பாத்து பாத்து வாங்கன காரை அப்பாக்கு பரிசா குடுத்த மகன்... இவரை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே... அட அவரா இது!
கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தில் கார் வாங்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை விட பெரிய சந்தோஷம் என்னவென்றால், நம் உழைப்பில் கிடைத்த பணத்தில் பெற்றோர்களுக்கு கார் வாங்கி கொடுப்பதுதான். இந்த சந்தோஷம் தற்போது ஒருவருக்கு கிடைத்துள்ளது.
நடிகர் ஹர்தீக் ஜோஷி (Actor Hardeek Joshi) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இவர் மராத்தி (Marathi) மொழி திரைப்படங்கள் (Movies) மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் (Television Series) நடித்து வருகிறார். இவர் தனது தந்தைக்கு பரிசாக வழங்கியிருப்பது மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் ஆகும்.

இது மிகவும் பிரபலமான எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 13.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆனால் ஹர்தீக் ஜோஷி தனது தந்தைக்கு பரிசாக வழங்கியிருப்பது என்ன வேரியண்ட்? என்பது உறுதியாக தெரியவில்லை. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஒன்றாகும். அதிகபட்சமாக 200 பிஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படும் மற்றொரு இன்ஜின் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆகும். இந்த இன்ஜின் 2 விதமான பவர் அவுட்புட் உடன் கிடைக்கிறது. ஒன்று 155 பிஹெச்பி. மற்றொன்று 185 பிஹெச்பி. வேரியண்ட்டை பொறுத்து, பவர் அவுட்புட் மாறுபடும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், 26.03 செமீ அளவில், 2 ஹெச்டி சூப்பர்ஸ்க்ரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகும். இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, அடாஸ் (ADAS) என பல்வேறு அதிநவீன வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி ஹெக்டர் (MG Hector), எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) போன்ற கார்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும். இது அதிநவீன வசதிகள் கொண்ட கார் என்பதுடன், பாதுகாப்பானதும் கூட.
ஆம், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) வாங்கி அசத்தியுள்ளது. எனவே பல்வேறு அதிநவீன வசதிகளுடன் ஒரு பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








