சாலையில் சுற்றிய ஒன்றரை கோடி ரூபாய் கார்! உள்ளே இருந்தது அவரா! விஷயம் தெரிந்ததும் வாயடைத்து போன மக்கள்!
பெரும்பாலான திரைப்பட நடிகர் (Actors), நடிகைகள் (Actresses) விலை உயர்ந்த கார்களின் மீது பெரும் காதல் கொண்டவர்களாக உள்ளனர். சாமானிய மக்களை போல் அல்லாமல், அதிகமாக சம்பளம் கிடைப்பதால், விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பதெல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கிறது.
இதற்கு தர்ஷனும் (Darshan) விதிவிலக்கு அல்ல. பெங்களூர் (Bangalore) உள்பட கர்நாடக (Karnataka) மாநிலம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு இவரை நன்றாக தெரியும். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தர்ஷன் திகழ்கிறார். நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன.

இவர் நடிக்கும் புதிய திரைப்படம் (New Film) தொடர்பான பூஜை ஒன்று பெங்களூர் நகரில் உள்ள ஒரு கோயிலில் நடைபெற்றது. டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) சொகுசு காரில் வந்து, தர்ஷன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஆரம்ப விலையே (Price) 1.20 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

டொயோட்டா வெல்ஃபையர் காரை பொறுத்தவரையில், எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து ஆன் ரோடு விலை சுமார் 30 லட்ச ரூபாய் கூடுதலாக வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டொயோட்டா வெல்ஃபையர் காரில் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
அது 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. டொயோட்டா வெல்ஃபையர் காரில், டீசல் (Diesel) மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடையாது. இருப்பினும் இந்த காரை நீங்கள் வாங்கினால், உல்லாச கப்பலில் பயணம் செய்வது போன்ற சொகுசான அனுபவத்தை பெறலாம்.
இதன் காரணமாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் டொயோட்டா வெல்ஃபையர் கார்களை வாங்கி வருகின்றனர். மோகன்லால் (Mohanlal), பஹத் ஃபாசில் (Fahad Faasil), ஆமிர் கான் (Aamir Khan) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இவர்களிடம் எல்லாம் டொயோட்டா வெல்ஃபையர் கார் இருக்கிறது.
இந்த வரிசையில் தர்ஷனும், டொயோட்டா வெல்ஃபையர் காரை வைத்துள்ளார். இதுதவிர லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador) போன்ற விலை உயர்ந்த கார்களையும் கூட தர்ஷன் வைத்துள்ளார். கொஞ்சம் பொறுங்கள். அவரது கார்களின் பட்டியல் இன்னும் முடியவில்லை.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Land Rover Range Rover Autobiography), ஜாகுவார் எக்ஸ்கே (Jaguar XK), போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) மற்றும் ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang) ஆகிய கார்களும் தர்ஷன் வசம் இருக்கின்றன.
இது மட்டுமல்லாது, ஜீப் வ்ராங்லர் (Jeep Wrangler), மினி கூப்பர் கன்ட்ரிமேன் (Mini Cooper Countryman), ஆடி க்யூ7 (Audi Q7), பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) ஆகிய கார்களும் தர்ஷனிடம் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகர் தர்ஷனின் மிகவும் விலை உயர்ந்த கார் கலெக்ஸனை பார்க்கும்போதே, அவர் கார்களை எவ்வளவு நேசிக்க கூடியவர்? என்பது புரிகிறது. திரையுலகினரை பொறுத்தவரையில், கார்கள் அவர்களது அந்தஸ்தை காட்டும் அடையாளமாகவும் இருக்கின்றன. இதன் காரணமாகவும் பலர் விலையை பொருட்படுத்தாமல் கார்களை வாங்கி குவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








