ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

தனது புதிய படத்தின் போஸ்டருடன் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டங் காரில் சறுக்கல் சாகசங்களை மேற்கொண்டு பிரபல நடிகர் துல்கர் சல்மான் ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

பொதுவாகவே பெரும்பாலான நடிகர்களுக்கு கார்கள், பைக்குகள் என்றாலே பிடித்திருக்கும். அதிலும் குறிப்பாக மலையாள நடிகர்களை பற்றி சொல்லவே வேண்டாம். அத்தகையவர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மானிடம் ஏகப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார்களும், விலையுயர்ந்த பைக்குகளும் உள்ளதை இதற்கு முன் பார்த்துள்ளோம்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

துல்கரின் தந்தையான முன்னணி மலையாள நடிகர் மம்முட்டிக்கும் கார்கள் என்றாலே இப்போதும் கொள்ளை பிரியம். இவர்கள் இருவரும் இணைந்து தாங்கள் சேகரித்த கார்களை 369 கேரேஜ் என்ற பெரியரிலான கேரேஜில் வரிசைக்கட்டி நிற்க வைத்துள்ளனர். ஆனால் நாம் பார்க்க போகும் இந்த செய்தியில் துல்கர் வேறொரு நபரது கஸ்டம் ஃபோர்டு மஸ்டங்கில் சறுக்கல் சாகசங்களை மேற்கொண்டுள்ளார்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

நடிகர் துல்கர் சல்மான் சொகுசு கார்களிலும், ஸ்போர்ட்ஸ் காரகளிலும் பல முறை காட்சி தந்துள்ளார். ஆனால் இவ்வாறு கேமிராவிற்கு முன்னிலையில் கார் ஒன்றில் ஸ்டண்ட்களை செய்வது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை. சில மாதங்களுக்கு முன்பு சாலை விதிகளை மீறி நோ எண்ட்ரி சாலையில் துல்கர் தனது போர்ஷே காரில் சென்றது வைரலாகியது.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

ஆதலால் இம்முறை கார் சாகசங்களை மேற்கொள்வதில், யாருக்கும் எந்த விதத்திலும் பிரச்சனையாக இருந்துவிட கூடாது என்பதில் இவர் கவனமாக இருந்துள்ளார். இதன் விளைவாக, மூடப்பட்ட பகுதிக்குள் தற்போதைய ஸ்டண்ட்களை துல்கர் தன் ரசிகர்கள் முன் செய்து காட்டியுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் காரில் அவருடன் வீடியோவை பதிவு செய்தவாறு வேறொரு நபரும் இருப்பதை காணலாம்.

இந்த நபர் தான் இந்த கஸ்டம் ஃபோர்டு மஸ்டங் காரின் உரிமையாளர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் காருக்குள் இருந்தப்படி வீடியோவை பதிவு செய்ய, காருக்கு வெளியே ஒரு கேமிரா காரின் இயக்கத்தை பதிவு செய்துள்ளது. பிறகு இவை அனைத்தையும் ஒன்றாக தொகுத்து நடிகர் துல்கர் சல்மான் தனது அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

நடிகர் துல்கரின் புதிய படமான ‘குரூப்' கேரளா உள்பட நமது தமிழக திரையரங்குகளிலும் ஓடி கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக நடத்தப்பட்ட கார் சாகசமே இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த துல்கர் சல்மானை ரசிகர்களும், படக்குழுவினரும் கேட்டு கொண்டதற்கிணங்க இந்த ஸ்டண்ட்களை அவர் செய்துள்ளார்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

மேலும், இதற்காக இந்த ஃபோர்டு மஸ்டங் கார் ‘க்ரூப்' பட போஸ்டருடன் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் துல்கர், பிறகு தனது பட போஸ்டருடன் ஸ்டைலாக நின்றிருந்த இந்த ஃபோர்டு மஸ்டங்கை நோக்கி நகர்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

அதன்பின் காரை சில மீட்டர் தூரத்திற்கு இயக்கி பார்த்தவர், பிறகு காரில் பவர்புல்லான ஸ்டண்ட்களை செய்ய ஆரம்பிக்கிறார். இதனை உள்ளே இருக்கும் மற்றொரு நபர் எதிர்பார்த்தாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் துல்கர் இத்தகைய அசரடிக்கும் ஸ்டண்ட்களை புரிய ஆரம்பித்தவுடன் அவரது முகத்தில் மிகுந்த மகிழ்ச்சியினை காண முடிகிறது. துல்கரும் மிகுந்த சந்தோஷமாக இந்த ஸ்டண்ட்களை செய்துள்ளார்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

மூடிய பரப்பிற்குள் இத்தகைய ஸ்டண்ட்களை வைத்து கொள்ளலாம் என துல்கர் சல்மான் அறிவுரை வழங்கியதாக பிறகு வி-லாக்கர் தெரிவித்துள்ளார். ஃபோர்டு மஸ்டங் உண்மையில் லெஜெண்ட்ரி ஸ்போர்ட்ஸ் கார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இத்தகைய ஸ்டண்ட்களை மேற்கொள்வதற்கு பெரும்பாலான கார் ஆர்வலர்களும் மஸ்டங்கை தான் தேர்வு செய்வர்.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

இந்த அமெரிக்க ஸ்போர்ட்ஸ் காரின் பழைய மாடல்களை இப்போதும் இந்தியாவில் சில பகுதிகளில் காணலாம். ஆனால் மஸ்டங்கை அதிகாரப்பூர்வமாக 2016இல் தான் ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பின் ஃபோர்டு மஸ்டங்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் வேகமாக அதிகரிக்க துவங்கியது.

ஃபோர்டு மஸ்டங்கில் ஸ்டண்ட் செய்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல நடிகர்!! இந்த தடவை ரொம்ப உஷாராக இருந்துள்ளார்!

இதனால்தான் இந்தியாவில் இருந்து வெளியேறவுள்ளதாக ஃபோர்டு அறிவித்தாலும், சிபியூ முறையில் மஸ்டங் ஸ்போர்ட்ஸ் கார் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது. மஸ்டங்கில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜினை தயாரிப்பு நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 395 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. சர்வதேச மஸ்டங் மாடல் இந்திய மஸ்டங் மாடலை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Dulquer Salmaan drift a custom wrapped Ford Mustang
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X