ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பிரபல நடிகர் ஒருவர் மிகவும் சாதாரணமான காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது வழக்கம். ஆனால் இங்கே ஒரு நடிகர் மிகவும் சாதாரணமான காரை வாங்கி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இது விலை குறைவான கார்தான் என்றாலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ளது.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா சொனெட் (Kia Sonet) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்த காரை வாங்கியிருக்கும் நடிகர் திலீப் ஜோஷி (Dilip Joshi). இவர் மிகவும் பிரபலமான சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திலீப் ஜோஷி, கியா சொனெட் காரை வாங்கியுள்ளார்.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

குடும்பத்தினருடன் ஷோரூமிற்கு சென்று அவர் காரை டெலிவரி எடுத்துள்ளார். திலீப் ஜோஷி தற்போது வாங்கியுள்ள கியா சொனெட் கார், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஸ்போர்ட்டியான டிசைன், அதிநவீன வசதிகள் மற்றும் பெட்ரோல், டீசல் இன்ஜின் தேர்வுகள் ஆகிய காரணங்களால் கியா சொனெட் மிகவும் பிரபலமான காராக திகழ்கிறது. கியா சொனெட் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியர் பாக்ஸை பொறுத்தவரை, 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, 7 ஸ்பீடு டிசிடி மற்றும் டார்க் கன்வெர்டர் ஆகிய தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. திலீப் ஜோஷியிடம் ஏற்கனவே ஆடி க்யூ 7 (Audi Q7) மற்றும் முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா (Previous-generation Toyota Innova) ஆகிய கார்கள் இருக்கின்றன.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த வரிசையில் தற்போது கியா சொனெட் காரும் இணைந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை வெறும் 6.89 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.55 லட்ச ரூபாயாக உள்ளது. இங்கே நாங்கள் குறிப்பிட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய சந்தையில் சொனெட் மட்டுமல்லாது, செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்துமே அந்தந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமான கார்களாக உள்ளன. இதில் செல்டோஸ் கார், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதே நேரத்தில் கியா கார்னிவல் கார், சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதில், செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் இதுதான். நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு மற்ற நிறுவனங்களுக்கும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா நிறுவனத்தை பொறுத்தவரையில், அதன் சொனெட் மற்றும் செல்டோஸ் ஆகிய கார்கள்தான் மிகவும் வெற்றிகரமான மாடல்களாக கருதப்படுகின்றன. கார்னிவல் கார் சொகுசு வசதிகளுடன் கூடிய விலை உயர்ந்த மாடல் என்பதால் அதன் விற்பனை எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. ஆனால் சொனெட், செல்டோஸ் மாடல்களின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

ரொம்ப சிம்பிளா இருக்காரே... மிகவும் சாதாரணமான காரை வாங்கிய பிரபல நடிகர்... விலை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருவதுதான் கியா நிறுவனத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. வரும் காலங்களிலும் கியா நிறுவனத்திடம் இருந்து பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor dilip joshi buys kia sonet
Story first published: Saturday, November 6, 2021, 18:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X