ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

ஆயுள் அதிகரிக்க வேண்டும் என விரதம் இருந்த மனைவிக்கு, பிரபல நடிகர் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

வட இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று கர்வா சௌத் (Karwa Chauth). தங்களுடைய கணவரின் ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்த மங்களரமான நாளில் மனைவிகள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கம். தங்களுக்காக பிரார்த்தனை செய்யும் மனைவிகளுக்காக கணவர்கள் பரிசுகளை வழங்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

இதன்படி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோவிந்தா (Govinda), தனது மனைவி சுனிதா அஹூஜாவிற்கு (Sunita Ahuja) விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அவர் தனது மனைவிக்கு பரிசாக வழங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் (BMW 3 Series Gran Limousine) கார் ஆகும்.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

இந்த காரின் புகைப்படங்களை நடிகர் கோவிந்தா, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் கார் இந்திய சந்தையில் நடப்பாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்த பிரபலமான லக்ஸரி செடானின், லாங் வீல் பேஸ் வெர்ஷன் ஆகும்.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

அதாவது கேபினில் அதிக இடவசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பின் பகுதி பயணிகளுக்கு தாரளமான இடவசதி தற்போது கிடைக்கிறது. மேலும் வழக்கமான 3 சீரிஸ் காரை காட்டிலும், 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரின் சஸ்பென்ஸன் இன்னும் சௌகரியமாக 'ட்யூனிங்' செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைக்கும் என்பது உறுதி.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் இதற்கு முன் விற்பனையில் இருந்த 3 சீரிஸ் ஜிடி (GT - Gran Turismo) காருக்கு மாற்றாக, 3 சீரிஸ் ஜிஎல் (GL - Gran Limousine) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமான 3 சீரிஸ் காருடன் ஒப்பிடுகையில், 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரின் வீல்பேஸ் நீளம் 110 மிமீ அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரின் வீல்பேஸ் நீளம் 2,961 மிமீ ஆகும். இதேபோல் இந்த காரின் ஒட்டுமொத்த நீளமும் 110 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் நீளம் 4,819 மிமீ ஆகும். அத்துடன் வழக்கமான 3 சீரிஸ் காருடன் ஒப்பிடுகையில், 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரின் 28 மிமீ உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

அதே நேரத்தில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரில், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 10.25 இன்ச் திரை ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்னும் ஏராளமான வசதிகளையும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் கார் பெற்றுள்ளது.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

இதில், வயர்லெஸ் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர், மூன்று-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை மிகவும் முக்கியமானவை. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் கார் பெற்றுள்ளது.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் காரில், 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், ட்வின் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 254 பிஹெச்பி பவரையும், டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஹெச்பி பவரையும் உருவாக்க கூடியவை. இந்த 2 இன்ஜின்களுமே 400 என்எம் டார்க் திறனை வழங்க வல்லவை.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

மேலும் இந்த இன்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் கார், 52.50 லட்ச ரூபாய் முதல் 54.90 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆயுள் அதிகரிப்பதற்காக விரதம் இருந்த மனைவி... பதிலுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த நடிகர்... எவ்ளோனு தெரியுமா?

இவ்வளவு விலை உயர்ந்த காரைதான் நடிகர் கோவிந்தா தனது மனைவிக்கு பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். ஆனால் நடிகர் கோவிந்தாவின் வீட்டிற்கு வந்துள்ள முதல் விலை உயர்ந்த கார் இது கிடையாது. நடிகர் கோவிந்தாவின் கராஜில் மற்ற நடிகர்களை போலவே ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த கார்கள் நிறைய இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor govinda surprises wife with bmw 3 series gran limousine here is the reason why
Story first published: Friday, October 29, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X