நடிகர் துல்கர் சல்மானின் மகளை பார்த்து இருக்கீங்களா? அப்பா வாங்கிய புது பைக்கில் ஜாலியா ஒரு ரைடு!!
துல்கர் சல்மான் (Dulquer Salmaan), பிரபல மலையாள நடிகரான இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அளவில் பிரபலமான நடிகராக விளங்கும் துல்கர் சல்மான் பல நிறுவனங்கள் உடன் விளம்பர பிராண்ட் தூதராக உள்ளார். அத்தகைய நிறுவனங்களுள் ஒன்று, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) உருவாக்கக்கூடிய அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) ஆகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கான எஃப்77 (F77) உடன் மார்க்கெட்டில் நுழைந்த போது, மக்கள் மத்தியில் கவனத்தை பெறுவதற்காக நடிகர் துல்கர் சல்மான் உடன் நுழைந்தது.
பிரபல மலையாள நடிகரான மம்முட்டி (Mammooty)-இன் மகனான துல்கர் சல்மான், அல்ட்ராவொய்லெட்டின் எஃப்77 பைக்கை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே தனக்கான எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை வாங்கினார். துல்கர் சல்மானுக்காக பிரத்யேகமான எஃப்77 லிமிடெட் எடிசன் பைக்கை அல்ட்ராவொய்லெட் நிறுவனம் உருவாக்கி கொடுத்தது.

மேலும், அல்ட்ராவொய்லெட் நிறுவனம் உருவாக்கிய முதல் பைக் என்பதை குறிக்கும் விதமாக '001' என்கிற ஸ்டிக்கர் இந்த பைக்கில் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க அல்ட்ராவொய்லெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக் உடன் நடிகர் துல்கர் சல்மான் தனது மகள் மர்யம் அமேரா (Maryam Ameerah) உடன் காட்சி தந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தில், வீட்டின் வளாகத்திற்குள் தனது எஃப்77 லிமிடெட் எடிசன் பைக்கில் மகள் மர்யம் அமேராவை முன்னால் அமர வைத்துக் கொண்டு பின்னால் துல்கர் சல்மான் அமர்ந்திருக்கும் காட்சியை பார்க்க முடிகிறது. மகளை இவ்வாறு முன்னால் அமர வைத்துக் கொண்டு நிச்சயமாக பொது வெளியில் துல்கர் சல்மான் பைக்கை ஓட்டியிருக்க மாட்டார் என நம்புகிறோம்.
நடிகர் துல்கர் சல்மானிடம் உள்ள அல்ட்ராவொய்லெட் எஃப்77 லிமிடெட் எடிசன் ஆனது வழக்கமான எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை காட்டிலும் ஆற்றல்மிக்கது மற்றும் தோற்றத்தில் வேறுப்பட்டது ஆகும். இத்தகைய எஃப்77 லிமிடெட் எடிசன் பைக்கை துல்கர் சல்மான் மட்டுமின்றி இந்தியாவில் இன்னும் 76 பேர் வாங்கியுள்ளனர். மொத்தமாகவே 77 எஃப்77 லிமிடெட் எடிசன் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்வது என்கிற முடிவோடு அல்ட்ராவொய்லெட் செயல்பட்டது.
அனைத்து 77 எஃப்77 லிமிடெட் எடிசன் பைக்குகளும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்த எலக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 40.2 பிஎச்பி மற்றும் 100 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 10.3kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது.
இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 307கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர் ஒன்றில் பொருத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரி இதுவாகும். வீட்டு உபயோக மின்சாரத்தை கொண்டு இதனை வெறும் 7- 8 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம். 0-இல் இருந்து 100km/h வேகத்தை இந்த எலக்ட்ரிக் பைக்கில் வெறும் 7.8 வினாடிகளில் எட்டிவிடலாம்.
எஃப்77 லிமிடெட் எடிசன் எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 152கிமீ ஆகும். கனெக்ட்டிவிட்டி வசதிகள் மற்றும் இ-சிம் (eSIM) வசதியும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் உள்ளது. அல்ட்ராவொய்லெட் நிறுவனத்தில் இருந்து ஷாக்வேவ் என்கிற எலக்ட்ரிக் பைக்கும், டெசராக்ட் (Tesseract) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் (Electric Scooter) சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா நடிகர்களில் ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட நடிகர்களுள் துல்கர் சல்மானும் ஒருவர். தந்தையை போன்று '369' என்கிற பெயரில் கேரேஜ்ஜை நடத்திவரும் நடிகர் துல்கர் சல்மானின் கேரேஜில் நிற்கும் வாகனங்களுள் இந்த அல்ட்ராவொய்லெட் எஃப்77 லிமிடெட் எடிசனும் ஒன்றாகும். 2023இல் டெலிவிரி எடுத்து 2 வருடங்களான நிலையில் இப்போதும் இந்த பைக்கை துல்கர் சல்மான் பத்திரமாக பாதுகாக்கிறார் என்பது ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








