61 வயதில் பிஎம்டபிள்யூ காருக்கு ஓனர் ஆன பிரபல நடிகர்! 165க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் போலவா இருக்கிறார்?
பி.எம்.டபிள்யூ (BMW), ஜெர்மனியை சேர்ந்த உலகளவில் பிரபலமான லக்சரி கார் நிறுவனம். இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்துக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. அப்பர் மிடில்-கிளாஸ் மக்களாலும் வாங்கக்கூடிய வகையில் சில கார்களை விற்பனை செய்யும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களை செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் அவ்வப்போது வாங்கி குவிக்கின்றனர். இந்த வகையில் தற்போது பிரபலமான பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய கார் உடன் அவர் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
கோவிந்தா அருண் அஹுஜா (Govinda Arun Ahuja), பாலிவுட்டில் பிரபலமான குணச்சித்திர நடிகர். இந்தி மொழியில் 165க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து அனுபவமிக்க நடிகராக கோவிந்தா அருண் அஹுஜா விளங்குகிறார். 1980ஆம் காலக்கட்டத்தில் இருந்தே சினிமாவில் நடித்துவரும் இவருக்கு தற்போது 61 வயதாகிறது.

1986ஆம் ஆண்டில் கோவிந்தாவின் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமான 'லவ் 86' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து தள்ளினார். 1990ஆம் காலக்கட்டத்தில் திரைப்படங்களில் அதிகமாக நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். இருப்பினும், 2000ஆம் காலக்கட்டம் துவங்கிய பிறகு சில வருடங்களுக்கு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார் நடிகர் கோவிந்தா.
இந்த இடைவெளியில் கோவிந்தாவின் மார்க்கெட் சரிந்த போதிலும், இடைவெளிக்கு பின் இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றன. இருப்பினும், முன்பை போல கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்க துவங்கிய கோவிந்தா அருண் அஹுஜா, தற்போது புதியதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

நடிகர் கோவிந்தா தற்போது வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (5-Series) காரின் 530 எல்.ஐ எம் ஸ்போர்ட் (530Li M Sport) வேரியண்ட் ஆகும். இந்த பிராண்ட்-நியூ காரை மகனுடன் சேர்ந்து நடிகர் கோவிந்தா டெலிவிரி பெறுவதையும், அதனை கேக் வெட்டி கொண்டாடுவதையும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காண முடிகிறது. இதன் மூலமாக, நடிகர் கோவிந்தாவின் கார் கேரேஜ் மேலும் விரிவடைந்துள்ளது.
5-சீரிஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பிஎம்டபிள்யூவின் விலையுயர்ந்த செடான் ரக காராக விளங்குகிறது. 5-சீரிஸ் காரின் புதிய 8ஆம் தலைமுறை மாடலை இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகம் செய்தது. நீளமான வீல்பேஸ் (Wheelbase)-ஐ கொண்ட காராக விளங்கும் 5-சீரிஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.72.90 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

முந்தைய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்திருந்தாலும், புதிய 5-சீரிஸ் கார் ஆனது பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, 5-சீரிஸ் காரை வாங்குவோர் நடிகர் கோவிந்தாவை போல 530எல்.ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டை மட்டுமே பெற முடிகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களில் இந்தியாவில் பலர் புதிய 5-சீரிஸ் காரை வாங்கி உள்ளனர்.
குறிப்பாக, மார்க்கெட்டுக்கு புதியதாக வந்த இந்த காரை சினிமா பிரபலங்கள் பலரும் போட்டிப் போட்டு கொண்டு வாங்கி வருவதை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். தற்சமயம் விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜினின் இயக்க ஆற்றல்கள் காரின் பின் சக்கரங்களுக்கு செல்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.73 லட்சமாக இருப்பினும், ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.1 கோடி அளவிற்கு வந்துவிடும். இருப்பினும், இவ்வளவு விலை கொடுத்து காரை வாங்குவது எல்லாம் 165க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா அருண் அஹுஜாவுக்கு பெரிய விஷயமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









