இந்த காருக்கு பின்னால் இப்படியொரு கதையா? பகத் பாசில் உடன் படம் முழுக்க வந்த பழைய டொயோட்டா கார்!
பகத் பாசில் (Fahad Fazil) நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்து பலத்த வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் ஆவேஷம். இந்த படத்தில் பகத் பாசில் முழுக்க முழுக்க தனது டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis) காரில் வருவதுபோல் காட்சிப்படுத்தி உள்ளனர். தரமானதாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பயன்படுத்தும் அளவிற்கு இந்த டொயோட்டா காரில் அப்படி என்ன உள்ளது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
மலையாள திரைப்பட நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில் தனது அரக்கத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டு வருகிறார். படத்திற்கு படம் இவரது நடிப்பு திறமை வளர்ந்துக் கொண்டே போகிறது. மலையாளத்தை தாண்டி, தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் பகத் பாசில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கன்னட மொழியிலும் ஒரு திரைப்படத்தில் பகத் பாசில் நடித்துள்ளார்; அந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. 'ஆவேஷம்' என்கிற பெயரில் திரைக்குவந்த அந்த திரைப்படத்தில் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமின்றி, பக்த் பாசில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. இந்த படத்தின் மூலமாக, கன்னட ரசிகர்களையும் கவர்ந்துள்ள பகத் பாசில், முன்னணி தென்னிந்திய நடிகராக உருவெடுத்துள்ளார்.
ஆவேஷம் திரைப்படத்தின் கதை என்னவென்றால், 3 பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக பெங்களூருக்கு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு சில பிரச்சனைகள் எழுகின்றன. சீனியர்கள் இந்த இளைஞர்களை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். இதனால், உதவிக்காக ஒரு லோக்கல் கேங்க்ஸ்டரின் உதவியை இந்த 3 இளைஞர்கள் நாடுகின்றனர். அந்த லோக்கல் கேங்க்ஸ்டர் தான் பகத் பாசில்.

வழக்கம்போல், தனது முக பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள பகத் பாசிலின் கேங்க்ஸ்டர் கதாபாத்திரம் பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளங்கள் எங்கிலும் உள்ளது. இந்த திரைப்படத்தில், கொஞ்சம் பழைய மாடல் டொயோட்டா காரை பகத் பாசிலின் கதாபாத்திரமான ரங்கா பயன்படுத்தி இருப்பார். கேங்க்ஸ்டர் ரங்கா தனது போக்குவரத்துக்காக இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பது டொயோட்டா குவாலிஸ் கார் ஆகும்.
டொயோட்டா குவாலிஸ் கார்களின் விற்பனை ஆனது இந்தியாவில் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2000ஆம் ஆண்டில் நுழைந்த ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் கார் குவாலிஸ் ஆகும். பிரபலமான கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் குவாலிஸ் கார்களை உற்பத்தி செய்து டொயோட்டா விற்பனை செய்தது.

இந்தோனிஷியா நாட்டில் விற்பனையில் இருந்த டொயோட்டா கிஜாங் காரை அப்படியே இந்தியாவில் குவாலிஸ் என்கிற பெயரில் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டொயோடடர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதாவது, 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் டொயோட்டா குவாலிஸ் எனலாம்.
இருப்பினும், நீண்ட காலத்திற்கு இந்த டொயோட்டா கார் விற்பனையில் இல்லை. 2005ஆம் ஆண்டில், அதாவது வெறும் 5 வருடங்களில் குவாலிஸ் காரின் விற்பனையை இந்தியாவில் டொயோட்டா நிறுத்திக் கொண்டது. இந்த 5 வருடங்களில் 1.4 லட்சத்திற்கும் அதிகமான குவாலிஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. அதாவது, மாதத்திற்கு சராசரியாக 1,500 குவாலிஸ் கார்கள் மக்களால் வாங்கப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2005ஆம் ஆண்டோடு குவாலிஸ் காரின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டதால், இப்போது இந்த டொயோட்டா காரை காண்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. கேங்க்ஸ்டர் ரங்கா கொஞ்சம் பழமைவாதி என்பதை காட்டுவதற்காக இவ்வாறான காரை அவர் பயன்படுத்துவது போன்று கதையை எழுதியுள்ளனர். குவாலிஸ் விற்பனையில் இருந்த சமயத்தில் டாடா சுமோ மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. இருப்பினும், சுமோவிற்கு பதிலாக ஆவேஷம் படத்தில் எதற்காக குவாலிஸ் காரை காட்டியுள்ளனர் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









