10 கோடி ரூபாயில் கார் வாங்கியது பற்றி ஒரு பேச்சும் வெளிவரல! பான் இந்தியா நடிகர் ஆக மாறியவரின் புதிய ஃபெராரி!
ஃபெராரி (Ferrari) கார்களை பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்? அதிலிலும் குறிப்பாக, கேரள மக்களுக்கு சூப்பர் கார்கள் என்றாலே தனி ஆர்வம் உண்டு. அப்படியிருக்க ஃபெராரி கார்களை மட்டும் மலையாளத்தவர்கள் வாங்காமல் விட்டு வைப்பார்களா என்ன? ஃபெராரி கார்கள் விலையுயர்ந்தவை ஆக இருப்பினும் மலையாள சினிமா (Cinema) துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஃபெராரி கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது ஃபெராரி காரை வாங்கியிருக்கும் மலையாள நடிகர், ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) ஆவார். மலையாள சினிமா துறையில் அடிக்கடி விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்களில் முக்கியமான நடிகர், ஃபகத் ஃபாசில் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு திரைப்பட வாய்ப்புகளை போன்று சொகுசு கார்களும் இவரிடம் கொட்டிக் கிடக்கின்றன.

லம்போர்கினி (Lamborghini), போர்ஷே (Porsche), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), லேண்ட் ரோவர் (Land Rover) என உலகின் பல பிரபலமான பிராண்ட் கார்கள் நடிகர் ஃபகத் ஃபாசிலிடம் உள்ளன. இருப்பினும், ஆசை அடங்காத இவர் தற்போது புதியதாக வாங்கியிருப்பது, பிராண்ட்-நியூ ஃபெராரி புரோசாங்குவே (Purosangue) கார் ஆகும்.
இதுதொடர்பான காரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) நிறுவனமான ஃபெராரிக்கு இந்தியாவில் மொத்தமாகவே வெறும் மூன்று டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms) மட்டுமே உள்ளன. ஒன்று, தலைநகர் டெல்லியிலும், மற்ற இரண்டு மும்பை மற்றும் பெங்களூருவிலும் உள்ளன.

கேரளாவுக்கு அருகாமையில் இருப்பதால், பெங்களூருவில் உள்ள ஃபெராரி ஷோரூம் மூலமாகவே பிராண்ட்-நியூ புரோசாங்குவே காரை நடிகர் ஃபகத் ஃபாசில் டெலிவிரி பெற்றிருக்க கூடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இவர் ஃபெராரி காரை வாங்கியிருப்பது டெல்லியில் உள்ள ஷோரூம் வாயிலாக ஆகும். ஆனால், புத்தம் புதிய ஃபெராரி புரோசாங்குவே கார் உடன் நின்று ஃபகத் ஃபாசில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதுவும் தற்போதைக்கு வெளிவரவில்லை.
ஃபகத் ஃபாசில் பெரும்பாலும் தான் வாங்கும் கார்களை வீட்டிற்கே வந்து டெலிவிரி (Delivery) செய்ய வைப்பதால், தற்போது டெல்லியில் ஃபெராரி ஷோரூமில் காட்சி தந்துள்ள அவரது புரோசாங்குவே காரையும் ஹோம் டெலிவிரி தான் செய்வார் என எதிர்பார்க்கிறோம். ஃபகத் ஃபாசிலின் இந்த புரோசாங்குவே கார் முற்றிலும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்த வெள்ளை நிறத்தை 'பியான்கோ செர்வினோ' என ஃபெராரி நிறுவனம் அழைக்கிறது. காரின் வெளிப்பக்கம் இவ்வாறு பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் இருக்க, உட்பக்கம் கண்ணை கவரும் இளம் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீல நிறத்தை 'அஸுர்ரோ சாண்டோரினி' என அழைக்கின்றனர். வெள்ளை- நீலம் நிறங்களின் கலவை அருமையாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
புரோசாங்குவே காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஃபெராரி நிறுவனம் உருவாக்கிய முதல் எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். மேலும், ஃபெராரி உருவாக்கியதிலேயே விலையுயர்ந்த கார்களுள் இதுவும் ஒன்றாகும். லம்போர்கினி உருஸ் (Urus) மற்றும் அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் (Aston Martin DBX) கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் ஃபெராரி புரோசாங்குவே காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே சுமார் ரூ.10 கோடி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10 கோடி ரூபாய் என்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு (On-road) விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, இவ்வாறான கார்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பதிற்கு ஏற்ப கூடுதல் ஆப்ஷன்கள் உடன் வாங்குவார்கள் என்பதால், அதற்கு சில கோடி ரூபாய்கள் கூடுதலாக செலவாகும். ஆக மொத்தத்தில், இந்த புரோசாங்குவே காருக்கு ரூ.15 கோடிக்கும் அதிக தொகையை நடிகர் ஃபகத் ஃபாசில் செலவு செய்திருப்பார் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









