ரூ.1.93 கோடி மதிப்பில் நடிகர் துல்கர் சல்மான் வாங்கியுள்ள புதிய கார் இதுதான்..!!

Written By:

நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் போர்ஷே பனமேரா செடான் மாடல் காரை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். மேலும் இவர் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியின் மகன்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

திரையுலகிற்கு வருவதற்கு முன்னதாக துல்கர் சல்மான், அமெரிக்காவின் பர்ட்யூ பல்கலைகழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பட்டம் பெற்றவர்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

சிறுவயதில் இருந்தே கார் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்கள் மீது பெரிய ஈர்ப்பை கொண்டுவராக இருந்துள்ளார்.

ஆனால் சினிமாவில் நடிக்க அழைப்புகள் வர, ஆட்டோமொபைல் துறையை விடுத்து திரையுலகை நாடினார்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

தற்போது மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் துல்கர்,

அவர் நடிக்கும் படங்களில் கார் மற்றும் பைக்குகள் சார்ந்த காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது வழக்கம்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

முன்னதாக பிஎம்டபுள்யூ இ46 எம்3, மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்.எஸ் ஏஎம்ஜி, போர்ஷே 997 911 கர்ரேரா எஸ், டொயோட்டா சப்ரா உட்பட

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

பிஎம்டபுள்யூ மோட்டோராடு ஆர்1200 ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக், ட்ரையம்ப் போனவில்லே என துல்கர் சல்மானிடம் இருக்கும் மோட்டார் உலகம் பிரம்மாண்டமானது.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

தற்போது இந்த பிரம்மாண்ட வாகன கலெக்‌ஷனில் துல்கர் புதியதாக இணைத்துள்ள கார் தான் போர்ஷே பனமேரா டர்போ செடான்.

துல்கரின் குடும்பத்தில் போர்ஷே கார் வைத்திருப்பது இவர் மட்டுமல்ல, அவரது தந்தையும் நடிகரான மம்மூட்டியும் போர்ஷே தயாரிப்புகளின் ரசிகர்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

நடிகர் மம்மூட்டி ஏற்கனவே பிரத்யேகமாக போர்ஷே பனமேரா மற்றும் கெயான் எஸ் எஸ்யூவி கார்களை பயன்படுத்தி வருகிறார்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

2017 ஜெனிவா மோட்டார் ஷோவின் போது போர்ஷே அறிமுகப்படுத்திய மாடல் தான் போர்ஷே பனமேரா டர்போ கார்.

ஜெனிவா கண்காட்சிக்கு பிறகு இந்த காரை மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு போர்ஷே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

சர்வதேச போர்ஷே பனமேரா டர்போ கார் பனமேரா, பனமேரா இ-ஹைஃபிரிட் மற்றும் பனமேரா டர்போ என மூன்று வித தேர்வுகளில் வெளிவருகிறது.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

இந்த காரின் ஒவ்வொரு மாடலும் ஸ்டார்ண்டர்டு, எக்ஸிக்யூட்டிவ் மற்றும் டூரிஸ்மோ என மூன்று வேரியண்டுகளை கொண்டு இருக்கும்.

எம்எஸ்பி பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகும் இந்த கார் முன்பக்க எஞ்சின், ரியர் வீல் டிரைவ் அடிப்படையில் வடிவமைக்கப்படுகிறது.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

போர்ஷே பனமேரா டர்போ கார் 4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சினில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 543 பிஎச்பி பவர் மற்றும் 770 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

அசாத்திய செயல்திறன் மற்றும் அதிரடி வேகத்தை வழங்கும் காரின் 4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் 8-ஸ்பீடு பிடிகே கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் போர்ஷே பனமேரா டர்போ கார் எட்டிப்பிடித்து விடும். மேலும் இதனுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 306 கி.மீ

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

இந்தியாவில் இருக்கும் நடிகர்கள் பலர் ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அதில் அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

நடிகர துல்கர் சல்மான் கலெக்‌ஷனில் இடம்பிடித்த புதிய கார்..!!

ஆட்டோமொபைல் துறையில் பட்டம் பெற்ற துல்கர் சல்மான் இவர்களில் இருந்து தனித்து விளங்குகிறார்.

இந்தியாவில் போர்ஷே பனமேரா டர்போ கார் ரூ.1.93 கோடி (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலை பெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Actor Dulquer Salmaan’s New Ride Is A Brand New Porsche Panamera Turbo. Click for Details...
Story first published: Friday, December 1, 2017, 12:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark