ரூ2.36 லட்சம் விலையுள்ள ஆட்டோவை வாங்கி ஏழை தொழிலாளிக்கு பரிசளித்த கூல்சுரேஷ்!வைரலாகும் வீடியோ!
நடிகர் கூல் சுரேஷ் கஷ்டப்படும் ஏழை தொழிலாளி ஒருவருக்கு சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக ஏழை மக்களுக்கு நடிகர்கள் உதவி செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படியாக கூல் சுரேஷ் ஆட்டோ வாங்கி கொடுத்த சம்பவம் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக நடிகராக இருப்பவர் கூல் சுரேஷ் சமீப ஆண்டுகளாக இவர் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு திரைப்பட விழாக்களில் பேசி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறார். தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் சீசனிலும் இவர் பங்கேற்று அதிலும் மக்களின் நன்மதிப்பை பெற்றார்.

அவ்வப்போது இவர் சமூக வலைதளங்களிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் பேசும் வீடியோக்கள் சர்ச்சைக்குள்ளாகியும் உள்ளன. வித்தியாசமாக ஏதாவது செய்கிறேன் என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகளை மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
சமீபத்தில் இவர் சென்னையில் சேர்ந்த கலீல் என்ற தொழிலாளி தனது மனைவியை இழந்து வாடி வந்த நிலையில் அவருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ளார் இதன் மூலம் அவர் தினசரி ஆட்டோ ஓட்டி அவரது வருமானத்தை பெருக்கிக் கொள்ள உதவி செய்துள்ளார்.

இதை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அவர் வழங்கியுள்ளது பஜாஜ் நிறுவனத்தின் ஆர்இ ரக ஆட்டோ ஆகும். இந்த ஆட்டோவை பல்வேறு பகுதிகளில் காண முடியும். பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த ஆட்டோவையே அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். நல்ல உழைப்பு அதே நேரத்தில் குறைவான பராமரிப்பு இருப்பதன் காரணமாக இந்த ஆட்டோ நல்ல விற்பனையில் இருக்கிறது.
கூல் சுரேஷ் வழங்கிய ஆர்இ ஆட்டோவை பொருத்தவரை சிஎன்ஜி, எல்பிஜி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய அனைத்து எரிபொருள்களிலும் இயங்கும் வகையில் வெவ்வேறு வேரியன்ட்களில் இந்த ஆட்டோவில் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான விதிமுறையின் கீழ் ஆட்டோ பயன்படுத்த வேண்டும் என்பதால் அந்நிறுவனம் அனைத்து விதமான எரிபொருளிலும் இயங்கும் வகையில் இந்த ஆட்டோவை உருவாக்கியுள்ளது.

இந்த ஆட்டோவின் சிறப்பு அம்சமே இது குறைவான பராமரிப்பு செலவில் செயல்படக்கூடிய ஆட்டோ என்பது தான். ஆட்டோவின் அளவுகளை பொருத்தவரை 2000 மிமீ வீல் பேஸூம் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஆட்டோவாக இருக்கிறது. இந்த ஆட்டோவின் உட்புறமும் போதுமான இட வசதி இருக்கும் இதனால் வயதானவர்கள் கூட எளிதாக இந்த ஆட்டோவில் ஏறிச் செல்ல முடியும்.
இந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள எல்பிஜி இன்ஜினை பொறுத்தவரை 236.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 9.25 எச்பி பவரையும் 16.18 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே எல்பிஜி வேரியண்டில் 236.2 சிசி இன்ஜின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது 9.95 எச்பி பவரையும் 17.65 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோவின் டீசல் வேரியன்டை பொறுத்தவரை 470.5சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 8.36எச்பி பவரையும், 24 என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் ஆட்டோவை பொருத்தவரை 236.2சிசி இன்ஜின் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 10.19எச்பி பவரையும் 19.2என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதன் விலையை பொருத்தவரை ரூ2.36 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா பரபலங்கள் இப்படியாக கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வரும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது இது ஒரு சமூகத்தில் நற்செயலை விதைக்கும் டிரெண்டாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து விஷயங்களில் பலர் பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார்கள். இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications









