அஜித்துக்கு டப்பிங் கொடுப்பவரை நிறைய பேர் பார்த்திருக்க மாட்டீங்க! ஷோரூமுக்கு கமுக்கமா வந்துட்டு போயிருக்காரு!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தல் இருந்து கடந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தார் ராக்ஸ் (Thar ROXX) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே விற்பனையில் இருந்த 3-கதவு தார் வாகனத்தின் 5-டோர் வெர்சனாக புதிய தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும், 5-கதவு தார் வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்த அளவிற்கு சிறப்பான வரவேற்பு என்றால், பாமர மக்களை தாண்டி சினிமா பிரபலங்களும் தார் ராக்ஸ் வாகனத்தை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது ஒரு நடிகர் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கி உள்ளார். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இவரை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர் ஒரு பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஆவார். ஆனால், இவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

தற்போது மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியிருக்கும் இந்த பாலிவுட் நடிகரின் பெயர், எய்ஜாஸ் கான் (Eijaz Khan). 1999ஆம் காலக்கட்டத்தில் இருந்தே இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துவரும் 49 வயதான எய்ஜாஸ் கான், கடந்த 2023ஆம் ஆண்டில் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் பிரபல நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி 1,100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டிய 'ஜவான்' (Jawan) திரைப்படத்தில் 'மனீஷ் கெய்க்வாட்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாலிவுட்டை தாண்டி நடிகர் எய்ஜாஸ் கான் தெலுங்கில் ஒரேயொரு திரைப்படத்தை தவிர்த்து தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தது கிடையாது. ஆனால், இவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடையே பிணைப்பு உள்ளது என எதை வைத்து சொல்கிறோம் என்றால், தமிழில் ஹிட் ஆகி இந்தியில் டப்பிங் செய்யப்படும் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு இந்தி டப்பிங் கொடுப்பது எய்ஜாஸ் கான் ஆவார்.

தெலுங்கு திரைப்படங்கள் சிலவற்றிற்கும் டப்பிங் கொடுத்துள்ளார் என்றாலும், அதனை காட்டிலும் தமிழ் திரைப்படங்களுக்கு தான் அதிகமாக இந்தி டப்பிங் கொடுத்துள்ளார். குறிப்பாக, நடிகர் அஜித்குமாருக்கு பெரும்பாலும் இந்தி டப்பிங் கொடுப்பது எய்ஜாஸ் கான் ஆவார். ஏனெனில், நடிகர் அஜித்தின் உடல் மொழிக்கும் எய்ஜாஸ் கானின் குரலுக்கும் நல்ல பொருத்தம் உள்ளது.
நடிகர் அஜித்குமாரின் விஸ்வாசம் (Viswasam) மற்றும் துணிவு (Thunivu) திரைப்படங்களில் ஹீரோவுக்கு டப்பிங் கொடுத்தது மட்டுமின்றி, நடிகர் விஜய்யின் வாரிசு (Varisu) மற்றும் லியோ (Leo) திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு இந்தி மொழியில் நடிகர் எய்ஜாஸ் கான் டப்பிங் கொடுத்துள்ளார். இவ்வாறு, நடிப்பை தாண்டி பல்வேறு விஷயங்களில் ஈடுப்பட்டுவரும் எய்ஜாஸ் கான் புதியதாக மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கி உள்ளார்.
தந்தை உடன் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை நடிகர் எய்ஜாஸ் கான் டெலிவிரி பெறும் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எய்ஜாஸ் கானின் முற்றிலும் வெள்ளை நிறத்திலான தார் ராக்ஸ் வாகனத்தை காணலாம். இதனை 'எவரெஸ்ட் வெள்ளை' (Everest White) என மஹிந்திரா அழைக்கிறது.
இது இல்லாமல், நெபுலா நீலம், ஸ்டீல்த் பிளாக், டீப் ஃபாரஸ்ட், பர்ண்ட் சியான்னா, பேட்டில்ஷிப் கிரே மற்றும் டாங்கோ சிவப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் மஹிந்திரா தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன.
2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 160 எச்பி மற்றும் 330 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 175 எச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் பார்ப்பதற்கும் மிகவும் ஸ்டைலிஷான வாகனம் ஆகும். ஆதலால், இதனை தாராளமாக நடிகர் எய்ஜாஸ் கான் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். மேலும், மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய ஆஃப்-ரோடு வாகனம் ஆகும்.


Click it and Unblock the Notifications








