திருமணமாகி அதற்குள் 10 வருஷம் ஆகிடுச்சா... பரிசாக வாங்கி கொடுத்த எலெக்ட்ரிக் காரின் நிறம் தான் இதில் ஹைலைட்டே!

மஹிந்திரா பிஇ6 (Mahindra BE6), கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றாகும். கடந்த சில மாதங்களாக, இந்த மாடர்ன் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் பல பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் இல்லங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது, நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் (Ganesh Venkatraman) தனது 10வது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு பிஇ6 எலெக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டெலிவிரி பெறும் தம்பதியரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. கணேஷ் வெங்கட்ராமன் ஒரு தமிழ் நடிகர், மாடல் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆவார். ஆனால், பிறந்தது மும்பையில் ஆகும். 2006ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்துவரும் இவர், முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியவர் ஆவார்.

actor ganesh venkatraman wife nisha

இதற்கிடையில் தமிழ் டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றிலும் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன், சமூக ஊடக தளங்களிலும் மிகவும் பிரபலமானவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.78 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவரது மனைவி நிஷா கணேஷ் (Nisha Ganesh) ஒரு நடிகை மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஆவார்.

இவருக்கு இன்னும் அதிகமாக இன்ஸ்டாகிராமில் 4.9 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இதனாலேயே, கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா டீலர்ஷிப்பில் புத்தம் புதிய பிஇ6 எலெக்ட்ரிக் கார் உடன் போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. "என்னைப் பொறுத்தவரை, உன்னை சந்தித்தது என் வாழ்க்கையின் சிறந்த நாள். இந்த பத்து வருடங்கள் மிக அற்புதமான பயணமாக அமைந்தது.

actor ganesh venkatraman wife nisha

நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு பயணத்தையும் கொண்டாட இந்த அழகான கார் ஒரு சிறிய பரிசு" என்று நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நிஷா கணேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இவர் வெளியிட்டுள்ள சில படங்களில், இந்த நட்சத்திர தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் இருப்பதைக் காண முடிகிறது.

டீலர்ஷிப் ஊழியர்களிடம் இருந்து அவர்கள் சாவியைப் பெறுவதையும் இந்த படங்களில் பார்க்க முடிகிறது. மஹிந்திரா பிஇ6 எலெக்ட்ரிக் கார் எட்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது மனைவிக்கு பரிசளித்து இருப்பது 'ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு' நிறத்திலான பிஇ6 கார் ஆகும். இவரது பதிவில் குறிப்பிடப்படாவிட்டாலும், இந்த பிஇ6 கார் ஆனது அதன் விலையுயர்ந்த பேக் 3 வேரியண்ட்டாக இருக்கலாம்.

actor ganesh venkatraman wife nisha

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.26.90 லட்சம் ஆகும். 11.2kW ஃபாஸ்ட் சார்ஜரைத் தேர்ந்தெடுத்தால், இதன் விலை ரூ.27.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உயரும். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. பலர் இந்த தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மஹிந்திரா பிஇ 6 அதன் கவர்ச்சிக்கரமான வடிவமைப்புடன் கவர்ந்திழுக்கிறது.

கூர்மையான பாடி லைன்கள், கவர்ச்சிகரமான விளக்குகள் மற்றும் அழகான வண்ணங்கள் ஆகியவை பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் ஆகும். இத்தகைய வடிவமைப்பு காரின் ஏரோடைனமிக்ஸ் மீது வலுவான கவனம் செலுத்துகிறது. முன்பக்க பொனெட் மூடியில் கூட ஹெட்லைட்டுகளுக்கு இடையில் ஒரு காற்று வழித்தடம் உள்ளது. இது மேம்பட்ட ஏரோ-செயல்திறனுக்காக காற்றை மூடி வழியாக பொனெட்டிற்கு உள்ளே செல்ல அனுமதிக்கிறது.

actor ganesh venkatraman wife nisha

பிஇ 6 காரின் உயர் ரக வேரியண்ட்களில் 19-இன்ச் சக்கரங்களும், குறைந்த ரக வேரியண்ட்களில் 18-இன்ச் சக்கரங்களும் பொருத்தப்படுகின்றன. காரின் உட்புற வடிவமைப்பு எதிர்கால தோற்றத்துடன் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. டாப்-ஸ்பெக் பிஇ 6 காரில் 12.3-இன்ச்சில் இரண்டு மிதக்கும் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷனுக்காக) வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது 10வது திருமண நாளை விலையுயர்ந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் உடன் கொண்டாட நினைத்திருப்பது அவரது இரசனையையும், குடும்பம் மீதான அவரது பாசத்தையும் காட்டுகிறது. இதற்காக இவர் மஹிந்திரா பிஇ 6 எலெக்ட்ரிக் காரை ஆரஞ்சு நிறத்தில் தேர்வு செய்திருப்பது, இந்த எஸ்யூவி காருக்கு மிகவும் அழகிய தோற்றத்தைக் கொடுக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 21, 2025, 15:59 [IST]
English summary
Actor ganesh venkatraman gifted mahindra be 6 electric car to his wife as anniversary gift
மேலும்... #celebrity cars #car gift #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X