விலைமிக்க பி.எம்.டபிள்யூ காரை டெலிவிரி எடுத்தது இந்த நட்சத்திர தம்பதியா! இவர்களால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்

சினிமா நட்சத்திர ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா தம்பதியினர் புதியதாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் லக்சரி காரை சொந்தமாக வாங்கியுள்ளனர். காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படங்களையும், இந்த பிஎம்டபிள்யூ காரை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மலையாள சினிமா உலகின் பிரபலமான நட்சத்திர தம்பதி ஃபஹத் பாசில் மற்றும் நஸ்ரியா. மலையாள சினிமா உலகில் மட்டுமின்றி, இவர்கள் இருவரும் தென்னிந்தியா முழுவதுமே நன்கு பிரபலமானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, நமது தமிழ் சினிமா உலகில் இந்த நிஜ உலக தம்பதியினருக்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளது.

fahadh - nazriya buys bmw 7 series

இந்த சினிமா ஸ்டார் தம்பதியிடம் ஏற்கனவே பல்வேறு லக்சரி கார்கள் உள்ளன. இதில் புதியதாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் காரை இணைத்து கொண்டுள்ளனர். ஃபஹத் பாசில் - நஸ்ரியா தம்பதி வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740ஐ என்ற பெட்ரோல் வேரியண்ட்டை ஆகும். கொச்சியில் உள்ள இவிஎம் ஆட்டோகிராஃப்ட் என்ற டீலர்ஷிப் மையத்தில் இருந்து இந்த காரை ஃபஹத் பாசில் -நஸ்ரியா தம்பதி டெலிவிரி பெற்றுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் லம்போர்கினி உருஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களை இந்த தம்பதி வாங்கி இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது பிஎம்டபிள்யூ 740ஐ காரை டெலிவிரி எடுத்துள்ளனர். மலையாள சினிமா உலகை பொறுத்தவரையில், இந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் பிஎம்டபிள்யூ 730 எல்டி இண்டிவிட்யூவல் எம் ஸ்போர்ட் எடிசன் காரை மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான ஆசிஃப் அலி வாங்கி இருந்தார்.

அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் கார் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.70 கோடி ஆகும். இந்தியாவில் விலைமிக்க பிஎம்டபிள்யூ செடான் காராக விளங்கும் 7 சீரிஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை இந்த ஜூலை மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளதாக பிஎம்டபிள்யூ அறிவித்து இருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

இதற்கேற்ப சில அப்டேட்களும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அப்டேட்டாக, பனோராமிக் சன்ரூஃப் மற்றும் நிலை-2 அடாஸ் வசதிகள் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அடாஸ் வசதிகளில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன. 7 சீரிஸின் எலக்ட்ரிக் வெர்சனான ஐ7-இல் அடாஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விலையில் பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் காரை ஃபஹத் பாசில் வாங்கியிருந்தால், அவரது 7 சீரிஸ் காரிலும் பனோராமிக் சன்ரூஃப் மற்றும் அடாஸ் வசதிகள் இடம்பெற்றிருக்கும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் இந்தியாவில் தற்சமயம் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. டீசல் என்ஜின் உடன் கிடைப்பதில்லை.

இந்த வகையில், 3 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பிஎம்டபிள்யூ 7 சீரிஸில் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 380 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் கூடுதலாக 18 எச்பி ஆற்றலை பெறலாம்.

இந்த பெட்ரோல் என்ஜின் + எலக்ட்ரிக் மோட்டார் செட்அப் உடன் 8-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஎம்டபிள்யூ காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். 7 சீரிஸ் செடான் இந்தியாவில் மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தென்னிந்திய அளவில் பிரபலமான சினிமா நட்சத்திர ஜோடிக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போன்ற சொகுசு காரை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அதுமட்டுமின்றி, 7 சீரிஸ் இந்தியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் பிஎம்டபிள்யூ கார் ஆகும். ஆதலால், ஓர் புத்துணர்ச்சியான மாடர்ன் தோற்றத்திலான காரையே இவர்கள் டெலிவிரி பெற்றுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 6, 2023, 22:57 [IST]
English summary
Actor fahadh faasil and nazriya takes delivery bmw 7 series
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+