தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவரா இவர்? ரொம்ப சிம்பிளா இந்த கார்ல வந்து இறங்குறாரே!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ், இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்தார்கள்.இவர்களுக்க தற்போது விவாகரத்தாகிவிட்டது. தற்போது ஒன்றாக வாழவில்லை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் காஸ்ட்லியான கார் ஒன்றில் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்த பிறகு பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பிறகு இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட்டானது. இதனால் இவர் பிரபலத்தின் உச்சத்திற்கே சென்றார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தாண்டி இந்தி சினிமா, ஏன் ஹாலிவுட் சினிமாக்களில் கூட நடித்துவிட்டார். அந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டார். இதற்கிடையில் தான் இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வரியாவிற்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது.

தற்போது இவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரை இவரும் சேர்ந்து பார்த்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் மும்பையில் காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இவர் ஓட்டி வந்த கார் அப்படி என்ன காஸ்ட்லியான கார்? இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வைரலான வீடியோவின்படி மும்பை விமான நிலையத்தில் நடிகர் தனுஷ் வந்திறங்கியது மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎஸ்எல் கார் ஆகும். இந்த கார் மொத்தம் இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனையாகிறது.பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் ஒரு வேரியன்டாகவும், டீசல் இன்ஜின் ஆப்ஷன் மற்றொரு வேரியன்டாகவும் விற்பனையாகிறது. இதன் விலையை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட் ரூ1.55 கோடி என்ற விலையிலும், டீசல் இன்ஜின் வேரியன்ட் ரூ1.64 கோடி என்ற விலையிலும் விற்பனையாகிறது.

இந்த காரின் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 362 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் வேரியன்டை பொருத்தவரை 375 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொ்ணடதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.1 நொடியில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சிறப்பம்சமே அதிக அளவிலான ஆக்ஸசரீஸ்கள் இருக்கிறது. இதனால் இந்த காரை ஒவ்வொருவரும் அவர்களுக்கு தேவையான படி அதன் பிராக்கடிக்கல் அம்சங்களை அப்டேட் செய்து கொள்ளமுடியும். அடுத்ததாக இதன் இன்ஜின் வெகு சிறப்பாக இருக்கிறது. பவர்ஃபுல்லான பெட்ரோல் இன்ஜின் இருப்பது வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே இந்த காரை பிரபலங்கள் பலர் வாங்கி வருகிறார்கள்.

இந்த காரில் கடந்த 2024ம் ஆண்டு கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது. அதில் காரின் முன்பக்க கிரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், கிளாஸி பிளாக் இன்செர்ட்களுடன் கூடிய அலாய் வீல்கள், எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, 2 இன்டிரீயர் தீம்கள், டிரான்ஸ்பரென்டான பானட் ஃபங்சன் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இதனால் இந்த கார் அதிக வசதி நிறைந்த காராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் தனுஷ் போன்ற பிரபல நடிகர்கள் இவ்வளவு காஸ்ட்லியான காரை பயன்படுத்துவது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் இல்லை. இவர்கள் பாதுகாப்பிற்காகவும், சமூக அந்தஸ்திற்காகவும், தங்களின் வசதிக்காகவும் இந்த காஸ்ட்லியான காரை பயன்படுத்துகிறார்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









