3 கோடி ரூபா காரை வாங்கன இவரு டிவில காமெடி பண்ணீட்டு இருந்தவரா! சினிமால சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட போறாரு!
திரைத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது சாதாரணமான ஒரு விஷயம்தான். ஏனெனில் திரைத்துறையை சேர்ந்த பலர், செல்வாக்கு மிக்க குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வந்து, திரைத்துறையில் சாதித்துள்ளனர். அவர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயம்தான். அப்படிப்பட்ட மிகப்பெரிய விஷயம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இந்த சம்பவம், கன்னட திரையுலகில் நிகழ்ந்துள்ளது.
கன்னட திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் கிருஷ்ணம் ப்ரணய சஹி (Krishnam Pranaya Sakhi). பிரபல கன்னட நடிகரான கணேஷ் (Ganesh) இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் காமெடி ஷோ செய்து கொண்டிருந்தவர் ஆவார்.

ஆனால் தற்போது கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோக்களில் ஒருவராக கணேஷ் திகழ்ந்து கொண்டுள்ளார். இத்தனைக்கும் பெரிய குடும்ப பின்னணி எதுவும் இல்லாமல் அவர் இதனை சாதித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் இவரை கன்னட சினிமாவின் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) என கூறலாம்.
இவரது நடிப்பில் வெளியான கிருஷ்ணம் ப்ரணய சஹி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கணேஷ் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ரேஞ்ச் ரோவர் ஹெச்எஸ்இ (Range Rover HSE) கார் ஆகும். மனைவி ஷில்பா (Shilpa) மற்றும் குழந்தைகளுடன் சென்று, அவர் காரை டெலிவரி எடுத்துள்ளார்.

நடிகர் கணேஷ் தனது புதிய ரேஞ்ச் ரோவர் ஹெச்எஸ்இ காரை டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. நடிகர் கணேஷ் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஹெச்எஸ்இ காரின் விலை 2.36 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே.
ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 2.95 கோடி ரூபாய் வரும். இந்த காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 346 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் என ரேஞ்ச் ரோவர் ஹெச்எஸ்இ காரில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார் ஆகும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 234 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு, ரேஞ்ச் ரோவர் ஹெச்எஸ்இ கார் மதிப்பு வாய்ந்த தயாரிப்புதான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: திரையுலகினர் மத்தியில் ரேஞ்ச் ரோவர் காருக்கு எப்போதுமே தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் ரேஞ்ச் ரோவர் கார் வைத்துள்ளனர். இந்த வரிசையில்தான் கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர் கணேஷ் தற்போது ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். வேகமாக வளர்ந்து வரும் இவர் வரும்காலங்களில் இன்னும் நிறைய கார்களை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








