அப்பா நினைத்தால் ஷோரூமையே விலைக்கு வாங்கும் அளவுக்கு பணம் இருக்கு! மகனுக்கு மஹிந்திரா கார் மீதுதான் ஆசை!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு, மக்களை வெகுவாக கவர்ந்த வாகனங்களுள் தார் ராக்ஸ் (Thar ROXX) முக்கியமானது என்றுதான் சொல்ல வேண்டும். 3-கதவுகளை கொண்ட தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக கடந்த 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்திய சுதந்திர தினத்தில் தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 3-கதவு தார் வாகனத்திற்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.
3-கதவு தார் வாகனத்தில் இருந்த ஒரே குறை என்னவென்றால், அதில் 3 கதவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டதால், வாகனத்திற்குள் நுழைவதும், வெளியேறுவதும் சற்று சிரமமாக இருப்பது ஆகும். அதனை புதிய தார் ராக்ஸ் வாகனத்தில் 5 கதவுகள் மூலம் மஹிந்திரா சரிச்செய்தது. கூடுதல் கதவுகளை பொருத்துவதற்காக தார் ராக்ஸ் வாகனத்தின் நீளமும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் எதிர்பார்த்ததை போல், தார் ராக்ஸ் வாகனத்தை மக்கள் பலரும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்கள் மற்றும் விவிஐபி-களையும் கூட தார் ராக்ஸ் கவர்ந்துள்ளது. தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கிய பிரபலங்கள் பலரை பற்றி இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பலமுறை பார்த்துள்ளோம்.
அந்த வரிசையில், தற்போது ஒரு நடிகர் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நடிகரின் பெயர், கோகுல் சுரேஷ் (Gokul Suresh) ஆகும். இந்த பெயரில் எந்த நடிகரையும் கேள்விப்பட்டது இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் கோலிவுட் நடிகர் கிடையாது. மோலிவுட் என அழைக்கப்படும் மலையாள சினிமா நடிகர் ஆவார்.

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி (Suresh Gopi)-ஐ உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சமீபத்தில்கூட நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கேரளாவின் ஒரேயொரு பாஜக எம்பி ஆக நாடாளுமன்றத்துக்கு சென்றுவரும் அனுபவமிக்க நடிகரான சுரேஷ் கோபியின் மகன் தான், இந்த நடிகர் கோகுல் சுரேஷ் ஆவார்.
கேரளாவின் கொல்லத்தில் பிறந்தவரான 31 வயதான கோகுல் சுரேஷ் மலையாள சினிமாவில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தில் ஓர் முக்கியமான கதாபாத்திரத்தில் கோகுல் சுரேஷ் நடித்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்ததாக 'சுமதி வலவு' என்கிற திரைப்படம் திரைக்குவர உள்ளது.
இதற்கிடையில்தான், புதியதாக பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை இவர் வாங்கியுள்ளார். நடிகர் கோகுல் சுரேஷ் வாங்கியிருப்பது பளிச்சிடும் வெள்ளை நிறத்திலான தார் ராக்ஸ் வாகனம் ஆகும். இதனை 'எவரெஸ்ட் வெள்ளை' என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், நெபுலா நீலம், ஸ்டீல்த் பிளாக், டீப் ஃபாரஸ்ட், பர்ண்ட் சியான்னா, பேட்டில்ஷிப் கிரே, டாங்கோ ரெட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

மார்க்கெட்டில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன. 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மஹிந்திரா தார் ராக்ஸ் தற்சமயம் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் சுரேஷ் கோபி போன்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகனாக இருந்துக் கொண்டு மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்குவது எல்லாம் நடிகர் கோகுல் சுரேஷுக்கு பெரிய விஷயமாகவே இருக்காது. போதாக்குறைக்கு, இவரும் சினிமாவில் பிரபலமாக ஆரம்பித்துள்ளார். வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ் வாகனத்தை வாங்க பெரும்பாலானோர் விரும்புவது இல்லை. ஆகையால் இந்த விஷயத்தில், ஒரு வித்தியாசமான முடிவை தான் நடிகர் கோகுல் சுரேஷ் எடுத்துள்ளார் என சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









