புகளை தான் விரும்பி வந்தனர். ஆனால் தற்போது நட்சத்திரங்களின் கவனம், ஜெர்மன் நாடு அல்லாத பிற கார் தயாரிப்புகளின் மீதும் திரும்பியுள்ளது.

சமீபத்தில் பாலிவுட் நடிகையான சாக்ஷி தன்வார், ஸ்வீடன் நாட்டு தயாரிப்பான வோல்வா S90 காரை வாங்கினார், அவரை தொடர்ந்து தற்போது போமன் இரானி ஜாகுவார் கார் மாடலை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

போமன் வாங்கியிருக்கும் ஜாகுவார் எக்ஸ்.எஃப் ஆடம்பரத்திற்கான அடையாளமாக உள்ளது. குறிப்பாக மெர்சடிஸ் இ-கிளாஸ், ஆடி A6, பி.எம்.டபுள் 5 சிரீஸ் போன்ற கார்களுக்கு அதீத போட்டி தரும் வகையில் தாயாரிக்கப்பட்டுள்ளது.

2.0 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றுள்ள ஜாகுவார் எக்ஸ்.எஃப் 177 பி.எச்.பி பவர் மற்றும் 430என்.எம் டார்க் திறன் வழங்கும். மேலும் இதே மாடல் பெட்ரோல் எரிவாயூ பயன்பாட்டிலும் கிடைக்கிறது.
2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜிடு மோட்டரை கொண்டுள்ள பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த மாடல், 237 பி.எச்.பி பவர் மற்றும் 340என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஜாகுவார் எக்ஸ்.எஃப் காருக்கான இரண்டு கார்களிலுமே 8-ஸ்பீடு ஆட்டோமேடட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்.எஃப் காரிலுள்ள ஆடம்பர் வசதிகள் என்று பார்க்கும்போது, சூழ்நிலைக்கு தகுந்த மாறி மாறும் திறன் கொண்ட எல்.இ.டி விளக்குகள், தொடுதிரை கொண்ட இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம், வானிலைக்கு ஏற்றவாறு காரில் தட்பவெட்ப நிலையை மாற்றும் வசதி ஆகியவை உள்ளன.
இவற்றுடன் காரின் எஞ்சின், ஏ.சி ஆகியவற்றை ஸ்மார்ட் மூலம் இணைத்து அவற்றை இயக்க கூடிய வசதியையும் ஜாகுவார் எக்ஸ். எஃப் கார் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








