அரை டவுசர் உடன் விலையுயர்ந்த காரில் சென்றது இந்த பிரபல நடிகரா? நண்பனின் பாசத்தில் எல்லாத்தையும் மறந்துட்டாரு!!

புதியதாக கார் வாங்கினால் அதனுள் அமர்ந்து பார்க்கிறோமோ இல்லையோ, முதலாவதாக காரை போட்டோ பிடித்து இன்ஸ்டாகிராமில் போடுவது வாடிக்கையாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில், திரைப்பட இயக்குனர் ஒருவர், தான் புதியதாக வாங்கிய பி.எம்.டபிள்யூ (BMW) காரை பிரபல நடிகரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் இவருக்கு கர்நாடகா மாநிலம் முழுவதுமே நிறைய ரசிகர்கள் உள்ளனர். ஆனால், தர்ஷனின் ஆரம்ப கால திரைப்படங்களை இப்போது பார்த்தால் நமக்கு சிரிப்பு தான் வரும். ஏனெனில், நிஜ உலகில் சத்தியமற்றவை எல்லாம் இவரது பட காட்சிகளில் இருக்கும். அதாவது, ஓடுகிற விமானத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகள்.

actor darshan drives bmw x1

இருப்பினும், சமீப காலமாக நடிகர் தர்ஷனின் திரைப்படங்கள் ஓரளவிற்கு நன்றாக ஓடுவதாக கன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தர்ஷனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கடேரா திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தருண் சுதீர் புதியதாக விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை வாங்கி உள்ளார்.

தனது அம்மா உடன் ஷோரூமுக்கு சென்று இந்த பிஎம்டபிள்யூ காரை இயக்குனர் டெலிவிரி எடுத்துள்ளார். அதன்பின்னர் ஒரு பூஜையை போட்டவுடன் நேராக அதனை நடிகர் தர்ஷனிடம் காண்பித்து தருண் சுதீர் ஆசி பெற்றுள்ளார். பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் அழகை சுற்றி சுற்றி பார்த்த தர்ஷன் பின்னர் காருக்குள் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்து, பக்கத்தில் டைரக்டரை அமர வைத்து காரில் ஒரு சின்ன ரவுண்டு சென்று வந்துள்ளார்.

actor darshan drives bmw x1

இடதுகை வலியால் அவதிப்பட்டு வந்தாலும் நடிகர் தர்ஷன் தனது அடுத்த 'டெவில்' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மோகன் பி கேரே ஸ்டூடியோவில் நடைபெற்றுவரும் இந்த படத்தின் செட்-க்கு இயக்குனர் தருண் சுதீர் தனது புதிய காரை கொண்டுவந்தார். ஹிட் கொடுத்த டைரக்டரை பக்கத்தில் அமர வைத்து நடிகர் தர்ஷன் காரை ஓட்டும் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கன்னட இயக்குனர் தருண் சுதீர் வாங்கியிருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது லக்சரியான எஸ்யூவி கார் ஆகும். ஆனால், இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ கார்களுள் இதுவும் ஒன்று. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் கிடைக்கிறது. ஆனால், இதில் எந்த என்ஜின் உடன் டைரக்டர் தருண் சுதீர் காரை வாங்கினார் என்பது தெரியவில்லை.

actor darshan drives bmw x1

பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.49.50 லட்சத்திலும், டீசல் என்ஜின் உடன் ரூ.52.50 லட்சத்திலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும். இந்த காரை ஆன்லைனிலும் புக் செய்யலாம். மாதத்தவணை திட்டங்கள் ரூ.49,999இல் இருந்து துவங்குகின்றன.

அல்பைன் வெள்ளை, பிளாக் சாப்பையர், எம் போர்டிமாஉ நீலம், ஸ்டோர்ம் பே மற்றும் ஸ்பேஸ் சில்வர் என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்தியாவில் எக்ஸ்1 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஸ்பேஸ் சில்வர் நிறத்தில் இயக்குனர் தருண் சுதீர் இந்த காரை வாங்கி உள்ளார். மற்ற பிஎம்டபிள்யூ கார்களுடன் ஒப்பிடுகையில் எக்ஸ்1 மாடலின் உட்பக்க கேபின் கொஞ்சம் சிம்பிளாக உள்ளது.

actor darshan drives bmw x1

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கன்னட நடிகர் தர்ஷனும், கடேரா திரைப்பட இயக்குனர் தருண் சுதீரும் சினிமாவில் நுழைவதற்கு முன்பு இருந்தே நீண்ட கால நண்பர்களாம். நடிகர் தர்ஷன் எப்போதோ சாதித்துவிட்டார். இயக்குனர் இப்போதுதான் கடேரா படத்தின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். முதல் வெற்றியில் கிடைத்த பொருளை தனது நண்பனிடம் காட்டி தருண் சுதீர் மகிழ்ச்சி அடைந்திருப்பது பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 8:00 [IST]
English summary
Actor darshan drives brand new bmw x1 luxury suv car check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X